செய்தி தொலைக்காட்சிகளின் விவாதங்களில் நடுநிலை இல்லாததால் அவற்றில் பா.ஜ.க-வினர் பங்கேற்க மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது.ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.மற்ற கட்சியினர் என்றால், மடக்கி மடக்கி கேள்வி கேட்பதும், திமுக என்றால்
அவர்கள் சொல்வதை கேட்பதும் தொடர்கதையாகி வருகிறது. திமுகவிற்கு எதிராக வலுவான ஆதாரத்தை முன்வைக்கும் நேரங்களில் எல்லாம், விவாத நெறியாளர்கள் இடையில் புகுந்து குழப்பி விடுவது போன்ற ஊடக நெறியற்ற போக்கு தமிழகத்தில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment