தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட புலம்பெயர் அமைப்பினரின் தேவைக்கு ஏற்ப அரசாங்கமானது ஈழக்கனவினை நனவாக்குவதற்கு முயற்சிக்கின்றது. இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப்போவது இல்லை. அதேநேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியினை துறப்பதற்கான காலம் நெருங்கி வருகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்தார். எதிர்க்கட்சியினை பலவீனப்படுத்தும் முகமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து அரசானது இனவாத மோதல்ஒன்றுக்கு வழிவகுப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். எமது தாய்பூமியை பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் எனும் தொனிப்பொருளில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அப்பேகம கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்வு ஒன்றில்நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தேசிய சுதந்திர முன்னணியின்தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய விமல்விரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர்தொடர்ந்து உரையாற்றுகையில்.
புலிகளின் ஈழக்கனவினை அடிப்படையாக கொண்டு கடந்தக்காலங்களில்செயற்பட்ட விடுதலை புலிகளின் செயற்பாடுகளை எமது நாட்டில்முற்று முழுவதுமாக நாம் இல்லாதொழித்துள்ள போதிலும் ஈழ கனவினை அடிபடையாக கொண்டு எமது நாட்டுக்கு வெளியில் பல்வேறு தரப்பினர் செயற்படுகின்றமையை இன்று அவதானிக்க முடிந்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கிழக்கில் தொழிற்படும் ஏனைய கட்சிகளின் தேவைக்கு ஏற்ப ஈழக்கனவினை இந்த அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்கின்றது. மறுபுறம் எதிர்க்கட்சியினை பலவீனப்படுத்தும் முகமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து இனவாத மோதல் ஒன்றுக்கு வழிவகுக்கின்றது இந்நிலைமையானது மிகவும் ஆபத்தானது.
அப்பப் புரட்சிக்கு உரிமைகோரல்
கடந்த ஜனவரி 8 ஆம்திகதி நடைபெற்று முடிந்த அப்பப் புரட்சியின் அரசாங்கத்திற்கு இன்று தேசிய ரீதியிலும்உரிமை கோரப்படுகின்றது அதாவது இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் சூழ்ச்சி வலைகளின் அடிபடையிலேயே கடந்த இரண்டு தேர்தல்களும் நடைபெற்று முடிந்தன. அந்தவகையிலேயே இன்று எமது நாட்டை துண்டாட இந்த அரசாங்கம் ஏனைய நாடுகளுடன்துணைபோவதோடு அவற்றுக்கான செயற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு ஒப்பந்தங்களை மறைமுகாக செயற்படுத்துகின்றது. இவற்றின் அடிபடையிலேயே முன்னாள் ஜனாதிபதி தோற்கடிக்கப்பட்டார்.
கறுப்பு ஜூலைக்கான அடித்தளம்
நல்லாட்சி என வெறுமனே வார்த்தைகளினால்கூறி நாட்டிற்கும்எமது மக்களுக்கும் மிகவும் எதிர்மறையான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் இந்த அரசாங்கம் மீது நாளுக்கு நாள் மக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சியினை பலவினப்படுத்த ஒவவொரு துரும்பு சீட்டுகளையும் பயன்படுத்தி தோல்வி கண்டுள்ள நிலையில் முன்னர் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமானது சிங்கள,தமிழ் கலவரத்தை ஏற்படுத்தி இனவாத மோதல் ஒன்றுக்கு வழிவகுத்து எதிர்கட்சி மீது அந்த குற்றச்சாட்டுகளை சுமத்தி அந்த கட்சியை தடைசெய்தது. அவ்வாறான ஒரு செயற்பாடையே இன்றும் முன்னெடுக்க முயற்சிக்கின்றது. அதாவது சிங்கள, முஸ்லிம் மக்களிடையே மோதலை உருவாக்கி அந்த குற்றத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சியான எம்மீது சுமத்த முற்படுகின்றது. இந்நிலைமையானது மிகவும் பயங்கரமானது இவற்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தைப்பொங்கல் விழா
இம்முறை தைப்பொங்கல் விழாவினை பிரதமர்யாழ்பாணத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடினார் இதன்போது பிரதமரி ன்உரையில் சிங்களவர்களின் பாற்சோறை விடவும்தமிழர்களின்தைப்பொங்கல் மிகவும் இனிப்பானது என்று தெரிவித்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பிரதமருக்கு முறையான பாற்சோறை தயாரித்து தந்தது கிடையாது என்றே நான் கருதுகின்றேன். இவ்வாறான கருத்துகளின்அடிபடையிலேயே பிரதமரும் இன்று செயற்பாடுகின்றார். அதாவது எமது பெருபான்மை சழூகத்தை மறந்து அனைத்து சிறுபான்மையினத்தினரின் நலனிலேயே பிரதமரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. குறிப்பிட்டு கூறுவதாயின் சிறுபான்மையினருக்கு மாத்திரமே ரணில்விக்கிரமசிங்க பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் செயற்படுகின்றனர்.என்றே குறிப்பிட வேண்டும்.
நாட்டை பிளவுப்படுத்த முயற்சி
அப்பப் புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அரசாங்கமானது தொடர்ச்சியாக சர்வதேசத்தின்தேவைக்கு ஏற்ப எமது நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளை மும்முரமாக முன்னெடுக்கின்றது. அந்தவகையில்இதற்கு சர்வதேச நாடுகளும் முழுமையான உதவிகளை வழங்குகின்றன. எனவே எமது தாய்பூமியை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் அதற்கு இந்த அரசாங்கத்தை வீழ்த்தவும் பிரதமரின் பதவியை துறக்க வைக்கப்பதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு வருமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment