Thursday, January 21, 2016

தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு உட்­பட புலம்­பெயர் புலி அமைப்­பி­னரின் தேவைக்கு ஏற்ப அர­சாங்­க­மா­னது ஈழக்­க­ன­வினை நன­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது: விமல்­வீ­ர­வன்ச!

தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு உட்­பட புலம்­பெயர் அமைப்­பி­னரின் தேவைக்கு ஏற்ப அர­சாங்­க­மா­னது ஈழக்­க­ன­வினை நன­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது. இதற்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்­க­ப்போ­வது இல்லை. அதே­நேரம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் பத­வி­யினை துறப்­ப­தற்­கான காலம் நெருங்கி வரு­கின்­றது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல்­வீ­ர­வன்ச தெரி­வித்தார். எதிர்க்­கட்­சி­யினை பல­வீ­னப்­ப­டுத்தும் முக­மாக சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே முரண்­பா­டு­களை தோற்­று­வித்து அர­சா­னது இன­வாத மோதல்­ஒன்­றுக்கு வழி­வ­குப்­ப­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார். எமது தாய்­பூ­மியை பாது­காக்க ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுவோம் எனும் தொனிப்­பொ­ருளில் பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள அப்­பே­கம கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற சொற்­பொ­ழிவு நிகழ்வு ஒன்­றில்­நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின்­த­லை­வரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய விமல்­வி­ர­வன்ச மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
இதன்­போது அவர்­தொ­டர்ந்து உரை­யாற்­று­கையில்.
 
புலிகளின் ஈழக்­க­ன­வினை அடிப்­ப­டை­யாக கொண்டு கடந்­தக்­கா­லங்­க­ளில்­செ­யற்­பட்ட விடு­தலை புலி­களின் செயற்­பா­டு­களை எமது நாட்­டில்­முற்று முழு­வ­து­மாக நாம் இல்­லா­தொ­ழித்­துள்ள போதிலும் ஈழ கன­வினை அடி­ப­டை­யாக கொண்டு எமது நாட்­டுக்கு வெளியில் பல்­வேறு தரப்­பினர் செயற்­ப­டு­கின்­ற­மையை இன்று அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது. தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு உட்­பட வடக்­கி­ழக்கில் தொழிற்­படும் ஏனைய கட்­சி­களின் தேவைக்கு ஏற்ப ஈழக்­க­ன­வினை இந்த அர­சாங்கம் நிறை­வேற்ற முயற்­சிக்­கின்­றது. மறு­புறம் எதிர்க்­கட்­சி­யினை பல­வீ­னப்­ப­டுத்தும் முக­மாக சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே முரண்­பா­டு­களை தோற்­று­வித்து இன­வாத மோதல் ஒன்­றுக்கு வழி­வ­குக்­கின்­றது இந்­நி­லை­மை­யா­னது மிகவும் ஆபத்­தா­னது.
 
அப்பப் புரட்­சிக்கு உரி­மை­கோரல்
 
கடந்த ஜன­வரி 8 ஆம்­தி­கதி நடை­பெற்று முடிந்த அப்பப் புரட்­சியின் அர­சாங்­கத்­திற்கு இன்று தேசிய ரீதி­யி­லும்­உ­ரிமை கோரப்­ப­டு­கின்­றது அதா­வது இந்­தியா, அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடு­களின் சூழ்ச்சி வலை­களின் அடி­ப­டை­யி­லேயே கடந்த இரண்டு தேர்­தல்­களும் நடை­பெற்று முடிந்­தன. அந்­த­வ­கை­யி­லேயே இன்று எமது நாட்டை துண்­டாட இந்த அர­சாங்கம் ஏனைய நாடு­க­ளு­டன்­து­ணை­போ­வ­தோடு அவற்­றுக்­கான செயற்­பா­டு­களை மும்­மு­ர­மாக மேற்­கொண்டு ஒப்­பந்­தங்­களை மறை­மு­காக செயற்­ப­டுத்­து­கின்­றது. இவற்றின் அடி­ப­டை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி தோற்­க­டிக்­கப்­பட்டார்.
 
கறுப்பு ஜூலைக்­கான அடித்­தளம்
 
நல்­லாட்சி என வெறு­மனே வார்த்­தை­க­ளி­னால்­கூறி நாட்­டிற்­கும்­எ­மது மக்­க­ளுக்கும் மிகவும் எதிர்­ம­றை­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வரும் இந்த அர­சாங்கம் மீது நாளுக்கு நாள் மக்கள் அதி­ருப்­தி­ய­டைந்து வரு­கின்­றனர். அந்­த­வ­கையில் எதிர்க்­கட்­சி­யினை பல­வி­னப்­ப­டுத்த ஒவ­வொரு துரும்பு சீட்­டு­க­ளையும் பயன்­ப­டுத்தி தோல்வி கண்­டுள்ள நிலையில் முன்னர் ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­க­மா­னது சிங்­கள,தமிழ் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்தி இன­வாத மோதல் ஒன்­றுக்கு வழி­வ­குத்து எதிர்­கட்சி மீது அந்த குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி அந்த கட்­சியை தடை­செய்­தது. அவ்­வா­றான ஒரு செயற்­பா­டையே இன்றும் முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றது. அதா­வது சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே மோதலை உரு­வாக்கி அந்த குற்­றத்தை ஒன்­றி­ணைந்த எதிர்­கட்­சி­யான எம்­மீது சுமத்த முற்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­மை­யா­னது மிகவும் பயங்­க­ர­மா­னது இவற்றை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
தைப்­பொங்கல் விழா
 
இம்­முறை தைப்­பொங்கல் விழா­வினை பிர­த­மர்­யாழ்­பா­ணத்தில் மிகவும் சிறப்­பாக கொண்­டா­டினார் இதன்­போது பிர­த­மரி ன்உரையில் சிங்­க­ள­வர்­களின் பாற்­சோறை விட­வும்­த­மி­ழர்­க­ளின்­தைப்­பொங்கல் மிகவும் இனிப்­பா­னது என்று தெரி­வித்­தி­ருந்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மனைவி பிர­த­ம­ருக்கு முறை­யான பாற்­சோறை தயா­ரித்து தந்­தது கிடை­யாது என்றே நான் கரு­து­கின்றேன். இவ்­வா­றான கருத்­து­க­ளின்­அ­டி­ப­டை­யி­லேயே பிர­த­மரும் இன்று செயற்­பா­டு­கின்றார். அதா­வது எமது பெரு­பான்மை சழூ­கத்தை மறந்து அனைத்து சிறு­பான்­மை­யி­னத்­தி­னரின் நல­னி­லேயே பிர­த­மரின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன. குறிப்­பிட்டு கூறு­வ­தாயின் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு மாத்­தி­ரமே ரணில்­விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கவும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும் செயற்­ப­டு­கின்­றனர்.என்றே குறிப்பிட வேண்டும்.
 
நாட்டை பிளவுப்படுத்த முயற்சி
 
அப்பப் புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அரசாங்கமானது தொடர்ச்சியாக சர்வதேசத்தின்தேவைக்கு ஏற்ப எமது நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளை மும்முரமாக முன்னெடுக்கின்றது. அந்தவகையில்இதற்கு சர்வதேச நாடுகளும் முழுமையான உதவிகளை வழங்குகின்றன. எனவே எமது தாய்பூமியை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் அதற்கு இந்த அரசாங்கத்தை வீழ்த்தவும் பிரதமரின் பதவியை துறக்க வைக்கப்பதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு வருமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

Monday, January 18, 2016

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷகவுக்கு ஆதரவு!

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷகவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே செயல்படுவது என அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள பிரதேச உள்ளுராட்சி சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர்களும் உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
 
அம்பாறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலேயே தாங்கள் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார் பதியத்தலாவ பிரதேச உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைவரான எம்.எல். சுமித் செனவிரத்ன. இதற்கான விட்டுக்கொடுப்பை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ய வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த அவர்கள் தலைமையேற்க முடியாவிட்டால், அவர் தனிகட்சி ஒன்றுக்கு தலைமையேற்று தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். இந்த தீர்மானத்திற்கு 90 சத வீதமான உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்தனர் எனக் கூறுகிறார் செனவிரத்ன.

புதிய அரசியல் அணிக்குத் தலைமையேற்கிறார்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

கூட்டு எதிரணி உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய முன்னணிக்கு,
 
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 இந்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொள்வதற்கு மறுக்கும் பட்சத்திலேயே, அப்பதவியை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதிகாரப் பரவலாக்கலானது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
 
நாரேஹன்பிட்டி அபேராம விஹாரையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அங்கு இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
 
அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். ஆனால் இவ்வாறு அரசியலமைப்பை மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள் நெகிழ்வுத்தன்மையுடன் அமையுமமென எதிர்பார்க்கின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வாக்குறுதியை முன்வைத்திருந்தோம். கடந்த 2011 ஆம் ஆண்டு நிமால் சிறிபால டி. சில்வா தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு வொன்று உருவாக்கப்பட்டது.
 
இதில் அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் நிறைவேற்று அதிகார முறைமை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுவதற்கு ஆணை வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பொறுப்பு தற்போது புதிய அரசாங்கத்திற்கு சென்றுள்ளது. புதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய வாக்குறுதியாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மாற்றியமைக்கும் செயற்பாடு காணப்படுகிறது. கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டமானது ஜனாதிபதி முறைமையில் சில அதிகாரங்களை குறைப்பதாக அமைந்திருந்தது. ஆனால் ஜனாதிபதியின் முக்கிய அதிகாரங்கள் இன்னும் நீடிக்கின்றன.
 
புதிய அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் முக்கியமானவையாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குதலும், தேர்தல் முறையை மாற்றியமைப்பதுமே காணப்படுகின்றன. ஆனால் புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதகாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக்கூடாது.
விசேடமாக பொலிஸ் அதிகாரமானது இலங்கையில் எக் காரணம் கொண்டும் மாகாணங்களுக்கு வழங்க முடியாது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது சாத்தியமாக இருக்கும். இலங்கையை விட பல மடங்கு பெரியதான தமிழ் நாட்டிலேயே ஒரு பொலிஸ் படையே காணப்படுகின்றது. அதனால் இந்திய முறைமையானது இலங்கைக்கு எந்தவகையிலும் ஏற்புடையதல்லஎன்று குறிப்பிட்டார்.