Thursday, November 01, 2012
இலங்கை::இராணுவத்தினர் மனிதாபிமான அடிப்படையில் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றனர்.இதன் ஓர் அங்கமாக வாகனேரி கிராமத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வாகனேரி கிராமத்தில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் இருந்து இராணுவத்தில் சரணடைந்து தற்போது வெலிகந்த புணர்வாழ்வு முகாமில் உள்ள நமசிவாயம் சத்தியசீலன் என்பவருக்கே வீடு கையளிக்கப்பட்டது.
233வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி எச்.பி.என்.கே.ஜயபத்திரனவின் வேண்டுகோளுக்கிணங்கவும் அவரது மேற்பார்வையிலும் 14ம் படைப்பிரிவின் பத்து இராணுவத்தினர் ஐம்பது நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இவ் வீட்டின் பெறுமதி ஏழு லட்சம் ரூபாவாகும்.
வீட்டுத் திறப்பு விழா நிகழ்வில் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சால்பெரேரா கலந்து கொண்டு வீட்டினை பயனாளிகளுக்கு கையளித்ததுடன் 23வது படைப்பிரின் கட்டளைத் தளபதி ஆர்.டபள்யூ.டபள்யூ.ஏ.டி.பி.ராஜகுரு, 233 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் எச்.பி.என்.கே.ஜெயரத்ன மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் வீ.ஜமுனானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment