Thursday, July 18, 2019

அமெரிக்கா ஆயுத விற்பனை ஈரான் எதிர்ப்பு!

டெஹ்ரான், அமெரிக்கா ஏவுகணை சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அவர்கள் ஈரான் பகுதியில் ஆயுதங்கள் விற்கக்கூடாது , என அறிவித்துள்ளது.இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிப் கூறும்போது, “அமெரிக்கா எங்களுடன் ஏவுகணை சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அவர்கள் ஆயுதங்கள், ஏவுகணைகளை எங்கள் பகுதியில் விற்பதை நிறுத்த வேண்டும்” என்றார்.ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ், பந்து தற்போது அமெரிக்காவில் வீசப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது குறிப்பிடத்தக்கது.

60 இடங்களில் பணம் பதுக்கல் துரைமுருகன் தரப்பு மீது ஏ.சி.சண்முகம் புகார்!

குடியாத்தம், ''கடந்த தேர்தலில் செய்த அதே தவறை மீண்டும் தி.மு.க., வினர்செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்'' என வேலுார்தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.குடியாத்தத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த முறை தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் கோடி கோடியாக பணத்தை பதுக்கி வைத்திருந்தார். கணக்கில் வராத 10 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.அப்போது 50 - 60 கோடி ரூபாயைதுரைமுருகன் வீட்டின் பின்பக்கமாக எடுத்துச் சென்று விட்டனர். மீண்டும் அதே தவறை தி.மு.க. வினர் செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். சமீபத்தில்

Wednesday, July 17, 2019

கிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்!

கிரீஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக, கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தலையை உரசும் அளவுக்கு விமானம் தாழ்வாக பறந்தது. ஏதென்ஸ்:கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடற் கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மிகவும் தாழ்வாக பறக்கும்போது அதன் கீழ்பகுதியில் நின்று ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அப்படி விமானங்கள் தரையிறங்கும்போது, விமான என்ஜின்களில் இருந்து வெளிப்படும் வேக காற்றினால் சுற்றுலா பயணிகள் தூக்கி வீசப்பட்டு

எதற்கும் தயாராக உள்ளோம்: இந்திய விமானப்படை தளபதி!

எந்த வகையான சூழ்நிலையிலும் உடனடியாக களமிறங்க விமானப் படை எப்போதும் தயாராக உள்ளது' என விமானப் படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த போரின் 20வது ஆண்டையொட்டி டில்லியில் நேற்று(ஜூலை 16) நடந்த கருத்தரங்கில் விமானப் படையின் தலைமை தளபதி தனோவா கூறியதாவது: கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் 17வது ஸ்குவாட்ரனின் தலைவராக பங்கேற்றேன். அப்போது நமது விமானப் படைக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தன. மிராஜ் - 2000 போர் விமானத்தில் மட்டுமே குண்டு திறன் இருந்தது. தற்போது நமது அனைத்து விமானங்களிலும் இந்த வசதி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பல முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.கார்கில் போரின்போது இக்கட்டான கட்டத்தில் இரவு நேரத்தில்

ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றி நிச்சயம்: பொதுஜன பெரமுன உறுதி!

மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் கூடிய பாராளுமன்ற அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதியின் கீழ் எதிர்வரும் 2020 சித்திரைப் புத்தாண்டை எதிர்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எமது ஜனாதிபதி வேட்பாளர், இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் சாதனை படைக்கும் வெற்றியொன்றை பதிவு செய்வார் என நாம் நம்புகின்றோம்.இதனையடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு

ரகசிய சந்திப்பில் ரவி- மஹிந்த?

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லமான கால்ட்டனில் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும், அக்கட்சியின் உப தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பது தற்போது வெளிப்படையாகவே மேடைகளில் பேசப்படுகிறது.