Saturday, June 29, 2013

ஹெராயின்' என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில், இலங்கையை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவருக்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை!

Saturday, June 29, 2013
சென்னை::ஹெராயின்' என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில், இலங்கையை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவருக்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சாத்தூரில் இருந்து சென்னை, கோயம்பேடுக்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் சோதனை நடத்திய போது, ஒரு கிலோ, "ஹெராயின்' பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக, இலங்கையைச் சேர்ந்த பாக்கியநாதன் என்கிற நாதன், சாத்தூரை சேர்ந்த செல்வம் மீது, 2010ம் ஆண்டு, நவம்பரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை, போதை பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்கும், சிறப்பு கோர்ட் நீதிபதி இளங்கோ விசாரித்தார். இருவருக்கும், தலா, 10 ஆண்டு, சிறை தண்டனையும், நான்கு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.
 
 
 

No comments:

Post a Comment