Saturday, June 29, 2013
இலங்கை::சுவிஸ் வங்கி ஒன்றில் புலிகள் வைப்பு செய்துள்ள ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு புலனாய்வு சேவைகளின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவர் ஒருவர் இது தொடர்பாக ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பினர் சேகரித்த நிதி மற்றும் சொத்துக்கள் இந்த சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளன.
இந்த வங்கியின் பெயர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சுவிஸ் புலனாய்வு அமைப்பின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக உயர்மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன. கொழும்பில் புலிகளுக்கு சொந்தமாக இருந்த 90 மில்லியன் ரூபா பெறுமதியான வங்கி கணக்குகள் இரண்டு ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment