தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்.பி தேர்தலுக்கு முன்பு இருந்தே தமிழ் மொழியில் எழுத்து பிழையுடன் பதிவிட்டு சர்ச்சைக்குள்ளாவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பதிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் மொழியில் ஒரு எழுத்து மாறினால்,
ஒட்டுமொத்த அர்த்தமே மாறிவிடும். அந்த வகையில் இவர் பிழையாக பதிவிட்டது, கெட்ட வார்த்தையாக மாறி பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்த மாதிரி பதிவிட்டு கடும் விமர்சனம் எழுந்த பிறகு மீண்டும், சிறிது மாற்றம் செய்தார். அதுவும் எழுத்து பிழையாகவே அமைந்தது பார்ப்போரை கைகொட்டி சிரிக்க வைத்தது.
கேட்டால் அவர் ஆங்கிலத்தில் படித்தவர். பிழை இருக்க தான் செய்யும், அவர் இந்தியில் சரளமாக பேசக்கூடியவர் என்று திமுகவினர் முட்டு கொடுக்கின்றனர். இது தான் திமுக தமிழ் வளர்க்கும் இலட்சணமும், இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் தந்திரமும் ஆகும். புரியாத வரை, இந்த அவலம் தொடரும்.
No comments:
Post a Comment