Thursday, February 25, 2016

சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம்!

ஜனநாயக கட்சி தலைவர் பீ்ல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

யோஷிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் பணிப்பாளரான நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட,
அஷான் ரவிநாத் பெர்ணான்டோ மற்றும் கவிஷான் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியலே
நீடிக்கப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என. தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இதன் போது கடுவலை நீதவான் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, February 14, 2016

ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத தினேஸ் குணவர்த்தனவுக்கு கூட்டு எதிரணியின் தலைவர் பதவி!

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆரம்பிக்க உள்ள புதிய கட்சியின் தலைவர் பதவிக்கு நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, கோத்தபாய ராஜபக்ஸ, மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 
பெரும்பாலானவர்கள் மகிந்த ராஜபக்ஸவின் பெயரை பரிந்துரைத்துள்ளதுடன் மேலும் சிலர் இடதுசாரி கொள்கைகளை கொண்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காத தினேஷ் குணவர்தனவே தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் எனக் கூறியுள்ளனர். அடுத்து வரும் சில தினங்களில் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்று அந்த கட்சிக்கு பெயரிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்தை நெஞ்சில் குத்திய ஆதரவாளர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்திய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
மஹிந்த ராஜபக்ஷ நேற்று கட்சிக் காரியாலயத்தை திறந்து வைத்தபோது இந்த தீவிர ஆதரவாளரும் அதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 92 பேர் கொலை! டிலான்!

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று வரை 92 பேர் கொலை செய்யப்பட்டுள்ளர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சியை ஏற்றவர்கள் அதில் பல திட்டங்களை இன்றுவரை நிறைவேற்றவில்லை. மாறாக இதுவரைக்கும் அவர்கள் ஆட்சி ஏற்ற நாளில் இருந்து இன்றுவரை 92 கொலைகளை தான் செய்துள்ளார்கள் என்று அங்கு குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி என்பது வெறும் மாயை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

ஐ.தே.க சடலங்களை தோண்டியெடுத்து அதிக வாக்குகளை பெற முயற்சிக்கிறது: டிலான்

சுதந்திரக் கட்சியில் இருந்து 8 பேரை நீக்க தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வரும் 8 பேர்  நீக்கப்பட உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு  சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
 
இந்த கூட்டத்தில் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை மீறியதாக கூறப்படும் மகிந்த ராஜபக்ச அணியை சேர்ந்த 8 பேர் கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கட்சி ஒன்றின் தலைமைத்துவத்தை ஏற்க தான் தயார் எனவும்
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலைமையில், கட்சியை பாதுகாக்கும் நோக்கில் குறித்த 8 நபர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பந்துல குணவர்தன, குமார வெல்கம, ரோஹித்த அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம உட்பட 8 பேரே இவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

யோசிதவுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தம்!

கடற்படை லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளையும் இடைநிறுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
யோசித தற்போது பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே தமது விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.