ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வரும் 8 பேர் நீக்கப்பட உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை மீறியதாக கூறப்படும் மகிந்த ராஜபக்ச அணியை சேர்ந்த 8 பேர் கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கட்சி ஒன்றின் தலைமைத்துவத்தை ஏற்க தான் தயார் எனவும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில், கட்சியை பாதுகாக்கும் நோக்கில் குறித்த 8 நபர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பந்துல குணவர்தன, குமார வெல்கம, ரோஹித்த அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம உட்பட 8 பேரே இவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment