பொலிஸ் மா அதிபருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இலங்கையில் நடைபெற்று வரும் விடயங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், அரசாங்கத்துக்குள் இன்னுமொரு அரசாங்கம் செயற்படுவதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நேற்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் உள்ள வர்க்க ரீதியிலான சட்டத்தை பொலிஸ் மா அதிபருக்கு அடையாளம் கண்டு கொள்ள முடியாதுள்ளதா? மத ரீதியிலான சட்டங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாதா? அரசாங்கத்துக்குள் இன்னுமொரு அரசாங்கத்தை





