ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லமான கால்ட்டனில் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும், அக்கட்சியின் உப தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பது தற்போது வெளிப்படையாகவே மேடைகளில் பேசப்படுகிறது.
No comments:
Post a Comment