Thursday, November 1, 2012

14 வருடங்களுக்கு முன் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் 'லயன் எயார்' விமானத்தில் பயணித்தவர்களின் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு படையினர் நடவடிக்கை!

Thursday, November 01, 2012
இலங்கை::14 வருடங்களுக்கு முன்  புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் 'லயன் எயார்' விமானத்தில் பயணித்தவர்களின் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடலில் மிதந்து வந்த சுமார் 10 முதல் 15 சடலங்களை நாச்சிக்குடா கடற்கரையில் புதைத்ததாக மீனவர்கள் வழங்கிய தகவல்களை அடுத்தே அந்த சடலங்களை தோண்டி எடுப்பதற்கு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் சிதைவுகள் நாச்சிக்குடாவுக்கும் இரணைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் சுமார் 8 மீற்றர் ஆழத்தில் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த சிதைவுகளையும் ஏக காலத்தில் அகழ்ந்தெடுப்பதற்கு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இராணுவம், கடற்படை மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்தோரே இணைந்து ஆகியோர் இணைந்தே இந்த சடலங்கள் மற்றும் விமானத்தின் சிதைவுகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வணிகசூரிய தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கவிருந்த போதிலும் காலநிலை சீர்கேடு காரணமாக அந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் மற்றும் இரு உக்ரேனிய விமானிகளுடன் இரத்மலானைக்கு போகப்புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது.

இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களும் அதில் பயணித்தவர்களின் சகடற்படையினர் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது!

Thursday, November 01, 2012
இலங்கை::இராணுவத்தினர் மனிதாபிமான அடிப்படையில் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றனர்.இதன் ஓர் அங்கமாக வாகனேரி கிராமத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வாகனேரி கிராமத்தில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் இருந்து இராணுவத்தில் சரணடைந்து தற்போது வெலிகந்த புணர்வாழ்வு முகாமில் உள்ள நமசிவாயம் சத்தியசீலன் என்பவருக்கே வீடு கையளிக்கப்பட்டது.

233வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி எச்.பி.என்.கே.ஜயபத்திரனவின் வேண்டுகோளுக்கிணங்கவும் அவரது மேற்பார்வையிலும் 14ம் படைப்பிரிவின் பத்து இராணுவத்தினர் ஐம்பது நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இவ் வீட்டின் பெறுமதி ஏழு லட்சம் ரூபாவாகும்.

வீட்டுத் திறப்பு விழா நிகழ்வில் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சால்பெரேரா கலந்து கொண்டு வீட்டினை பயனாளிகளுக்கு கையளித்ததுடன் 23வது படைப்பிரின் கட்டளைத் தளபதி ஆர்.டபள்யூ.டபள்யூ.ஏ.டி.பி.ராஜகுரு, 233 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் எச்.பி.என்.கே.ஜெயரத்ன மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் வீ.ஜமுனானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தி.மு.க (புலிகளின் ஆதரவு)டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் நியுயோர்க் செல்ல திட்டமிருந்த பயணம் இடைநிறுத்தம்!

Thursday, November 01, 2012
சென்னை::(தி.மு.க (புலிகளின் ஆதரவு  )டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் நியுயோர்க் செல்ல திட்டமிருந்த  பயணம் இடைநிறுத்தம்!

இலங்கைத் (புலிகளின் ஆதரவு  ) தமிழர்களின் நலனை வலியுறுத்தி கடந்த ஓகஸ்ட் மாதம் திராவிட முன்னேற்ற கழகத்தினால் நிறைவேற்றப்பட்ட டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் நியுயோர்க் செல்ல திட்டமிருந்த அந்த கட்சியின் பிரமுகர்களின் பயணம் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது

பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று நியூயோர்க் செல்லும் நோக்கில் பயணமானதாக திமு.க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன..

 (புலிகளின் ஆதரவு  )டெசோ தீர்மான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்காகவே அவர்கள் இருவரும் இன்று மாலை பயணமாகினர்.

எனினும், அமெரிக்காவில் சண்டி சூறாவளி மற்றும் காலநிலை மாற்றங்களால் வானூர்தி சேவைகள் பல ரத்து செய்யப்பட்டன.

இதனையடுத்து, தி.மு.க பிரமுகர்கள் லண்டனில் தங்கிருயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதியும் இந்த பயணத்தில் பங்கேற்ற நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனிலுள்ள மருத்துவமனையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்..

ஐக்கிய நாடுகள் சபையில் (புலிகளின் ஆதரவு  ) டெசோ சார்பில் மனுவொன்றை சமர்பித்து விட்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி லண்டனில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டிலும் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற செயற்பாடுகள் விரைவில் தமிழில்!

Thursday, November 01, 2012
இலங்கை::நீதிமன்ற செயற்பாடுகளில் தமிழ் சிறைக்கைதிகள் எதிர்நோக்கும் மொழிப் பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக விரைவாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றினைப்பு அமைச்சர் வாசுதேவ நானயக்கார குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவுள்ளதாகவும், விசாரனைகள் மற்றும் குற்றப் பத்திரங்களை தமிழில் தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். நேற்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ்கைதிகளை சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் நடவடிக்கை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகளின் குற்ற விசாரனைகள் தொடர்பாக தமிழில் விசாரனைகளை மேற்கொள்ளும் முகமாக விரைவில் விஷேட நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொறுமையா பதில் சொல்லணும்' : விஜயகாந்துக்கு பா.ஜ., ராதாகிருஷ்ணன் "அட்வைஸ்'!

Thursday, November 01, 2012
மதுரை::பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டும்,'' என, தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் "அட்வைஸ்' செய்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., முதன்மையானதாக வளரும். தே.மு. தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் கட்சி தாவியது, ஜனநாயக முறைப்படி ஏற்கக்கூடியதல்ல. முதல்வரை சந்தித்து தான் மக்
கள் பிரச்னையை சொல்ல வேண்டும் என்பதில்லை.

சென்னை விமான நிலையத்தில், விஜயகாந்த் முன்னிலையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது, ஜனநாயக முறைப்படி ஏற்கத்தக்கது அல்ல. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டும், என்றார்.

பயங்கரவாதிகளை திருப்பி அனுப்ப சவுதியிடம் இந்தியா கோரிக்கை!

Thursday, November 01, 2012

புதுடில்லி:இந்தியாவில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்ற, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் நால்வரை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி, சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

டில்லி, மும்பை, புனே, ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்த பயங்கரவாதிகள், இந்திய பாஸ்போர்ட் மூலம், சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்றனர். அவர்களை, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் படி, சவுதி அரேபியா அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். விரைவில், நல்ல பதில் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.