குடியாத்தம், ''கடந்த தேர்தலில் செய்த அதே தவறை மீண்டும் தி.மு.க., வினர்செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்'' என வேலுார்தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.குடியாத்தத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த முறை தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் கோடி கோடியாக பணத்தை பதுக்கி வைத்திருந்தார். கணக்கில் வராத 10 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.அப்போது 50 - 60 கோடி ரூபாயைதுரைமுருகன் வீட்டின் பின்பக்கமாக எடுத்துச் சென்று விட்டனர். மீண்டும் அதே தவறை தி.மு.க. வினர் செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். சமீபத்தில்
ஒரே இடத்தில் மட்டும் 27 லட்சம் ரூபாய் சிக்கியிருக்கிறது.வேலுாருக்கான தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்க இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தி.மு.க. வினர் எதிர்பார்த்தனர்.
ஒரே இடத்தில் மட்டும் 27 லட்சம் ரூபாய் சிக்கியிருக்கிறது.வேலுாருக்கான தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்க இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தி.மு.க. வினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் மத்தியில் மோடி தலைமையில் வலுவான ஆட்சி அமைந்திருக்கிறது. தி.மு.க.வினர் நினைத்தது நிறைவேறவில்லை.வேலுார் தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டு கேளுங்கள். மீண்டும் பணத்தை கொண்டு வந்து தேர்தலை நிறுத்த தி.மு.க. வினர் முயற்சிக்க வேண்டாம். துரைமுருகன் பல ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். ஆனால் பாலாற்றில் ஒரு தடுப்பணையை கூட அவர் கட்டவில்லைஇவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment