Thursday, February 25, 2016

யோஷிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் பணிப்பாளரான நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட,
அஷான் ரவிநாத் பெர்ணான்டோ மற்றும் கவிஷான் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியலே
நீடிக்கப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என. தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இதன் போது கடுவலை நீதவான் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment