'இந்தியாவுக்கு, 'நேட்டோ' கூட்டு நாடுகள் அந்தஸ்து வழங்க வேண்டும்' என, அமெரிக்க பார்லிமென்டின், 'செனட்' சபை, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.'நார்த் அட்லாண்டிக் டிரீட்டி ஆர்கனைசேஷன்' எனப்படும், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, சர்வதேச அளவில், ராணுவ ஒத்துழைப்பில், உயரிய அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில், இந்தியாவையும் இணைக்க வேண்டும் என, அமெரிக்க பார்லிமென்டின், செனட் சபையில், கடந்த வாரம் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய விவகாரங்களுக்கான எம்.பி.,க்கள் குழுவால், அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனால், 2020ல், இந்தியா இந்த அமைப்பில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன், அமெரிக்க பார்லிமென்டின் மற்றொரு சபையான, பிரதிநிதிகள் சபையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த அமைப்பில் இந்தியா சேரும் போது, இந்தியா - அமெரிக்கா ராணுவ உறவு மேம்படும்.
குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியில், மனிதாபிமான உதவிகள், பயங்கரவாத எதிர்ப்பு, கடல் கொள்ளை தடுப்பு, கடல் பாதுகாப்பு போன்றவற்றில், இந்தியாவுக்கு, நேட்டோ நாடுகளின் உதவி கிடைக்கும். அமெரிக்காவுடன் இஸ்ரேல், தென் கொரியா நாடுகளின் ராணுவ உறவு பலப்பட்டிருப்பது போல, அமெரிக்கா - இந்தியா ராணுவ ஒத்துழைப்பு மேம்படும்.நேட்டோ - ஓர் அறிமுகம்:
1949ல், 12 நாடுகள் ஒன்றிணைந்து ஏற்படுத்திய இந்த அமைப்பில், தற்போது, 29 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான். இதன் தலைமையகம், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ளது. இதில், 2017ல் இணைந்த நாடு, மான்டிநீக்ரோ. விரைவில், போஸ்னியா, ஜார்ஜியா போன்ற நாடுகளும், முறைப்படி இதில் சேர உள்ளன.

No comments:
Post a Comment