Thursday, November 01, 2012
சென்னை::(தி.மு.க (புலிகளின் ஆதரவு )டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் நியுயோர்க் செல்ல திட்டமிருந்த பயணம் இடைநிறுத்தம்!
இலங்கைத் (புலிகளின் ஆதரவு ) தமிழர்களின் நலனை வலியுறுத்தி கடந்த ஓகஸ்ட் மாதம் திராவிட முன்னேற்ற கழகத்தினால் நிறைவேற்றப்பட்ட டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் நியுயோர்க் செல்ல திட்டமிருந்த அந்த கட்சியின் பிரமுகர்களின் பயணம் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது
பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று நியூயோர்க் செல்லும் நோக்கில் பயணமானதாக திமு.க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன..
(புலிகளின் ஆதரவு )டெசோ தீர்மான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்காகவே அவர்கள் இருவரும் இன்று மாலை பயணமாகினர்.
எனினும், அமெரிக்காவில் சண்டி சூறாவளி மற்றும் காலநிலை மாற்றங்களால் வானூர்தி சேவைகள் பல ரத்து செய்யப்பட்டன.
இதனையடுத்து, தி.மு.க பிரமுகர்கள் லண்டனில் தங்கிருயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதியும் இந்த பயணத்தில் பங்கேற்ற நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனிலுள்ள மருத்துவமனையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்..
ஐக்கிய நாடுகள் சபையில் (புலிகளின் ஆதரவு ) டெசோ சார்பில் மனுவொன்றை சமர்பித்து விட்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி லண்டனில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டிலும் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment