Thursday, November 1, 2012

14 வருடங்களுக்கு முன் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் 'லயன் எயார்' விமானத்தில் பயணித்தவர்களின் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு படையினர் நடவடிக்கை!

Thursday, November 01, 2012
இலங்கை::14 வருடங்களுக்கு முன்  புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் 'லயன் எயார்' விமானத்தில் பயணித்தவர்களின் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடலில் மிதந்து வந்த சுமார் 10 முதல் 15 சடலங்களை நாச்சிக்குடா கடற்கரையில் புதைத்ததாக மீனவர்கள் வழங்கிய தகவல்களை அடுத்தே அந்த சடலங்களை தோண்டி எடுப்பதற்கு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் சிதைவுகள் நாச்சிக்குடாவுக்கும் இரணைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் சுமார் 8 மீற்றர் ஆழத்தில் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த சிதைவுகளையும் ஏக காலத்தில் அகழ்ந்தெடுப்பதற்கு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இராணுவம், கடற்படை மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்தோரே இணைந்து ஆகியோர் இணைந்தே இந்த சடலங்கள் மற்றும் விமானத்தின் சிதைவுகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வணிகசூரிய தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கவிருந்த போதிலும் காலநிலை சீர்கேடு காரணமாக அந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் மற்றும் இரு உக்ரேனிய விமானிகளுடன் இரத்மலானைக்கு போகப்புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது.

இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களும் அதில் பயணித்தவர்களின் சகடற்படையினர் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment