Thursday, January 29, 2015

புலிகளுக்கு ஆதரவாக உயிரை காக்க முத்துக்குமார் 6–ம் ஆண்டு நினைவுநாள்: தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது!

Thursday, January 29, 2015
சென்னை::புலிகளுக்கு ஆதரவாக உயிரை காக்க இந்திய அரசை வலியுறுத்தி சாஸ்திரி பவனில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் 6–ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
 
முத்துக்குமார் நினைவு நாளையொட்டி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று ஊர்வலமாக சென்று சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமாரின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
 
இதையடுத்து சாஸ்திரி பவன் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று காலையில் தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, செயலாளர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் சாஸ்திரி பவன் வாசலில் முத்துக்குமார் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் முத்துக்குமார் முக மூடியை அணிந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 15 பேரை கைது செய்தனர்.
 
போராட்டம் தொடர்பாக வேலுமணி கூறியதாவது:–
 
புலிகளுக்கு ஆதரவாக உயிர் நீத்த முத்துக்குமாரின் 6–வது நினைவு நாளான இன்று ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தோம். ஆனால் ஊர்வலத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே தடையை மீறி முத்துக்குமார் முகமூடியை அணிந்து போராட்டம் நடத்தினோம். சாஸ்திரிபவன் முன்பு உள்ள ஹாடோஸ் சாலைக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும்.
 
புலிகளின் தமிழ் ஈழம் மலர இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முத்துக்குமாருக்கு சிலை வைக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
முத்துக்குமார் நினைவு நாளையொட்டி கொளத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் சத்யராஜ், வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், டைரக்டர்கள் கவுதமன், புகழேந்தி தங்கராஜ், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கருநாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவிக்குமார் மற்றும் காஞ்சி அமுதன், உமாபதி, அருணா பாரதி அகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில்: ஐசிசி அறிவிப்பு!

Thursday, January 29, 2015
சென்னை::2016 ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
 
துபாயில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
2016 மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
 
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை யை 2007ல் இந்தியாவும், 2009ல் பாகிஸ்தானும், 2010ல் மேற்கிந்திய தீவு அணியும், 2014ல் இலங்கையும் கைப்பற்றியுள்ளது.

அரசாங்கத்தின், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்,இடைக்கால வரவு செலவு திட்டம்!

Thursday, January 29, 2015
இலங்கை::அரசாங்கத்தின், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், அரச சேவையாளர்களுக்கான வேதனம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க இடைக்கால வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, பெப்ரவரி மாதம் முதல் அரச சேவையாளர்களின் வேதனம் 5 ஆயிரம் ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 5 ஆயிரம் ரூபா வேதனம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளர்.

இதனிடையே, தனியார் சேவையாளர்களுக்கான வேதனத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்குமாறு நிதியமைச்சர் கோரியுள்ளார்.

ஒய்வூதிய கொடுப்பனவாளர்களுக்கான கொடுப்பனவு ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்னை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
400  கிராம் பால் மா பொதியின் விலை 61 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா 12 ரூபா 50 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து அமுலாகும் வகையில், சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது...
 
 
இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் 13 பொருட்களின் விலைகள் வகையில் குறைகின்றன.
சீனி- கிலோ 10 ரூபா குறைப்பு
பால் மா - குறைப்பு 61 ரூபா (400கிராம் பக்கெற் புதிய விலை - 325 ரூபா)
கோதுமை மா - கிலோ 12.50 ரூபா குறைப்பு
பாண் - 6 ரூபா குறைப்பு
பாசிப்பயறு - கிலோ 40 ரூபா குறைப்பு
நெத்தலி - கிலோ 15 ரூபா குறைப்பு
டின் மீன் - 60 ரூபா குறைப்பு
கொத்தமல்லி - கிலோ 60 ரூபாவால் குறைப்பு
மாசிக் கருவாடு - கிலோ 10 ரூபாவால் குறைப்பு
மிளகாய்த் தூள் - கிலோ 25 ரூபாவால் குறைப்பு

சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்த குமார் குணரத்தினத்திடம் விளக்கம் கோரல்!

Thursday, January 29, 2015
இலங்கை::சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுப்படுவது எவ்வாறு என, முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னத்திடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கம் கோரியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் நேற்று அங்கு சென்றிருந்தார்.

இதன்போது இந்த விளக்கம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், விசாரணைக்காக மீண்டும் வருகை தருமாறு தமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் புறக்கணிப்பு - தனிக்கட்சி தொடங்க தீவிர ஆலோசனை?

Thursday, January 29, 2015
சென்னை::காங்கிரஸ் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்படுவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில், ப.சிதம்பரமும் காங்கிரஸில் புறக்கணிக்கப்படுவதால் தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஞானதேசிகன் விலக்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் பெயரே அடிபட்டது. ஆனால் திடீரென ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக்கப்பட்டார்.

இந்த நிலயில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காமராஜர் திட்டங்களை மட்டும் பேசி பயனில்லை. புதிய திட்டத்துடன் மக்களை சந்திக்க வேண்டும் என்றார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார்த்தி சிதம்பரத்தின் பேச்சை இளங்கோவன் கடுமையாக கண்டித்துப் பேசினார்.

மேலும் மேலிடத்தில் இளங்கோவன் பற்றி சிதம்பரம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் புகாரை மேலிடம் கண்டுகொள்ளவில்லை. மாறாக சிதம்பரத்தை புறக்கணிக்க ஆரம்பித்தது. இதனால், சிதம்பரத்துக்கும், இளங்கோவனுக்கும் மோதல் அதிகரித்தது.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த வாரம் கார்த்தி சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, புதிய கட்சி அல்லது பழைய அமைப்பான ஜனநாயக பேரவையை மீண்டும் ஆரம்பிப்பது நல்லது என்று பேசப்பட்டுள்ளது.

இது குறித்து சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது மேலிடத்துக்கும் கூறப்பட்டுள்ளது.
 
எனவே எந்த நேரத்திலும் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருட காலமாக குறைக்க நடவடிக்கை: ஜனாதிபதி மைத்திரிபால!

Thursday, January 29, 2015
இலங்கை::இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு வருட காலத்திலிருந்து ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அரசியலமைப்புக்கு புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
உண்மையிலேயே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 04 வருடகாலமாக குறைப்பதையே நான் விரும்புகிறேன்' எனினும் தற்போது அரசமைப்பு யாப்பு சீர்திருத்த பதவியிலிருப்பவர்கள் எனது விருப்பதுடன் இணங்கவில்லை அதனால் தற்போது பொது சீர்திருத்தமாக ஐந்து வருட காலமாக குறைப்பதில் சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்படுமிடத்து மேற்கொள்ள வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் தேவையான யாப்பு சீர்திருத்தங்கள் அரசியலமைப்பு வல்லுனர்கள் உள்ளடக்கிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
பொலன்னறுவை தோப்பாவெவ விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
 
தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (சக்ஙீசூச்ஙூ ஙஹஙூக்ஷக்ஙீஹ) தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு தேவையான பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் தன் கொள்கைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் ஆவார் என ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அத்துடன் மண்டேலாவின் கருத்துக்கு எதிராக நின்றவர்களைக்கூட அவர் பிரிவினை பாராது நாட்டின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் அவர்களுடன் ஒன்றாக செயற்பட்டவர். அதே மாதிரி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மற்றும் நடவடிக்கைகளில் என்னை எதிர்த்து நின்றவர்களை நான் பிரிவினை பாராது நாட்டின் அபிவிருத்தியில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றார்.
 
அத்துடன் அரசியல் சார்ந்தவர்களின் செல்வாக்கிலோ, வேறு யாராவது பிரமுகர்களின் செல்வாக்கிலோ தகுதியடிப்படையின்றி எவருக்கும் வேலை வழங்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார். அனைவருக்கு அவரவர் தகுதி ,திறமை, நேர்மை அடிப்படையிலே தொழில்கள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி செய்துள்ளார்.
 
நாட்டில் முன்னர் காணப்பட்ட ஆட்சி முறையானது தேர்தல் காலத்தின் போது காணப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறி செயற்பட்டது. பலவருட காலமாக தேர்தலில் வாக்களிப்புக்களில் பின்பற்றப்பட்டு வந்த நேர்மை மற்றும் கொள்கைகள் கடந்த தேர்தல் காலத்தில் மீறப்பட்டது. அத்துடன் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வருபவர்கள் கடந்த சில காலமாக சரிவு நிலையை எதிர்நோக்கி வந்தனர்.
 
அத்துடன் அரசாங்க சேவையில் ஈடுபடுவர்களை எவ்வாறு ஒரு அரசியல் கடசியானது தனது தேர்தல் பிரசாரத்திற்காகவும் தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பயன்படுத்தி வந்தார்கள் என்று கடந்த தேர்தலில் நாம் காணக்கூடியதாக இருந்தது. இது எவராலும் எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையாகும். இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறானதொரு அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர்களை பயன்படுத்தியது இல்லை.
 
இருந்த போதிலும் கடந்த முறை எமது நாட்டில் இடம்பெற்ற தேர்தலானது மிகவும் சாதகமான நிலையிலும் சூழ்நிலையிலும் இடம்பெற்றதொரு வெற்றிகரமான தேர்தல் முறையாகும் என மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.