இலங்கை::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யுத்;தத்தின் பின்னர் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை நேரில் கண்டறிந்து கொள்ள இந்த விஜயம் வாய்ப்பாக அமையும் என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment