Saturday, June 29, 2013
இலங்கை::அனைத்து சர்வதேச அரங்கிலும் இலங்கைக்குத் தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தன்சானியா ஜனாதிபதி ஜகாயா ரிஷோகிக்வெதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தன்சானியாவுக்கு விஜயம் மேற் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் தன்சானிய ஜனாதிபதிக்குமிடையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே தன்சானிய ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.அத்துடன் இரு நாடுகளுக்கு மிடையிலான பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவ தெனவும் இப்பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டுத் தலைவர்கள் மத்தியில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அத்துடன் சில ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு தன்சானியா மற்றும் சீசெல்ஸ் நாடுகளுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்சானிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அந்நாட்டுத் தலைவருடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பல மணித்தியாலங்கள் தொடர்ந்த இப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையா டப்பட்டுள்ளதுடன் பல்வேறு துறைகளின் மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், முதலீட்டுத் துறை, வர்த்தகச் செயற்பாடுகள், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இத்துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய முதலீட்டுச் சூழல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது தெளிவு படுத்தியுள்ளதுடன் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தன்சானிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.எதிர்வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடு களின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு தொடர்பிலும் இதன்போது கலந்துரை யாடப்பட்டுள்ளது. இதற்கான முன் ஆயத்தங்கள் தொட ர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்சானிய தலைவருக்கு விளக்கியுள்ளார்.இலங்கையில் நடைபெறவுள்ள மேற் படி மாநாட்டுக்கு தன்சானியா தமது பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அத்துடன் அனைத்து சர்வதேச விடயங்களிலும் இலங்கைக்குத் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நல்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.இந்நிகழ்வுகளில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, மக்கள் தொடர்பு மற்றும் பொது மக்கள் விவகாரம் தொடர்பான அமைச்சர் மேர்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்தன, லொஹான் ரத்வத்த, லக்ஷ்மன் வசந்த பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.தன்சானிய ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் தன்சானிய ஜனாதிபதி கிக்வெதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இராப்போசன விருந்தொன்றை வழங்கி கெளரவித்துள்ளார்.தன்சானியாவிற்கான விஜயத்தைய டுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீசெல்ஸ் நாட்டுக்கான விஜ யத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப் பிடத்தக்கது.

No comments:
Post a Comment