மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் கூடிய பாராளுமன்ற அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதியின் கீழ் எதிர்வரும் 2020 சித்திரைப் புத்தாண்டை எதிர்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எமது ஜனாதிபதி வேட்பாளர், இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் சாதனை படைக்கும் வெற்றியொன்றை பதிவு செய்வார் என நாம் நம்புகின்றோம்.இதனையடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மைப் பலத்தை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
பெரும்பான்மைப் பலத்தை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வேறு எந்த குழுக்களினதும் உதவிகள் தேவையில்லையென சில தரப்பினர் பிரச்சாரம் செய்து கொண்டு செல்கின்றனர். இது பொய்யான ஒன்றாகும். இதில் எந்தவித உண்மையும் இல்லை. நாம் அவ்வாறு சொல்வதுமில்லை. சொல்லப் போவதுமில்லையெனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
I like your post.
ReplyDeleteLatest Entertainment News in India
Latest Bollywood News in India