Saturday, July 23, 2011

அமெரிக்க வெளிவிவகார நடவடிக்கைகளுக்கான பிரேரணையால் நாட்டிற்கு பாதிப்பில்லை!

Saturday, July 23, 2011
அமெரிக்க வெளிவிவகார நடவடிக்கைகளுக்கான பிரேரணையால் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமெரி்க்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரம சூரிய தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில இடம்பெற்ற யுத்தத்தினபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் சமபவங்களுக்கான பொறுப்புடமை குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவால் இலங்கைக்கு பாரிய உதவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை எனவும் அது மிகவும் சாதகமானதொரு விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொறுப்புடமை கூற வேண்டிய சம்பவங்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போர் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு இடைக்கிடையே தெளிவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுவரை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 11 ஆயிரத்து 600 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளை அமைத்தல், வீதிகளை புனரமைத்தல் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்ப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்ளத்திற்கு அடிக்கடி தெளிவுபடுத்தப்படும் எனவும் அவற்றினை கருத்திற் கொண்டே மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் அமெரிக்கா தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊட்டியில் இல‌ங்கை ராணுவ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ராணுவ ப‌யி‌ற்‌‌சி ‌திடீரென ர‌த்து ‌-அனுராதபுரத்தில் மோதல் - ஒருவர் பலி!

Saturday, July 23, 2011
ஊட்டியில் இல‌ங்கை ராணுவ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ராணுவ ப‌யி‌ற்‌‌சி ‌திடீரென ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் இல‌‌ங்‌கை ராணுவ ‌வீர‌ர்க‌ள் 25 பேரு‌க்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. இதனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு அமை‌ப்பை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டனர். இதனால் போரா‌ட்‌ட‌ம் வலு‌த்ததா‌ல் இல‌ங்கை இராணுவ‌ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ப‌யி‌‌ற்‌சி இ‌ன்று ‌திடீரென ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அனுராதபுரத்தில் மோதல் - ஒருவர் பலி!
அனுராதபுரம், சாலியபுர, பானியன்கடவல பகுதியில் இன்று காலை இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் பானியன்கடவல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் என தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதாக பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் உட்பட 114 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸியில் கைது!

Saturday, July 23, 2011
இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த 02 படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த குழுவினர் தற்போது கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட குழுவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

நார்வே நாட்டில் கொடூரம் 80 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதி குண்டு வெடிப்பில் 7 பேர் சாவு!

Saturday, July 23, 2011
நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று அந்த கட்டிடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். அதில், 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது பிரதமர் ஜெனஸ் ஸ்டோல் டன்பெர்க் அலுவலகத்தில் இல்லை. அதனால் அவர் உயிர் தப்பினார். குண்டு வெடித்தபோது அந்த 20 மாடி அரசு கட்டிடம் இடிந்து நொறுங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறியது. கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி, ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. காயம் அடைந்த மக்கள் ரத்த காயத்துடன் ரோடுகளில் ஓடினர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ புறநகர் பகுதியில் உள்ள யுடோயா தீவில் பிரதமரின் ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாமில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் உடையில் ஒரு தீவிரவாதி அங்கு வந்தான். அவன் ஒரு கைதுப்பாக்கி, தானியங்கி துப்பாக்கி மற்றும் ஒரு சிறிய ரக துப்பாக்கி என 3 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தான். அவன் முகாமில் கலந்து கொண்ட வாலிபர்கள் மீது சரமாரியாக சுட்டான்.

அதில் இருந்து தப்பிக்க வாலிபர்கள் அங்குமிங்கும் ஓடினர். பலர் கடலுக்குள் குதித்தனர். ஆனால் அவர்களை விரட்டி விரட்டி ஆவேசத்துடன் சரமாரியாக சுட்டான். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இன்று காலை சாவு எண்ணிக்கை அதிகரித்தது. துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க ஓடியவர்களின் பிணங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பல உடல்கள் குண்டு காயத்துடன் தண்ணீரில் மிதந்தன. துப்பாக்கி சூட்டில் மட்டும் 80 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மேலும் ஏராள மானவர்கள் காயம் அடைந்துள்ளனர். போலீஸ் உடையில் வந்து இளைஞர்கள் முகாமில் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு ஆகிய 2 சம்பவங்களிலும் இவனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இளைஞர் முகாமிலும் பிரதமர் கலந்து கொள்வதாக இருந்தது. எனவே, அவரை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் குறித்து அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு ஜெனஸ் ஸ்டால் டன்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்!

Saturday, July 23, 2011
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேலைப் பளு காரணமாகவோ அல்லது வேறும் காரணிகளினாலோ ஜெயலலிதாவினால் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாவிட்டால் பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்துடன் பேசி பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் எனவும், அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பிரதிநிதிகள் மட்டுமன்றி இந்தியாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக வடக்கு நிலைமைகளை பார்வையிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைப்பதன் மூலம தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும், பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான அரசியல் சாசனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும அ;வர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்hளர்.

வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும் வடக்கில் மட்டும் இராணுவ முகாம்கள் காணப்படுவதாக தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் 2.9 கோடி உறுப்பினர் இந்தியாவில் இணையதள இணைப்பு 10 கோடி!

Saturday, July 23, 2011
சென்னை : இந்தியாவில் 100 மில்லியன் இணையதள இணைப்புகள் உள்ளன. பேஸ்புக் சமூக வலைதளத்தில் 2.9 கோடி பேர் உறுப்பினராக உள்ளனர் என கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீசீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் Ôசமூக வலைதளங்களின் தற்போதுள்ள நிலைÕ தொடர்பான சொற்பொழிவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கலந்துரையால் நடத்தினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக வளைதளத்தின் நிபுணரும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்ரீசீனிவாசன் பேசியதாவது: உலக நாடுகளில் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அவரவர்களின் பயன்பாடு களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சமூக நீதிக்கான தகவல்களும் முன்வைக்கப்படுகின்றன. மக்கள் அதிகமாக இடம் பெயருவதால், இதன் பயன்பாடுகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 100 மில்லியன் இணையதள இணைப்புகள் உள்ளன. பேஸ் புக், ஆர்குட், டியூட்டர் உட்பட மொத்தம் 16க்கும் மேற்பட்ட சமூக வலைதளங்கள் உள்ளன.

இவற்றில் பேஸ்புக்தான் முதலிடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் 750 மில்லியன் உறுப்பினர் இருக்கின்றனர். முதல் 10 இடங்களில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் 2.9 கோடி இந்தியர்கள் உறுப்பினராக உள்ளனர். 250 மில்லியன் பேர் தினந்தோறும் பயன்படுத்துகின்றனர். 250 மில்லியன் பேர் செல்போன் மூலம் உபயோகிக்கின்றனர். ஒரு நாளைக்கு 700 மில்லியன் மக்கள் 23 நிமிடங்களை இதற்காகவே செலவிடுகின்றனர்.

பேஸ்புக் வர்த்தக மதிப்பு 70 பில்லியன் டாலர். டியூட்டரில் 200 மில்லியன் உறுப்பினர்களும், லிங்டனில் 100 மில்லியன் உறுப்பினர்களும் உள்ளனர். பீஸ் பேஸ்புக் என்ற வலைதளத்தில் இஸ்ரேல்&பாலஸ்தீனம், இந்தியா&பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மக்கள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா&பாகிஸ்தான் மக்கள் ஒரு லட்சத்து 80851 பேர் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஸ்ரீசீனிவாசன் கூறினர்.

சிவகங்கை அகதிகள் முகாம்களில்,புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்!

Saturday, July 23, 2011
சிவகங்கை அகதிகள் முகாம்களில்,புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்!

சிவகங்கை அகதிகள் முகாம்களில், புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை உட்பட ஐந்து இடங்களில், அகதிகள் முகாம் உள்ளது. இங்கு, நூற்றுக்கணக்கான அகதிகள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களது நடவடிக்கைகளை, உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, கியூ பிரிவு போலீசாரும் கண்காணிக்கின்றனர். முகாம்களில் வசிப்போர் தவிர்த்து, புதிதாக ஒருவர் வந்தால், அவர் பற்றியும், எந்த நோக்கத்திற்காக வந்தார் என்பது போன்ற பல்வேறு விவரங்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து தப்பித்து வரும் புலிகள், தமிழகத்திற்குள் ஊடுருவி வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, ராமேஸ்வரம் வழியாக சிவகங்கைக்குள் அதிகளவில் வந்துள்ளதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அகதிகள் முகாம்களில் கண்காணிப்பினை, கியூ பிரிவு போலீசார் பலப்படுத்தியுள்ளனர். மத்திய அமைச்சர் அடிக்கடி வந்து செல்லும் மாவட்டமாக இருப்பதால், அரசும் தீவிர கண்காணிப்பினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""இலங்கை, கண்டியைச் சேர்ந்த ஒருவர், 2 ஆண்டிற்கு முன், புலிகள் தலைவர்களில் ஒருவரான கருணாகரனிடம் இருந்துள்ளார். அவர், ஆந்திராவில் இருந்து 60 அகதிகளை, போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளார். கேரளாவிலிருந்து ஆட்களைக் கடத்த முயற்சித்த அவரை, கொச்சி போலீசார் கைது செய்தனர். போலீசிடமிருந்து தப்பியவரை, அவரது மொபைல் "சிக்னலை' வைத்து, தேவகோட்டையில் போலீசார் கைது செய்தனர். மேலும், புலிகள் நடமாட்டம் இருக்கிறதா என, தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

தமிழர்கள் இன்றைய தேர்தலில் நல்ல முடிவெடுத்து பயனடைய வேண்டும்!

Saturday, July 23, 2011
எங்கள் நாட்டில் இன்று பாராளுமன்ற ஜனநாயக உரிமை தழைத் தோங்கி இருக்கின்றது. கடந்த சுமார் 40 ஆண்டு காலமாக, முதலில் ஜே.வி.பி.யினர் 1971 ஏப்ரலில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டத்தின் மூலம், அன்றைய பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண் டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எடுத்த முயற்சியை அடுத்து, அதனை ஒரு முன்மாதிரியாக வைத்து, எல்.ரி. ரி.ஈ.யினர் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக உரிமையை பறித்து விடுவதற்கு நடத்திய பயங்கரவாத யுத்தமும் இன்று வெற்றிகரமான முறையில், நாட்டுத் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது.

பாராளுமன்ற ஜனநாயக உரிமை அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டது என்று இன்று வெறுமனே கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. யினர், இந்தியாவின் அன்றைய பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜய வர்தன 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டவுடன், மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து மக்க ளுக்கு கொடுமை புரிந்து அரச உடமைகளை அழித்தும், அப்பாவி சிங்கள மக்களை மரணிக்கச் செய்தும் வந்த இருள் சூழ்ந்த கடந்த கால அனுபவங்கள் இன்றும் நம்நாட்டு மக்கள் மனதில் வேரூன்றி பதிந்திருக்கிறது.

இவ்விதம் எங்கள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்க எத்தனித்த முயற்சிகளை எதிர்த்து, மக்களை மீட் டெடுத்து அவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக உதய சூரியனைப் போன்று, தென்னிலங்கையிலிருந்து தோன்றிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதி பதியாக தெரிவாகிய தினம் முதல் நாடு எத்தனையோ சவால்களை யும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியிருந்தாலும், ஜனநாயகத்தி ற்கு தீங்கு ஏற்படாத வகையில், அவர் தன்னுடைய ஆளுமைத்தி றமை மூலம் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தார்.

அன்னாரது இந்த கடும் உழைப்பின் மூலம் நம் நாட்டு மக்கள் பயங்கர வாதிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டு, நாட்டின் சகல பகுதிகளிலும் நிம்மதி யான வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தத் தலைவரின் நற்பணிகளை நன்கு உணர்ந்திருந்த மக்கள் 2005 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஆரம்பித்து அதையடுத்து நடத்தப்பட்ட சகல தேர்தல்களிலும் அடுத்தடுத்து, முந்திய தேர்தலில் அரசாங்க கட்சிகள் பெற்ற வாக்குக¨ள் விட, கூடுதலான வாக்குக ளுடன் அரசாங்கக் கட்சியை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தொடர்ந்தும் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

எமது நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், குறிப்பாக வடபகுதி மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைப் பெற் றுக்கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

இதுவரை காலமும் வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தங்கள் விருப்பத்தி ற்கு அமைய, ஒரு கட்சியை அல்லது ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யும் உரிமையை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் பறித்து, அவர் களை அடிமைகளைப் போன்று சர்வாதிகார நாடுகளில் நடத்தப்ப டும் ஒரு கட்சித் தேர்தலைப் போன்று தங்கள் ஆணைப்படி தாங் கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும், வேறு சில சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் முற்றா கப் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டு தமிழ் மக் களின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை முற்றாக அபகரித்திருந் தனர்.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜனாதிபதி அவர்கள் இந்த மக்களை பயங்கரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்குப் பூரண ஜனநாயக சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தி ருக்கிறார்.

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றாலும், அது இந்நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரம் அடைந்த மாபெரும் வெற்றி என்றே, நாம் நினைக்கிறோம். இதுவரை காலமும் அடிமைகளைப் போன்று எல்.ரி.ரி.ஈ. எசமானர்களின் சொற்படி தங்கள் வாக்கை பிர யோகித்து வந்த வடபகுதி தமிழ் மக்கள் இன்றைய தேர்தலில் தாங் கள் விரும்பிய கட்சிக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ வாக்க ளிக்கும் பூரண சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஜனாதிபதி அவர்கள் இதுபற்றி ஒரு தடவை கருத்துத் தெரிவிக்கையில், வடபகுதி தமிழர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், அது ஜன நாயகத்திற்குக் கிடைக்கும் ஒரு வெற்றி என்று கூறியிருக்கிறார். எனவே, தங்களுக்கு இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தேசத் தலைவர் தொடர்ந்தும் தமது பிரதேசத்திற்கு தன்னுடைய நற்பணி களை நீங்கள் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ செய்யத்தான் போகிறார்.

ஆகவே, இன்றைய தேர்தலில் வடபகுதி தமிழ் மக்கள் எந்தக்கட்சி தங் களுக்கு நன்மையளிக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றும், எந்தக் கட்சி பேசிப் பேசி வாக்குறுதிகளை மாத்திரம் அளிப்பதுடன் கால த்தை கடத்திவிடும் என்று தீர்மானிப்பது அவசியமாகும்.

வடபகுதி தமிழ் மக்கள் இது விடயத்தில் தீர்க்கமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து, இன்றைய தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி, நன் மையடைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

சர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது!

Saturday, July 23, 2011
சர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு, போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட சர்வதேச குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட விவகாரங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைக் பரிமாறிக் கொள்வது தொடர்பிலும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை படத்தின் தலைப்பாக வைத்த விஷால் படத்தலைப்புக்கு வேட்டு!

Saturday, July 23, 2011
புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை படத்தின் தலைப்பாக வைத்த விஷால் படத்தலைப்புக்கு வேட்டு!

பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு பிரபாகரன் என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பெயர் சில காரணங்களுக்காக மாற்றப்பட்டிருக்கிறது. புலிகளின் தலைவரின் பெயரை படத்தின் தலைப்பாக வைக்க வேண்டாம் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியதால் இந்த பெயர் மாற்றம் எனத் தெரிகிறது. பிரபாகரன் எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படம் இனி வெடி என மாற்றப்பட்டுள்ளது. இப்படம் வெடி என்று பெயரிடப்பட்டதாலோ என்னவோ, தீபாவளி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இப்படத்தில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன் என்பதால் அதையயே தலைப்பாக வைத்திருந்தனர். இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மோகன் நடராஜன் தயாரிப்பில், பூபதி பாண்டியன் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் படத்திற்கு வெடி என்று பெயரிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விக்ரம் தனது வலைத்தளத்தில் முன்பே தகவல் வெளியிட்டிருந்தார். இது என்ன ஆகுமோ தெரியவில்லை.

அமெரிக்காவின் நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது-கெஹலிய ரம்புக்வெல்ல!

Saturday, July 23, 2011
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நெறிமுறைப் பற்றி பாரியளவில் பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்காவே ஜனநாயக விரோதமாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தடை செய்யப்படக் கூடும் அமெரிக்க காங்கிரஸ் சபையில் வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வழியில் இலங்கைக்கான உதவிகளை அமெரிக்கா தடை செய்தால், போதிக்கப்படும் ஜனநாயக நெறிமுறைகளை தாமே மீறியதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பில் ஒருதலைப்பட்சமாக தீர்மானம் எடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து உள்நாட்டு அமைப்புக்களில் மிகவும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பில் இனியும் பேச்சு;வார்த்தை அல்லது விவாதம் நடத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் துணை இராணுவக்குழுக்கள் இயங்கி வருவதாக சுமத்தப்படும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார். துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகள் ஆயுத போராட்டம் நடைபெற்ற பிரதேசத்தில் குறுகிய காலத்திற்குள் ஆயுத வன்முறைகளை இல்லாதொழிப்பது முடியாத காரியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே வடக்கில் இவ்வாறான ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகிக்க முடியாத தமிழ்க் (புலி)கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது சேறுபூச முயற்சி!

Saturday, July 23, 2011
சகிக்க முடியாத தமிழ்க் (புலி)கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது சேறுபூச முயற்சி!
அரசாங்கம் வடபகுதியில் முன்னெ டுத்துவரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களின் விளைவாகவே தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு மற்றும் எதிர்க் கட்சிகளின் அபேட்சகர்களும், முக்கியஸ்தர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைகின்றனர் என்று கமநல சேவைகள், வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஐ.ம.சு.மு. எவரையும் பலாத்காரப் படுத்தியோ, வசதி வாய்ப்புக்களையும், வாக்குறுதிகளையும் வழங்கியோ தம் பக்கம் சேர்த்துக்கொள்ள வில்லை. மாறாக சகலரும் சுயவிருப்பின் பேரிலேயே ஆளும் கட்சியுடன் இணைவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஓரிரு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வடபகுதியில் நடைபெறுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறப்போவதை சகித்துக் கொள்ள முடியாத தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு உள்ளிட்ட சில எதிரணிக் கட்சிகள் சில ஊடகங்களைப் பயன்படுத்தி ஐ.ம.சு.முன்னணி மற்றும் அரசு மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அரசாங்கம் வடபகுதியில் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எதனையும் செய்யவில்லை. மாறாக வெவ்வேறு விதமான அழுத்தங்களையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி த.தே.(புலி)கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அபேட்சகர்களையும், முக்கியஸ்தர்களையும் ஆளும் ஐ.ம.சு. முன்னணி தம்பக்கம் இழுத்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர்.

இக்கூற்றுக்களில் எதுவிதமான உண்மையுமே கிடையாது. அவை அப்பட்டமான பொய்கள்.

பயங்கரவாதம் காரணமாக அழிவுற்ற வட பகுதியைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்பவென பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக வடபகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கைகோர்த்துள்ளார்கள்.

நான் ஒரு மாதகாலத்திற்குள் மூன்று தடவைகள் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளேன். அங்கு 15 கமநல சேவை நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களுக்கு நேரில் விஜயம் செய்து விவசாய மக்களுடன் அளவளாவினேன். அம்மக்கள் எம்மிடம் நிலமிருக்கின்றன, தண்ணீரையும், பசளையையும் வழங்கும்படியே எம்மிடம் கோரினார்கள்.

இதற்கேற்ப பொருனாதார அபிவிருத்தி அமைச்சும், கமநல சேவைகள் அமைச்சும் இணைந்து வடபகுதியில் 69 குளங்களை தற்போது புனரமைக்கின்றன. இவ்வருட முடிவுக்குள் நூறு குளங்களையும் புனரமைத்து பூர்த்தி செய்யவுள்ளோம்.

அரசாங்கம் நெற்செய்கையாளர்களுக்கு ஐம்பது கிலோ எடைகொண்ட ஒரு மூடை பசளையை ரூபா 350.00 மானிய விலைக்கு வழங்கி வருகின்றது. இது வடபகுதி நெற் செய்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது. அத்தோடு திராட்சை, பப்பாசி, வாழை, உள்ளிட்ட மரக்கறி செய்கையாளர்களுக்கும் பழச் செய்கையாளர்களுக்கும் பசளை மானிய விலையில் வழங்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டில் இப்போது மலையகப் பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் கரட், பீட்ரூட் மற்றும் லீஸ் போன்ற மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன. இவர்களுக்கும் பசளை மானிய விலையில் வழங்கப்படுகின்றது. பசளையை மானிய விலையில் எந்த இடத்திலும் கொள்வனவு செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கென விசேட அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. அந்த அட்டைக்கு எந்த இடத்திலும் பசளையைப் பெற்றுக்கொள்ள முடியும். யாழ். குடாநாட்டிலுள்ள சகல கமநல நிலையங்களிலும் இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுற்றதும் அவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஏ-9 நெடுஞ்சாலையை காப்பட் முறையில் செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இப்பணி பூர்த்தி செய்யப்படும். ஏ-39 நெடுஞ்சாலை பூநகரி, மன்னார், புத்தளம் ஊடாக ஐந்து மணித்தியாலங்களுக்குள் கொழும்பைச் சென்றடையக் கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

வடபகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதைப் பிரதான நோக்காகக் கொண்டு தான் மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதிக்கான ரயில் சேவையை மீண்டும் துரிதகதியில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது ரயில் தண்டவாளப் பாதை அமைப்புப் பணிகள் ஓமந்தைக்கு அப்பாலும் சென்றுள்ளது. இத்தண்டவாளப் பாதை ரயில்கள் வேகமாகப் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. காங்கேசன் துறை துறைமுகம் வடபகுதியில் பாரிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. வடபகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின் வசதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதியிலுள்ள சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. உள் வீதிகளும், பாடசாலைக் கட்டடங்களும் புனரமைத்து மேம்படுத்தப்படுகின்றன. சகல அரச கட்டடங்களும் புனரமைத்து நவீனப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு வடபகுதியில் இடம்பெறுகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத த.தே.(புலி)கூட்டமைப்பும், ஏனைய சில எதிரணி கட்சிகளுமே ஐ.ம.சு.மு. மீதும் அரசு மீதும் சேறுபூசுகின்றன. இராணுவத்தையும், பொலிஸாரையும் இதற்குள் இழுத்து விடுகின்றனர்.

அ. அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ் தலைவர்களைப் படுகொலை செய்ததும், வடபகுதி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சீரழித்ததும் தேர்தல் ஏற்பாடுகளை குழப்பியடித்ததும் புலிகள் தான். மாணவர்களை பலவந்தமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு சயனைட் வில்லைகளை வழங்கியதும் புலிகள்தான். இதனால் வடபகுதியின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சி கண்டது. இலங்கைக்கு அதிக புத்திஜீவிகளை வழங்கிய பிரதேசங்களில் யாழ். குடாநாடும் ஒன்றாகும். அந்த நிலைமையைச் சீரழித்தவர்களும் புலிகள்தான்.

ஆகவேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதியின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்து புத்திஜீவிகளை உருவாக்கும் பிரதேசமாக மீண்டும் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். வடபகுதியில் அச்சம், பீதியில்லாத ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்களை சுதந்திரமாக நடத்தக் கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு ஆயுதம் ஏற்தியவர்கள் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளுடனும் இளைஞர்கள் இணைந்துள்ளார்கள். தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றார்கள். வடபகுதியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

Friday, July 22, 2011

குட் பை' அட்லாண்டிஸ்!

Friday, July 22, 2011
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. மனித ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம், உயிரியல், பிசிக்கல் சயின்ஸ், வானவியல், வானிலை ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக இம்மையம் உருவாக்கப்ட்டது. 1998ல் துவங்கிய இதன் கட்டுமானப்பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையம் 2020ம் ஆண்டுவரை செயல்படும்.

நாசா'வின் பங்களிப்பு : விண்வெளி மையம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள், பூமியில் இருந்து விண்கலம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. இப்பணியில் அமெரிக்காவின் "நாசா' விண்வெளி மையம் முக்கிய பங்காற்றியது. இம்மையத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு, "நாசா' பல விண்கலங்களை அனுப்பியது. ஒவ்வொரு முறையும் விண்கலத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கடைசி விண்கலமான அட்லாண்டிஸ், நேற்றுடன் பயணத்தை முடித்துக்கொண்டது. இதில் வழக்கமான ஆறு பேருக்கு பதிலாக, நான்கு பேர் மட்டுமே சென்றனர். அட்லாண்டிஸ் தரையிறங்கியøத் தொடர்ந்து (1981 ஏப்., 12 - 2011 ஜூலை 21), அமெரிக்காவின் 30 ஆண்டுகால விண்வெளிப்பயணம் முடிவுக்கு வந்தது. இதன்பின் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்புவதில்லை என்று "நாசா' முடிவு செய்துள்ளது.

நாசா இதுவரை கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் என்டர் ஆகிய விண்கலங்கள் மூலம் 135 விமானங்களை விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஆன மொத்த பயண தூரம் 53,71,14,016 மைல். 3 ஆயிரத்து 35 விண்வெளி வீரர்கள் சென்று வந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக கொலம்பியா மற்றும் சேலஞ்சர் விண்கலங்கள் வெடித்துச் சிதறின. இந்திய விண்வெளி வீராங்கணை கல்பணா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் இறந்தனர்.

எப்போது துவங்கியது: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போர் காலத்தின் போது, 1971ம் ஆண்டு முதன்முதலாக ரஷ்யா விண்வெளியில் "சால்யூட்' மற்றும் "மிர்' என்ற இரண்டு விண்வெளி மையத்தை தொடங்கியது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் "நாசா' 1980ம் ஆண்டு விண்வெளியில், "ப்ரீடம்' என்ற விண்வெளி மையத்தை தொடங்கியது. முந்தைய விண்வெளி மைய திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து "மிர்' க்கு பதிலாக "மிர்-2' எனும் புதிய விண்வெளி மையத்தை 1990ல் ரஷ்யா தொடங்க திட்டமிட்டது. செலவு அதிகமானதால் இதுவும் தோல்வியில் முடிவடைந்தது.

ஆனால் அமெரிக்காவின் "ப்ரீடம்' விண்வெளி மையம் ஓரளவுக்கு செயல்பட்டது. இதற்கு அதிக செலவானதால் அமெரிக்கா தலைமையில் ரஷ்யா, ஐரோப்பியா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளி மையம் அமைக்க திட்டமிட்டது. 1998ல் இதன் பணிகள் தொடங்கப்பட்டன. 2003ல் முடிப்பதற்கு திட்டமிடப்பட்ட பணிகள், 2011ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு தேவையான பொருட்கள் ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டு விட்டதால், அட்லாண்டிஸ் உடன், அமெரிக்காவின் விண்வெளி முடிவுக்கு வந்தது.

மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமானவரி சோதனை!.

Friday, July 22, 2011
திருவனந்தபுரம் :சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரில் பிரபல நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பளதாரர்கள் மற்றும் வியாபாரிகள் (தணிக்கைக்கு உட்படாத கணக்கு) ஆகியோர் 2010-11ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்களை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை கெடு விதித்துள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிரபல தொழில் அதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களது வருமானத்துக்கு முறையாக வரி செலுத்துகிறார்களா என்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பது வழக்கம்.

வருமானவரி கணக்கு காட்டியவர்கள், வரி ஏய்ப்பு செய்வதாக சந்தேகம் எழுந்தால் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்துவர். இந்நிலையில், கேரள சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். இவர்கள் இருவருக்கும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், சென்னையில் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து இன்று காலை முதல் இந்த இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் சுமார் 100 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை பிஷப் கார்டன் தோட்டத்தில் உள்ள நடிகர் மம்மூட்டி வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் பற்றி இன்று மாலை தகவல் வெளியாகும் என தெரிகிறது. முன்னணி நடிகர்கள் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்படுவது, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கைரை தனுஷ்கோடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

Friday, July 22, 2011
சட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கைரை தனுஷ்கோடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

சட்டவிரோதமான முறையில் இந்தியான சென்ற இலங்கையர் ஒருவரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரையோரப் பகுதியான தனுஷ்கோடி பிரதேசத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ இன்றி குறித்த நபர் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளார். அதிக வேக படகு மூலம் குறித்த நபர் இலங்கையிலிருந்து, தமிழ்நாடு சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது தமிழக காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர் க்யூ பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும் தாம் இந்தியாவிற்கு பல தடவைகள் இவ்வாறு பயணம் செய்துள்ளதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு பின்புற வீதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

Friday, July 22, 2011
யாழ் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு பின்புற வீதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

குருநகரைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான சி.ஜேசுதாஸ் (வயது68) என்ற முதியவர் கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று காலை நல்லூர் கைலாயப் பிள்ளையார் ஆலயத்திற்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த முதியவர் நேற்று மாலை மதுச்சாலையொன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் இவர் வீடு திரும்பாத நிலையில் இவரது குடும்பத்தினர் இவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இவரது சடலம் நேற்றுக்காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சடலத்தை யாழ் மாவட்ட நீதவான் ஆனந்தராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

வடமாகாண மக்கள் கடந்த காலங்களைவிடவூம் இம்முறை தேர்தல் குறித்து மிக ஆர்வமாக உள்ளார்கள்-கண்காணிப்பாளர்கள் கருத்து!

Friday, July 22, 2011
வடமாகாண மக்கள் கடந்த காலங்களைவிடவூம் இம்முறை தேர்தல் குறித்து மிக ஆர்வமாக உள்ளார்கள் என்று தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரஸங்க ஹரிச்சந்திர நேற்றுத் தெரிவித்தார்.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடபகுதியில் நடை பெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். அச்சம்- பீதியற்ற சு+ழலில் இத்தேர்தல் நடைபெறுவதன் பயனாகவே வடமக்கள் அதிக ஆர்வமாக இருப்பதாகவூம் அவர் கூறினார்.

65 உள்ளுhராட்சி சபைகளுக்குமான தேர்தலை கண்காணிக்கும் பணியில் 250 பேரை ஈடுபடுத்துவதற்கு தமது நிலையம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

நாளை 23ஆம் திகதி நடைபெறும் உள்ளுhராட்சி சபைகளு க்கான தேர்தல் குறித்து ஊடகவிய லாளர்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக செய்தியாளர் மாநாடொன்றை தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடாத்தியது. இச்செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கை யில்- 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்குமாகாணசபைத் தேர்தல் முதல் நாம் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறௌம். ஒவ்வொரு தேர்தல் கண்காணிப்பு பணி முடிவூற்றதும் அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையாளருக்கு கையளிக்கின்றௌம்.

இத்தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் வடமாகாணத்தில் 5 நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தவூள்ளோம். நாம் தேர்தல் கண்காணிப்பு பணியில் வைத்தியர்கள்- சட்டத்தரணிகள்- ஆசிரியர்கள் என மக்களின் அங்கீகாரம் பெற்றவர்களையே ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் வடபகுதியில் உள்ள காவலரண்களில் பாதுகாப்பு படையினரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இப்போது காவலரண்ங்களில் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலை நீதியாகவூம்இ நேர்மையாகவூம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது என்றார்

அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உதவி இன்ஸ்பெக்டர் கைது!:-நகை கொள்ளையர்கள் கைது!

Friday, July 22, 2011
அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டதாக வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜயந்த கமகே குறிப்பிட்டார்.

கைதான பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொச்சிக்கடை பகுதியில் நகை கொள்ளையர்கள் கைது!
மோட்டார் சைக்கிள் மூலம் பெண்களின் கைப்பை மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் செல்லும் கும்பல் ஒன்றின் இரண்டு சந்தேகநபர்களை நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

பேலியகொடை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இத்தகைய 31 சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றுள் ஒன்பது சம்பவங்கள் தொடர்பில் சுமார் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தங்கொடுவ, மாரவில, கொஸ்வத்தை, வெண்ணப்புவ மற்றும் கொடதெனியாவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தங்க நகைக்கொள்கை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவரைத் தேடி பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேல் மாகாணத்தின் வடபகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணாயக்காரவின் பணிப்புரையின் பேரில் பேலியகொடை விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உபுல் சமரசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

150 கி.மீ. சென்று தாக்கும் பிரகார் ஏவுகணை சோதனை வெற்றி!

Friday, July 22, 2011
சண்டிப்பூர் : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரகார் ஏவுகணை நேற்று ஒரிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரகார் ஏவுகணை முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை. இது 150 கி.மீ. சுற்றளவுக்கு சென்று எதிரிகளை தாக்கும் சக்தி படைத்தது. இந்த ஏவுகணை ஒரிசாவில் சண்டிப்பூர் கடற்கரையோரம் நேற்று காலை 8.20 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இது பற்றி, ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ரவி குப்தா கூறியதாவது: பிரகார் ஏவுகணை 7.3 மீட்டர் நீளம் கொண்டது. இது 200 கிலோ வெடிபொருளுடன் 35 கி.மீ. உயரத்திற்கு பறந்து, 150 கி.மீ. தூர இலக்கில் சென்று தாக்கக் கூடியது. ஒரே நேரத்தில் 6 ஏவுகணைகளை வெவ்வேறு திசைகளில் ஏவலாம். 4 நிமிடம், 10 வினாடிகளில் இலக்கை தாக்கி விடும்.

ஏற்கனவே 40 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் பினாகா, 250 முதல் 350 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் பிருத்வி ஏவுகணைகளை இந்தியா தயாரித்துள்ளது. இவற்றுக்கு இடையே இந்த புதிய ஏவுகணை 150 கி.மீ. தூர இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது, கடலில் கடற்படை கப்பல் நிறுத்தப்பட்டு அதிலிருந்தும், ரேடார் மூலமாகவும் ஏவுகணை செயல்பாடு கண்காணிக்கப்பட்டது.

இவ்வாறு ரவி குப்தா தெரிவித்தார். ஏவுகணை சோதனையை ராணுவ ஆராய்ச்சி நிறுவன தலைவர் வி.கே.சரஸ்வத் உள்பட விஞ்ஞானிகள் பார்வையிட்டனர். சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பாராட்டு தெரிவித்தார்.

வாக்கு பெட்டிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Friday, July 22, 2011
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறவுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் இன்று முற்பகல் அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தத்தமது
நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பீ.சுமனசிறி கூறினார்.

இரண்டாயிரத்து 226 நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு இடம்பெறவுள்ளதுடன் இதற்காக 22 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட
உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக 27 ஆயிரத்துக்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் விபத்திலிருந்து தப்பியது!

Friday, July 22, 2011
டெல்லியிலிருந்து கௌஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் விபத்திலிருந்து நூழிலையில் தப்பியது. ஜெட் ஏர்வேஸ் விமானமும் மற்றொரு விமானமும் பாட்னா எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோத இருந்த வேளையில் கடைசி நிமிடத்தில் இரு விமானங்களும் விபத்திலிருந்து தப்பின.

நேற்று காலை 10.15 மணிக்கு 136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் டெல்லியிலிருந்து கிளம்பியது. 11.35 மணியளவில் பிகார் தலைநகர் பாட்னா மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த விமானம் பல மீட்டர் தூரம் கீழே இறங்கியது. இதனால் பயணிகள் அலறிப்போனார்கள். இதையடுத்து இன்டர்காமில் பேசிய பைலட், எதிரே மிக அருகே ஒரு போயிங்- 747
சர்வதேச விமானம் வந்ததால், விமானத்தின் உயரத்தை உடனடியாக 1,000 அடி குறைக்குமாறு தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து உத்தரவு
வந்ததால் தான் விமானத்தை 1000அடி கீழே இறக்கியதாக கூறினார். இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரொயின் கடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது!

Friday, July 22, 2011
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரொயின் கடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது!


பஹ்ரேனிலிருந்து ரூ.20 லட்சம் பெறுமதியான 284 கிராம் ஹெரொயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நபர் ஒருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவர் 58 வயதுடைய பாகிஸ்தானிய பிரஜை எனவும், பாகிஸ்தான் ஹோட்டல் ஒன்றில் உதவி முகாமையாளராக கடமையாற்றியவர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரனைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Friday, July 22, 2011
கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் எதிர்வரும் 2011, நவம்பர் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள அறிக்கைக்கான அனைத்து ஆதரங்களையும் திரட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

ஆணைக்குழு, பொதுமக்களிடம் இருந்து ஆதாரங்களை திரட்டும் பணிகளை தற்போது நிறுத்தியுள்ளதாகவும், அறிக்கையை தயாரிப்பதற்கு போதுமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, எதிர்வரும் நவம்பர் மாதம் பரிந்துரையுடன் கூடிய இறுதி அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவால் நியமிக்கப்பட்ட இவ் ஆணைக்குழுவானது, 2002 பெப்ரவரி 21 முதல் 2009 மே 19 வரை இடம்பெற்ற நிகழ்வுகளில் எவரிடம் இருந்தாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச் சம்பவங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அனுவங்களை சேகரி்க்கவென நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த வர்த்தக நகராக மாறிவரும் துபை!

Friday, July 22, 2011
உலகின் மிகச் சிறந்த வர்த்தக நகரங்களுள் ஒன்றாக துபை மாறி வருகிறது.


உலகின் தலைசிறந்த 10 வர்த்தக நகரங்களுள் 9வது இடத்தில் துபை உள்ளது. சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள 56 சதவீத நிறுவனங்கள் துபையில் செயல்படுகின்றன என்று சிபி ரிச்சர்ட் எல்லிஸ் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் வர்த்தக நகரங்கள் குறித்த ஆய்வை ரிச்சர்ட் எல்லிஸ் மேற்கொண்டது. சர்வதேச அளவில் அலுவலகம் அமைத்து செயல்படும் 280 முன்னணி நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவையனைத்தும் 101 நாடுகளில் 232 நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

68.2 சதவீத வர்த்தக நிறுவனங்களின் முதலாவது தேர்வு ஹாங்காங். இதற்கு அடுத்தபடியாக 67.5 சதவீதம் பேரின் தேர்வு சிங்கப்பூர். டோக்கியோவுக்கு 63..9%, லண்டன் 63.2%, ஷாங்காய் 61.4 சதவீத வர்த்தக நிறுவனங்களின் தேர்வாக உள்ளது.

தொழில்துறை உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் துபை 7 வது இடத்தில் உள்ளது. ஐரோப்பாவின் வாயிலாக இப்போது துபை விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் நடவடிக்கையில் துபை மாறி வருகிறது. மேலும் அரசு அளிக்கும் வரிச் சலுகைகளும் சர்வதேச நிறுவனங்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹிலரி கிளின்ரனின் கருத்தையோ நாமும் வெளிப்படுத்துகின்றோம்-ஐ.தே.க!

Friday, July 22, 2011
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களையே ஐக்கிய தேசியக் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசியப் பிரச்சினை மற்றும் இடம்பெயர் மக்கள் விவகாரம் தொடர்பில் புத்தாக்க கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஹிலரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். சர்வதேச விவகாரங்களை அரசாங்கம் தந்திரோபாயமாக அணுக வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடக்குமுறை மற்றும் ஆவேசத்தினால் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி!.

Friday, July 22, 2011
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள, வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம் அருகே ராணுவ பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ளது.

இக்கல்லூரியில், இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், இலங்கை, ஜப்பான், சீனா என பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், அவ்வப்போது வந்து சுழற்சி முறையில் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த, 25 முக்கிய ராணுவ அதிகாரிகள் 21.07.2011 அன்று குன்னூர் வெலிங்டன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன நிகழ்ச்சி என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட போலீசார் "மப்டி'யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஓட்டல் நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

குன்னூர் வந்துள்ள இலங்கையைச் சேர்ந்த, 25 முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஹிலரி கிளின்ரனின் சென்னை விஜயம் எதிர்பார்த்தளவு பாதக விளைவுகளை ஏற்படுத்தவில்லை-இலங்கை அரசாங்கம்!

Friday, July 22, 2011
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனின் சென்னை விஜயம் எதிர்பார்த்தளவு பாதக விளைவுகளை ஏற்படுத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஹிலரி கிளின்ரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் பின்னர் கடுமையான அறிக்கைகளை வெளியிடுவார் என எதிர்பார்த்ததாக வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சந்திப்பின் பின்னர் கடுமையான அறிக்கைகள் எதனையும் ஹிலரி வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பார்த்தளவிற்கு கடுமையான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்தின் தலைமைத்துவப் பொறுப்பினை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை அமெரிக்கா விரும்புவதாகவும், இதனால் இலங்கை தொடர்பில் இந்தியாவிடம் கடுமையான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பினை புரிந்து கொண்டு அமெரிக்கா செயற்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார். கிளின்ரனின் சென்னை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ கருத்துக்கள் எதனையும் வெளியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியரை கொன்றவருக்கு மரண தண்டனை: விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டான்!

Friday, July 22, 2011
இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க வாலிபருக்கு அந்நாட்டு கோர்ட்டு விதித்த மரண தண்டனை நேற்று நிறை வேற்றப்பட்டது.இந்தியரான வாசுதேவ் பட்டேல் (45) என்பவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார்.

இந்த நிறுவனம் அரேபியாவில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது. அதே நிறுவனத்தில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வந்தனர்.

2001-ம் ஆண்டு, அந்த நிறுவனத்துக்குள், “மர்ம” மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்தான். வெறித்தனமாக அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் வாசுதேவ் பட்டேல், பாகிஸ்தானைச் சேர்ந்த வாக்கர் ஹசன் உயிர் இழந்தனர்.

வங்காள தேசத்தைச் சேர்ந்த ரியாஸ் டிய்யான் குண்டு காயத்துடன் தப்பினார். இவர்களை துப்பாக்கியால் சுட்டவனை ஹீஸ்டன் போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் மார்க்ஸ்ட் ரோமேன் (40). இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்கு பழி வாங்கவே, அரேபியருக்கு சொந்தமான கடை ஊழியர்களை சுட்டதாக அவன் வாக்கு மூலம் அளித்தான்.

டெக்சாஸ் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் மார்க் ஸ்ட்ரோ மேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவனுக்கு நேற்று டெக்சாஸ் ஜெயிலில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. விஷ ஊசிபோட்டு கொல்லப்பட்டான்.

இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளை ரத்து செய்வது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக, அமெரிக்க காங்கிரஸ் குழு வாக்களித்துள்ளது!

Friday, July 22, 2011
இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளை ரத்து செய்வது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக, அமெரிக்க காங்கிரஸ் குழு வாக்களித்துள்ளது.

இலங்கையில், யுத்தத்தின் பின்னர் போதிய மீளமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்பதற்காக இந்த பிரேரனை முன்வைக்கப்பட்டது.

வாய்மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளை ரத்து செய்ய அமெரிக்க வெளியுறவு குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், மனிதாபிமான ரீதியான உதவிகள், கண்ணி வெடி அகற்றல், ஜனநாயகம் மற்றும் சுமூக நிலையை ஏற்படுத்துவது தொடர்பிலான உதவிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதி ஹொவார்ட் பெர்மன் தலைமையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள நிதியாண்டில் இருந்து அமுலாகவிருப்பதாக ஏ.எப்.பி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எமது செய்திசேவை இலங்கை வெளியுறவு அமைச்சை வினவியது

அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், அமரிக்க காங்கிரஸினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த தீhமானம் தொடர்பில் செய்திகள் மூலமே தெரிந்து கொள்ளமுடிந்தது என்று தெரிவித்தார்

இந்தநிலையில் இது தொடர்பில் உண்மை நிலையை அறிய வெளியுறவு அமைச்சு அமரிக்காவில் உள்ள இலங்கையின் தூதரகத்தை தொடர்புகொண்டிருப்பதாகவும அவர் கூறினார்

கனடாவில் வாழும் யுத்தக் குற்றவாளிகளின் பட்டியலில் இரண்டு இலங்கையர்கள்!

Friday, July 22, 2011
கனடாவில் வாழும் யுத்தக் குற்றல் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பட்டியலில் இரண்டு இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜெரோம் பெர்னாண்டோ(Jerome Fernando) மற்றும் குலதுங்க இளந்தாரிதேவகே (Kulatunga Illandaridevage) ஆகிய இலங்கையர்கள் யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கனடாவில் வாழ சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அந்நாட்டு எல்லை முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

யுத்தக் குற்றவாளிகள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 பேர் பற்றிய தகவல்களை கனடா வெளியிட்டுள்ளது.

இந்த நபர்களை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட இணையதளமொன்றை கனேடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்களே அதிகளவில் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல்: தங்கு தளமாகும் தீவுகள் : புலனாய்வு துறை விசாரணை!

Friday, July 22, 2011
ராமநாதபுரம் : இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தல் மீண்டும் துவங்கி உள்ளது. மன்னார் வளைகுடா தீவுகளை, கடத்தல்காரர்கள் தங்கு தளமாக பயன்படுத்துகின்றனரா என புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின், புலி அமைப்பினர் இல்லாததால் கடத்தல் முற்றிலும் நின்றுவிட்டது என பாதுகாப்புப் பிரிவினர் அரசுக்கு அறிக்கை அனுப்பினர். தற்போது, இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் மீண்டும் துவங்கி உள்ளது.

இதற்காக புதிய ஏஜன்ட்டுகள் உருவாகி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி கிராமங்களில் தங்கியுள்ளனர். கடத்தல் பொருட்களை படகு மூலம் தீவுகளில் சேமித்து, இலங்கையிலிருந்து சிக்னல் கிடைத்தவுடன் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம், வாலிநோக்கம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த, 36 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். அதே தினம், ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் இலங்கையிலிருந்து மர்ம படகு வந்து ஒருவரை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுள்ளது. கஞ்சா கைப்பற்றியுள்ள நிலையில், மர்ம படகு வந்து திரும்பியுள்ளதால், தீவு வழியாக கடத்தல் பொருள் பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தில் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

காலணித்துவ நாடுகளின் சதித் திட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும்-பசில் ராஜபக்ஷ!

Friday, July 22, 2011
காலனித்துவ நாடுகளின் சதித் திட்டங்களை புரிந்து கொள்ள வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பென்தர எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய நாடொன்று அபிவிருத்தி அடைவதனை காலனித்துவ நாடுகள் ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒர் வழியில் சிறிய நாட்டுக்குள் புகுந்து அபிவிருத்தியை சீர் குலைக்க காலனித்துவ நாடுகள் முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியட்நாம் நாடு இந்த துர்ப்பாக்கிய நிலைமையை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலும் இதே நிலைமை ஏற்பட்டதாகவும், லிபியா இந்தத் சதித் திட்டத்தினை தற்போது எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இதனை புதிதாக நோக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சதித் திட்டங்களுக்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு: முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை தூதர் உறுதி!

Friday, July 22, 2011
சென்னை: "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்' என்று, இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றுவதாக, இலங்கை தூதரும் உறுதியளித்தார். சென்னை வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பேசினார். இதையடுத்து, டில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, துணை தூதரகத்தின் உயரதிகாரி அமீத் அஜ்வாத் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் நேற்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதாவது: பாக் ஜலசந்தியில், மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது, மிகவும் கவலை அளிக்கிறது. அதுபோன்ற சம்பவங்கள், இனி நடக்காமல் இருக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில், மூன்று முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் சென்று மறுவாழ்வு பெறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறை பிடிக்கப்படுவது முற்றிலுமாக தடுத்தல், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவாக முழு மறுவாழ்வு பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இந்த சந்திப்பு குறித்து, இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் நிருபர்களிடம் கூறும்போது, ""தமிழக மீனவர் பிரச்னை மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆகிய இந்த இரண்டு முக்கிய பிரச்னைகளை தீர்த்து, நல்ல நண்பர்களாக இருப்பதற்கு இதுவே நல்ல நேரம். இப்பிரச்னைகளை இலங்கை தீர்க்கும் என உறுதியளித்தோம்,'' என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுப்பையா ஐ.ம.சு.மு வில் இணைந்துகொண்டார்
:-ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சிதம்பரப்பிள்ளை விஜயகுமார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டார்!

Friday, July 22, 2011
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரான எம். சுப்பையா என்பவர் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி முன்னிலையில் ஐ.ம.சு.மு வில் நேற்று முன்தினம் இணைந்தார். இது இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி யின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் வடபகுதி தமிழ் மக்களின் மேம் பாட்டுக்காக முன்னெடுக்கப்படு கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங் களே தம்மை இவ்வாறான முடிவு எடுக்க இட்டுச் சென்றதாக த.தே. கூட். அபேட்சகரான எம். சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு சுதந்திரமடைந்து இற் றைவரையும் இப்போது போன்ற அபிவிருத்தி முன்னொரு போதுமே எமது பிரதேசங்களில் முன்னெடுக்க ப்படவில்லை. அவ்வாறான அபிவி ருத்தியைத் த.தே.கூட்டமைப்பினால் கொண்டுவரவும் முடியாது. இத னாலேயே எமது மக்களுக்காக எம் மோடு இணைந்து அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் முன் னிலையில் ஐ.ம.சு. முன்னணியில் இணையத் தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

த.தே.கூட்டமைப்பினாலும் புலிகளாலும் தமக்கோ, தமிழ் மக்களுக்கோ எந்த நன்மையுமே கிடைக்கவுமில்லை.

அவற்றை அவர்களால் பெற்றுக் கொடுக்கவும் முடியாது. எனக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். அவர் களில் ஒரு மகன் பேராதனை பல்க லைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவரை பலாத்காரமாகப் பிடித்துச் சென்று புலிகள் ஆயுதப் போராட் டத்தில் ஈடுபடுத்தினர்.

அதனால் அவரை இழந்தேன். புலிகளின் செயலால் மேலும் மூன்று பிள்ளைகளை நான் இழந்துள்ளேன். இப்போது மூன்று பிள்ளைகள் தான் எஞ்சியுள்ளார்கள் என்றும் அவர் மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டார்.

என்னைப் போல் எல்லா தமிழ் மக்களும் புலிகளால் ஏதோவொரு வகையில் துன்ப - துயரத்தை அனு பவித்திருக்கின்றார்கள்.

இந்த நிலைமை மீண்டும் ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களை மேலும் பலப்படுத்துவது ஒவ்வொரு தமிழரது பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
சி. விஜயகுமார் (ஐ.தே.க)
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சிதம்பரப்பிள்ளை விஜயகுமார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டார்.

கிளிநொச்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் சிதம்பரப்பிள்ளை விஜயகுமார், ஆளும் கட்சியில் இணைந்துகொண்டார். இவருடன் சேர்ந்து 300 பேரும் ஆளும் கட்சியுடன் இணைந்துகொண்டனர்.

ஆளும் கட்சியில் இணைந்துள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்த சிதம்பரப்பிள்ளை விஜயகுமார், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. இளைஞர்களுக் கான நாளை அமைப்பின் தலைவரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கடந்த ஒரு வருடமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உட்சாகத்துடன் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

பல பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்களை மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி நகரை வடமாகாணத்தில் செல்வாக்கு மிக்க நகரமாக மாற்றுவதற்கும் அவர் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இவற்றைக் கண்டே ஆளும் கட்சியில் இணைவதற்கு தீர்மானித்தேன்.

இவ்வாறு எமது கிராமத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பதை உணர்ந்தே ஆளும் கட்சியில் இணையத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐ.ம.சு.மு. கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு நெருக்கடி நேரும் போதெல்லாம் இந்தியா சாதகமாக உறுதுணை புரியும்!

Friday, July 22, 2011
பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், சிரேஷ்ட ஆசிரியர்களையும் உத்தியோகபூர்வமாக ஒருவாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து தங்களை சந்தித்து செல்லுமாறு அழைப்புவிடுத்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் திருமதி நிருபமா ராவ் அவர்களை நாம் எமது இந்திய விஜயத்தில் முதல் நிகழ்வாக சவுத் புளொக் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சில் சந்தித்தோம்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் திருமதி நிருபமா ராவுடன் கட்டுரை ஆசிரியரும், லக்பிம ஆங்கில வார ஏட்டின் பிரதான ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்கவும் தனிப்பட்ட முறையில் உரையாடுகிறார்கள்.

கட்டுரையாசிரியரையும் வேறுசில ஆசிரியர்களையும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்திருந்த நிருபமா ராவ், தமது உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் நட்புறவுடன் குசலம் விசாரித்தார். நாமும் கூடிய விரைவில் அவர் இந்தியாவின் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து எமது பாராட்டையும் நல்வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டோம்.

இந்திய இராஜதந்திரிகள் மிகவும் அன்பாகவும் நட்புறவுடனும் மென்மையாகவும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் தாங்கள் சொல்லவேண்டிய கருத்தை சரியானமுறையில் தீர்க்கமாகத் தெரிவிப்பார்கள். அதற்கு நிருபமா ராவ் விதிவிலக்காக இருக்கவில்லை.

இந்தியா இலங்கையின் அயல்நாடு. இலங்கை வளர்ச்சியடைந்து பொருளாதாரத்துறையில் முன்னணியில் இருப்பதை நாம் பெரிதும் விரும்புகிறோம் என்ற பீடிகையுடன் தமது அறிமுக உரையை ஆரம்பித்த திருமதி ராவ், இன்று இலங்கையில் யுத்த கருமேகங்கள் நீங்கி அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கின்ற போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனத்துயரை தீர்ப்பதற்கு இதுவரையில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சிறந்தமுறையில் எடுத்திருக்கிறது என்று எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற ஒரு கருத்தை வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு இணைப்புக் குறித்து இந்தியா தலையிடாது. அதனை 1987ம் ஆண்டில் ஏற்படுத்துவதற்கு உந்துசக்தியாக இந்தியா இருந்தாலும் இன்று இதுகுறித்து தீர்மானிக்கும் முழு பொறுப்பை இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த திருமதி ராவ், இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது. நிரந்தர சமாதானத்துக்கு சகல உதவிகளையும் இந்தியா வழங்கும். 13ஆவது திருத்தத்துக்கு மேலதிகமான அதிகாரங்களுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பது நல்லது என்று கூறினார்.

தருஸ்மன் அறிக்கையை பற்றியோ, சனல்-4 வீடியோ அறிக்கைகளைப் பற்றியோ இந்திய அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. நாம் எந்நேரமும் இலங்கையின் நட்புநாடாகவிருந்து இத்தகைய நெருக்கடி நிலை ஏற்படும்போது இலங்கைக்கு சாதகமாக உறுதுணைபுரிவோம் என்று கூறினார். தருஸ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள், பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் தனது நிலையை விளக்கிக்கூறுவது மிகவும் அவசியமாகும்.
இந்திய வெளியுறவு அமைச்சுக்
கட்டடத்தின் வெளித்தோற்றம்.

அவ்விதம் செய்தால் இந்தியா இலங்கைக்கு பக்கபலமாக இருந்து சர்வதேச அழுத்தங்களை இல்லாமல் செய்யமுடியும் என்று திருமதி ராவ் தெரிவித்தார்.

ஒரு விடயத்தை நான் திட்டவட்டமாக கூறவிரும்புகிறேன் என்ற திருமதி நிருபமா ராவ், இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவவேண்டுமாயின் தமிழ் மக்களின் குறைபாடுகளை நிரந்தரமாக தீர்த்துவைக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை இலங்கை காலதாமதமின்றி ஏற்படுத்தவேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டுவருமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று லக்பிம ஆங்கில வார இதழின் ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க கேட்டகேள்விக்கு பதிலளித்த திருமதி ராவ், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. தமிழ்நாடு இந்தியாவின் ஓர் அங்கம். எனவே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவிக்கும் கருத்துக்களை புறக்கணிக்க முடியாது.

அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும் மத்திய அரசாங்கமே இந்தியாவின் வெளிவிவகார கொள்கை குறித்து தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறது என்று சொன்னார்.

எவ்வாறாயினும் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கும் தமிழ் நாட்டிலிருந்துவரும் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும், இந்தியப் பிரதம மந்திரியின் இந்த திரிசங்கு நிலையை இலங்கை புரிந்துகொள்ளவேண்டுமென்றும் திருமதி ராவ் தெரிவித்தார்.

அப்போது, குறுக்கீடுசெய்த கட்டுரை ஆசிரியர் இலங்கை ஜனாதிபதிக்கும் இத்தகைய உள்ளூர் பிரச்சினைகள் இருப்பதை இந்தியாவும் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை முழுவதும் மக்களின் பேராதரவு இருக்கின்ற போதிலும் அவரது ஆகக்கூடிய பலம் தென்னிலங்கையில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டி, தென்னிலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மட்டுமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் நிரந்தர தீர்வொன்றை காணமுடியும் என்பதையும் இந்தியா புரிந்துகொண்டு அவர்மீது அரசியல் தீர்வை அவசரமாக நிறைவேற்றவேண்டுமென்று கொண்டுவரும் அழுத்தங்களை தவிர்க்கவேண்டுமென்றும் கூறினார். அதற்கு திருமதி ராவ் சிரித்துக்கொண்டு பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டார்.

இலங்கையில் சீனா அதிகம் ஈடுபாடுகொண்டிருப்பது குறித்து இந்திய அரசாங்கம் சற்று மனத்தாங்கல் அடைந்திருக்கின்றது என்ற கருத்தில் உண்மையிருக்கிறதா என்று இன்னுமொரு ஆசிரியர் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் கேட்டதற்கு, அவர் அதற்கு முற்றாக இல்லையென்று மறுப்புத் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தியில் சீனா அதிக ஈடுபாடுகொண்டிருப்பது குறித்து இந்தியா என்றுமே அது தனக்கு சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தலென்று நினைக்கவில்லை.

சீனாவும் இந்தியாவும் பலகோடி டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தை செய்துவருகின்றன. அதனால் எங்களிரு நாடுகளுக்கிடையில் நட்புறவு உச்சநிலையில் இருக்கின்றபோதிலும் எல்லைத்தகராறு போன்ற சிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறினார்.

இலங்கையில் நிரந்தர சமாதானமும் அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம். இது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இலங்கையில் பொருளாதார வளர்ச்சி உச்சகட்டத்தில் அமைந்தால் அது இந்தியாவுக்கே உதவியாகவிருக்கும். எனவே, நாம் இலங்கையின் நட்பு நாடு என்ற முறையில் இலங்கையின் முன்னேற்றத்தில் அதிக அக்கறைகொண்டிருக்கிறோம் என்று திருமதி ராவ் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் முதன் முதலில் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு கூடிய விரைவில் எல்லா மக்களின் பூரண அங்கீகாரத்துடன் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று கூறி பத்திரிகை ஆசிரியர்களுடனான தனது கலந்துரையாடலை முடிவுக்குக் கொண்டுவரவிருந்த சந்தர்ப்பத்தில் சண்டேடைம்ஸ் பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளர் கிறிஸ் கமலேந்திரன், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து எங்கள் நாட்டின் மீன்வளத்தை அபகரித்து செல்வதுடன் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் எமது மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்களே? இது நியாயம்தானா என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு திருமதி ராவ் யதார்த்தபூர்வமான பதிலொன்றை அளித்தார். கடற்றொழிலாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக விருந்தாலும் அவர்கள் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அவர்கள் கடலுக்குச்சென்று மீனைபிடித்து கரைதிரும்பினால் தான் அவர்களது குடும்பத்தை வாழவைக்கமுடியும். அதனால் தான் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அயல்நாட்டு கடல் எல்லைக்குள்ளும் பிரவேசித்து மீனை பிடிக்கிறார்கள். இதனை நான் சரியென்று வாதிட விரும்பவில்லை.

என்ற பீடிகையோடு தனது பதிலை ஆரம்பித்த திருமதி நிருபமா ராவ், இலங்கை தரப்பிலும், இந்திய தரப்பிலும் மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வது தவறு. அவர்கள் பிழை செய்திருந்தால் அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். அதற்குப் பின்னர் இராஜதந்திர மட்டத்தில் இருதரப்பு மீனவர்களும் பரஸ்பரம் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

இதற்கென இந்தியாவும் இலங்கையும் இணை செயற்குழுவொன்றை கடந்த மார்ச் மாதத்தில் உருவாக்கி மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வை எடுப்பதற்கு இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மீனவர் பிரச்சினையை இலங்கையோ, இந்தியாவோ அரசியல் மயப்படுத்துவது தவறு என்றும் திருமதி ராவ் கூறினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு அமைந்திருக்கும் சவுத் புளொக் என்று அழைக்கப்படும் கட்டடம் பண்டைய மன்னர் கால கட்டடங்களைப் போன்று பாரிய கருங்கற்களினால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அங்கு மேற்குலகின் ஆடம்பரங்களை நாம் காணவில்லை. மின்உயர்த்திகள் கூட அக்கட்டடத்தில் பொருத்தப்படவில்லை.

நன்கு அகலமான படிக்கட்டுக்களே அங்கு இருந்தன. அக்கட்டடத்தைப் பார்க்கும்போது நாம் ஏதோ ஒரு இராணுவ முகாமுக்கு வந்துவிட்டோமோ என்ற உணர்வுதான் ஏற்படும். அந்தளவுக்கு அதற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. முன்வாயிலில் நுழைபவர்களின் உடைமைகள் மற்றும் உடல் எக்ஸ்ரே இயந்திரத்திற்குட்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றவுடன் அங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மிகவும் கண்ணியமான முறையில் உடல்சோதனையை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் செய்கிறார்கள்.

அங்கிருந்து விடைபெற்று நாம் தங்கியிருந்த புதுடில்லி ஒபரோய் ஹோட்டலுக்கு வந்தவுடன் அங்கும் பழையபடி எக்ஸ்ரே சோதனைகளும், உடல் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த அனுபவங்களைப் பெற்ற எங்கள் குழுவிலிருந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் யுத்த நிலைமை இலங்கையில் உச்சகட்டத்தில் இருந்தபோதும் கூட எங்கள் நாட்டில் இந்தளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்த ப்பட்டிருக்கவில்லையென்ற உண்மையான கருத்தை வெளியிட்டார்.

இந்தியா இவ்விதம் தனது பாதுகாப்பில் அதிக அக்கறைகொண்டிருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அங்கு பிரிவினைவாதம் அதிகளவில் இல்லாவிட்டாலும், நக்ஸலைட் தீவிரவாதிகள், முஜாஹிதீன் தீவிரவாதிகள் போன்ற பலதரப்பட்ட ஆயுதம் ஏந்திய குழுக்களின் அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால்தான் இந்திய அரசாங்கம் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்திருப்பதை எங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

(அடுத்த வெள்ளிக்கிழமை இந்தக் கட்டுரை தொடரும்)

Thursday, July 21, 2011

இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் ஜெயலலிதாவுடன் சந்திப்பு!

Thursday, July 21, 2011
தமிழகத்திற்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மறு வாழ்வு அவர்களை பாரம்பரீய பிரதேசங்களில் குடியேற்றுதல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பேசிய நிலையில் சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.

சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு கரியவாசத்திடம் வலியுறுத்திய ஜெயலலிதாவிடம் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறு குடியேற்றம் எப்படி நடக்கிறது என்று எடுத்துக் கூறினார் கரியவாசம். ஹில்லாரியின் விஜயத்திற்;குப் பின்னர் இலங்கைத் தூதர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்திருப்பது மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பதே எங்கள் குறிக்கோள் ஹிலாரி கிளிண்டன் பேச்சு!

Thursday, July 21, 2011
சென்னை : ‘தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதும், ஒளி மயமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதும்தான் இந்திய அமெரிக்க நாடுகளுக்கு பொதுவான இலக்காக உள்ளன’ என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு பொது நூலகத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று வந்தார். அங்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே இந்தியா & அமெரிக்க நாடுகளின் 21ம் நூற்றாண்டு தொலை நோக்கு பார்வை குறித்து பேசியதாவது:

இந்தியாவின் பெரிய நூலகம் இது என்று கூறினார்கள். இங்கு உரையாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னைக்கு முதல் முறையாக இப்போதுதான் வந்துள்ளேன்.
அமெரிக்காவும் இந்தியாவும் உலக சரித்திரத்தை மாற்றி அமைத்து எழுதுவதில் முக்கிய பங்கு வகிக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் இந்தியாவும், அமெரிக்காவும் உலகில் உள்ள பெரிய இரு ஜனநாயக நாடுகளாக நூற்றாண்டுகள் தொட்டு பழம்பெரும் பாரம்பரியத்துடன் இருந்து வருகின்றன. இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம்.

இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தீவிரவாத ஒழிப்பு, உலக தீவிரவாதத்துக்கு எதிரான விடை காண்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற முக்கிய பிரச்னைகளில் கூட்டாக இணைந்து செயல்படுவது என்ற உறுதி இருநாடுகளுக்கும் உள்ளது. இதற்காக தனியாக ஒரு மையத்தையும் நிறுவியுள்ளோம். கடற்கொள்ளை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக செயல்பட்டு தீவிரவாதத்தை வேருடன் அறுத்து, மீண்டும் தீவிரவாதம் தலைகாட்டாத வகையில் பணியாற்ற உறுதி எடுத்துள்ளோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் மிகவும் ஆச்சரியமாக பார்த்தோம். உலகத்துக்கே ஒரு முன்மாதிரியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்கன் தேர்தலின்போது ஐக்கியநாடுகள் சபையும், அமெரிக்காவும் இந்திய தேர்தல் அலுவலர்களை பார்வையாளர்களாக அழைத்து தேர்தலை நடத்த சொன்னது.

உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரமும் இந்திய பாரம்பரியமும் பரவியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலில் இதை பார்க்க முடியும். இந்து கடவுளான விநாயகரின் வடிவம் இந்தோனேஷிய நாட்டில் பாதுகாப்பு கடவுளாக உள்ளதையும் சொல்ல முடியும். இதன் மூலம் இந்தியா ஒரு கலாச்சார சின்னமாக திகழ்கிறது. இந்த ஆண்டு நடக்க இருக்கும் தெற்காசிய நாடுகளுக்கான கூட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கடல் பாதுகாப்பு குறித்து பேச உள்ளது.

இது ஒரு முக்கியமான விவாத பொருளாக அமையும். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் உலக பொருளாதாரம் வர்த்தகம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்து வரும் நாடுகளாக திகழ்ந்து வந்துள்ளன. இந்த மூன்று நாடுகளும் கூட்டாக இணைந்து உலக வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பாடுபட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உலக மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமஉரிமையும், சமவாய்ப்பும் அளிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. தமிழகத்தில் பல இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தமிழக அரசின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர். இதை இலங்கை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உலக அளவிலான சிக்கல்களை தீர்ப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க பகுதிகளில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உதவிட வேண்டும். இந்திய நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கின் கனவு எதுவென்றால் காலையில் அமிர்தசரசில் உணவு சாப்பிட வேண்டும், மதியம் பாக்கிஸ்தானில் உள்ள லாகூரில் உணவு சாப்பிட வேண்டும், இரவு ஆப்கனில் உணவு சாப்பிட வேண்டும் என்பதுதான். இந்த உணர்வு தவறானது அல்ல. இது போன்ற அமைதியான இணக்கமான சூழ்நிலையைத்தான் அமெரிக்காவும் விரும்புகிறது. இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் பேசினார்.

பூமி பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பள்ளி பருவம் முதலே பதிய வைக்க வேண்டும்-சூரியன் எப்எம் விழாவில் கவிஞர் வைரமுத்து!

Thursday, July 21, 2011
சென்னை : பூமி பாதுகாப்பு குறித்து பள்ளி பருவம் முதல் மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று சூரியன் எப்எம் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
சூரியன் எப்எம் சார்பில் கவிஞர் வைரமுத்துவின் 58வது பிறந்த நாளை முன்னிட்டு “வைரத்தின் நிழல்கள்’’ என்ற பெயரில் “பூமியை வாழ விடு’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் கவிதைப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கான பரிசளிப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது.

கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கி, கவிதை போட்டியில் முதல் பரிசை மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் பெற்றார். இவருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் டிஜிட்டல் கேமரா, ஈரோட்டை சேர்ந்த பிரதாப் ஸீ10 ஆயிரம், இன்டக்சன் ஸ்டவ், சென்னையை சேர்ந்த அஸ்வின் ரூ.5 ஆயிரம் செல்போன் ஆகியவை பரிசாக வழங்கினார்.
இதுபோல குன்னம் வடிவேலு, செங்கல்பட்டு வீரமணி, புதுச்சேரி தேவகி ஆனந்த் இவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு என மொத்தம் ரூ.50 ஆயிரத்திற்கான பரிசுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார். மேலும் 6 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

எனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் கவிஞர்களை ஒரு புள்ளியில் குவித்த சூரியன் எப்எம்மிற்கு எனது நன்றி. கவிதை, கவிஞர்கள் என்றால் ஆசை. நீங்கள் இல்லை என்றால் இந்த பூமி வெறும் வெற்று பூமியாகத்தான் இருக்கும். இந்த கவிதைப் போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வந்து குவிந்ததை பார்த்தபோது தமிழ்நாட்டின் மக்கள் தொகை யை விட கவிஞர்கள் அதிகம் என்று எண்ணினேன். நீங்கள் கவிதையில் எழுதிய கருத்துக்கள் சிறப்பாக இருந்தது. அதனை நீங்கள் தான் செயல்படுத்த வேண்டும்.

இயற்கையை வணங்குங்கள். மக்களை இயற்கை பக்கம் திருப்புங்கள். பூமியை காக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது. பூமி பாதுகாப்பு குறித்து பள்ளி பருவம் முதல் மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார். பரிசளிப்பு விழாவில், சூரியன் எப்எம் சேல்ஸ் பிரிவு துணைத் தலைவர் வெங்கட்ராம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மேலாளர் சுவாமிநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொதுமேலாளர் தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர்.