Monday, January 18, 2016

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷகவுக்கு ஆதரவு!

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷகவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே செயல்படுவது என அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள பிரதேச உள்ளுராட்சி சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர்களும் உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
 
அம்பாறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலேயே தாங்கள் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார் பதியத்தலாவ பிரதேச உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைவரான எம்.எல். சுமித் செனவிரத்ன. இதற்கான விட்டுக்கொடுப்பை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ய வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த அவர்கள் தலைமையேற்க முடியாவிட்டால், அவர் தனிகட்சி ஒன்றுக்கு தலைமையேற்று தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். இந்த தீர்மானத்திற்கு 90 சத வீதமான உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்தனர் எனக் கூறுகிறார் செனவிரத்ன.

No comments:

Post a Comment