Wednesday, February 29, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது : கட்சிகள் மும்முரம்: சுயேச்சைகள் சுறுசுறுப்பு!

Wednesday,February,29,2012
சங்கரன்கோவில்::சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது. நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பிரசாரத்தில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்று கடைசிநாள் என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடக்கிறது. பலமுனைப் போட்டி நிலவுவதால் மாநில அளவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுக்கள் பெறப்பட்டன. நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திலும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். முத்துசெல்வி (அதிமுக), ஜவகர் சூரியகுமார் (திமுக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), முத்துக்குமார் (தேமுதிக), நாகேஸ்வரராவ் (சமாஜ்வாடி), ஜெயராஜ் (குடியரசு கட்சி), செண்பகவல்லி (புரட்சி பாரதம்) மற்றும் சுயேச்சைகள் பத்மராஜன், காந்தியவாதி ஆறுமுகம், சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரன், தங்கராஜா ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். பா.ஜ. வேட்பாளர் முருகன், லோக்ஜனசக்தி வேட்பாளர் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்கின்றனர். மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை (மார்ச் 1ம் தேதி) மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற 3ம் தேதி கடைசி நாள். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சங்கரன்கோவில் தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கைக்கு குறைவாகவே வேட்பாளர்கள் போட்டியிடுவதாலும், மனு பரிசீலனை, வாபசுக்கு பின்னர் மேலும் வேட்பாளர்கள் குறைய வாய்ப்பிருப்பதாலும் ஒரு ஓட்டுப் பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து நேற்று சங்கரன்கோவிலில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மார்ச் 1 முதல் 16ம் தேதி வரை மத்திய அமைச்சர் அழகிரி சங்கரன்கோவிலில் தங்கியிருந்து பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறார். மார்ச் 5, 6 தேதிகளில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மார்ச் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஸ்டாலின், மார்ச் 15ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் ப¤ரசாரம் செய்கின்றனர். அதிமுக சார்பில் 32 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் 43 பேர் மூன்று யூனியன்களிலும் வலம் வந்த வண்ணம் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மார்ச் 14ம் தேதி பிரசாரம் செய்வார் என தெரிகிறது. மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ இரண்டு நாட்கள் பிரசாரம் செய்தார். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் மார்ச் 5ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறார். சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்வதில் சுறுசுறுப்பாக உள்ளன. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் நடக்கும் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகம், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கையை ஆதரிக்க கூடாது மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

Wednesday,February,29,2012
சென்னை::இலங்கை மீது போர் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக்கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை கடந்த திங்கள் கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா வாக்களிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக, இலங்கை போர் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இதயமற்றோர் பாணியில் விமர்சனம் செய்யாமல், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதோடு, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

புலம்பெயர் புலிகளின் திட்டத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்-கோத்தபாய ராஜபக்ஸ!

Wednesday,February,29,2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை தூக்கிப்பிடிக்கும் சர் வதேச சக்திகளுடன் இணைந்து தனி ஈழத்தைப் பெற்றுக்கொள்வதற்கு புலம்பெயர் புலிகள் முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று; பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார

மேற்கத்தேய சக்திகளின் பிரிவினைவாத நோக்கத்தை முறியடிப்பதற்கு ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன.

நாட்டில் மலர்ந்துள்ள சமாதானத்தைப் பிடுங்கி எடுப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை, உலகில் முறியடிக்க முடியாது என வர்ணிக்கப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்துக் காட்டியவர்கள் நாங்கள்.புலிகள் வீழ்ச்சியுற்றபின்னர் வடக்கில் தனியான ஆட்சி அலகொன்றை அமைப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன.

மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து, வடக்கு, கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுத்த இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது மீண்டும் பிரிவினைவாத, தீவிரவாதத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியாகும் எனவும் அவா கூறியுள்ளார

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய இருவர் வவுனியாவில் கைது!:-மாணவிகளை கேலி செய்த பாடசாலை மாணவர்கள் 43பேர் கொழும்பில் கைது!

Wednesday,February,29,2012
இலங்கை::இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துவந்த இருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலுள்ள தமிழர்களை வவுனியா முகாம் இராணுவத்தினர் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு போலி முத்திரைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு ஆவணங்கள் தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டிலுள்ள தமிழர்களின் இருப்பை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் முயற்சியால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவிகளை கேலி செய்த பாடசாலை மாணவர்கள் 43பேர் கொழும்பில் கைது!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல மகளிர் கல்லூரிகளுக்கு முன்னால் நின்று மாணவிகளை பகிடிவதைக்குட்படுத்தும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பிரபல ஆண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த 43 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸாரால் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியதாவது,

”இன்று பிற்பகல் வேளையில், கொழும்பில் அமைந்துள்ள பிரபல மகளிர் கல்லூரிகள் இரண்டுக்கு முன்னால் நின்றுள்ள பிரபல ஆண்கள் கல்லூரியொன்றைச் சேர்ந்த மாணவர் குழுவினர் மேற்படி மகளிர் கல்லூரி மாணவிகளை கேலி செய்துள்ளனர்.

அத்துடன், மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்டனர் என்று பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில், இது விடயமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த பொலிஸார் கலவரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களில் 43பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்” என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்

கூடங்குளம் விவகாரத்தில் ‘பகீர்’ தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.12 கோடி சப்ளை அம்பலம் : ஜெர்மன் ஆசாமி லேப்டாப்பில் ஆதாரம் சிக்கியது!

Wednesday,February,29,2012
நாகர்கோவில்::நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மன் ஆசாமி ஹெர்மன் ரூ.12 கோடி வரை தொண்டு நிறுவனங்களுக்கு பணம் சப்ளை செய்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து கூடங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 7 மாதமாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக காங்கிரசார் குற்றம் சாட்டி வந்தனர். பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறி, உதயகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே கூடங்குளம் போராட்டத்துக்கு உதவியதாக தொண்டு நிறுவனங்கள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மன் ஆசாமி சன்டெக் ரெய்னர் ஹெர்மனை கடந்த 26ம் தேதி மத்திய உளவு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசார் பிடித்து சென்னைக்கு அழைத்து சென்றனர். கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் ஆகியோருடன் இவருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதற்கான ஆதாரங்கள் இவரின் லேப்டாப், செல்போனில் இருப்பதாகவும் கூறினர். பின்னர் அவரை ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹெர்மனிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், மொபைல் போனை ஆய்வு செய்தோம். கூடங்குளம் தொடர்பான சில வரைபடங்கள் லேப்டாப்பில் இருந்தன. மேலும் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.12 கோடி அளவிலான பணபரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. கூடங்குளம் போராட் டம் தொடங்கிய 4 மாதங்களில் ரூ.4 கோடி பணபரிவர்த்தனை நடந்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் 12 முறை ஹெர்மன், நாகர்கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். இந்த ரூ.12 கோடி பணபரிவர்த்தனை கடந்த 6 வருடங்களுக்குள் நிகழ்ந்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை அனைத்தும் பினாமி பெயர்களில்தான் வந்திருக்கின்றன. ஹெர்மன் அமெரிக்காவின் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சவேந்திரசில்வா – அமெரிக்காவும் எதிர்ப்பு!

Wednesday,February,29,2012
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைக்கான ஆலோசனைக் குழுவில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதி சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டமைக்கு, அமெரிக்காவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நேற்றையதினம் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில், பிரான்ஸ் பிரதிநதிகளிடம் கேட்டுள்ளனர்.

எனினும் அதற்கு அவர்கள் ஒருவரும் பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது தொடர்பிலான கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கியுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளககும்;, இது பொருத்தமற்ற நியமனம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள், சவேந்திரசில்வாவுடனான சந்திப்பு ஒன்று குறித்து கோரிக்கை விடுத்துள்ளதாக, அவர்களின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் சவேந்திரசில்வா தரப்பில் இருந்து பதில்கள் எவையும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

கூடங்குளம் விவகாரத்தில் கருணாநிதி கேள்வி போராட்டக்காரர்களை தூண்டி விடுவது யார்?

Wednesday,February,29,2012
சென்னை::கூடங்குளம் விவகாரத்தில் போராட்டக்காரர்களை அரசு தூண்டிவிடுகிறதா அல்லது பின்னணியில் இருந்து உதவி செய்கிறதா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினமான மார்ச் 1ம் தேதி, இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு ரூ.1 கோடியிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டை ஒய¢எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கி, திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: ஸ்டாலின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு, 1 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பிறந்தநாள் விழாக்கள், நலிந்த ஏழை மக்களுக்கு பயன்பெறும் பொருட்களை வழங்குவதாக அமைய வேண்டும் என்று திமுக நீண்டகாலமாக பணியாற்றி வருகிறது. ஸ்டாலின், அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தால் பெற்ற புகழையும் அதற்கான அடையாளமாக வந்த விருதையும் இங்கே புகழ்ந்து பாராட்டினார்கள். இதை காணும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இந்த மேடையில், ஜெ.அன்பழகன் அரசியல் கலந்து பேசினார். அது அவர் குற்றம் அல்ல. இதற்கு முன்பு நடந்த இதுபோன்ற விழாவில் பேசியவர்கள் செய்த காரியங்களுக்கு பெறவேண்டிய பதிலை அவர் கூறியிருக்கிறார். திமுக ஆட்சியில் அங்கொன்று இங்கொன்றுமாக மின் தட்டுப்பாடு இருந்தது. மறுக்கவில்லை. தட்டுப்பாடு போக்க, டெல்லிக்கு ஓடி அலைந்து, பல மாநிலங்களுடன் தொடர்புகொண்டு மின்சாரத்தை கொண்டு வந்து மக்களை நிம்மதியாக இருக்க செய்த அரசு, திமுக அரசு. இன்று அதுவா நிலை? கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் காரியம் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி ஆகும் நிலை இருந்தும் அதை புறக்கணித்து அது எங்களுக்கு தேவையில்லை, அதை மூடவேண்டும் என்று நடக்கும் போராட்டத்தை இந்த அரசு அனுமதிக்கிறதா? அல்லது விமர்சிக்கிறதா? என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்கிறது. கூடங்குளத்தில் போராடும் மக்களை இந்த அரசு தூண்டி விடுகிறதா? அல்லது பின்னணியில் இருந்து உதவி செய்கிறதா? என்றால் அதற்கு இதுவரை பதில் இல்லை. மவுனம் சாதிக்கிறார்கள். உண்மை தெரிந்தவர்கள் மனம் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். உலகம் உணர்ந்துகொண்டு இருக்கிறது. சிலர் வேறு வழியின்றி வெளியே சொல்கிறார்கள்.

கூடங்குளத்தில் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு மின் உற்பத்தி செய்ய உதவியிருந்தால் இந்நேரம் தமிழகம் இருளில் இருந்திருக்குமா? போராடுபவர்களுக்கு உதவி செய்ய பின்புலமாக இருந்து கிளர்ச்சியை செய்ய அனுமதித்துவிட்டு இன்று முடியும், நாளை முடியும் அல்லது முடியாமல் போகுமா? என்ற கேள்விகளை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது. உண்மையை உணரும் வகையில் மக்களுக்கு விளக்கம் தரவேண்டிய கடமையை செய்ய இந்த அரசு ஏன் தவறிவிட்டது? கல்பாக்கம் அணுமின் நிலையம் எத்தனையோ ஆண்டுகளாக இருக்கிறது. இவர்கள் கூறும் ஆபத்து அங்கு ஏற்பட்டது உண்டா? ஆபத்துகளை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருந்தது உண்டா? கல்பாக்கம் அணுமின் நிலையத்தை அனுமதித்துள்ள நாம், கூடங்குளத்தில் எதிர்ப்பவர்களுக்கு மறைமுக ஆதரவு காட்டுவது புரியாத புதிராக இருக்கிறது. மாநில அரசு மவுனமாக இருக்கிறது. எத்தனையோ குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்தி, அதை கேட்க தயாரில்லை என்று இருந்துவிட்டு கடைசியாக நால்வர் குழு அமைத்து நேற்று ஒரு அறிக்கை தருகிறார்கள்.

அமெரிக்க, ரஷ்ய இயந்திரங்கள் வேலை செய்கிறது என்பதால் அவை வெற்றி பெறக்கூடாது என்று குற்றச்சாட்டு ஒருபுறம். அப்படி இல்லை என்று மறுக்கும் நிலை ஒருபுறம் இருக்க, இடையில் அகப்பட்டுக்கொண்டு விழிப்பது அவர்களுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்கள்தான். தமிழகம் இருளில் மூழ்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் உங்களை நடுகாட்டில் விட்டுவிடுவார்கள் என்று ஏற்கனவே கூறினோம். இப்போது, பாதி தூரத்திலேயே நடுக்காட்டில் நிறுத்தியிருக்கிறார்கள். நாம் நலிந்த மக்களுக்கு உதவிகளை செய்வது நாளை வரப்போகும் தேர்தலுக்காக அல்ல. இந்த ஆட்சியில் ஜனநாயகத்தை ஏற்கிறார்களா என்றால் இல்லை. எதிர்க்கட்சிகளை நசுக்குவது எப்படி? சிறையில் போடுவது எப்படி? குண்டர் சட்டம் உள்பட அனைத்து சட்டத்தையும் பயன்படுத்தி சீரழிப்பது என்று மக்களை இந்த அரசு துவம்சம் செய்கிறது. இந்த அரசின் கொட்டம் அடக்க, ஆரவாரம் அடங்க, அராஜகம் ஒடுங்க, நாம் அனைவரும் ஆர்த்தெழ வேண்டும். அந்த நாள், விரைவில் வரும். அதை கொண்டாடி மகிழ உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

மட்டக்களப்பில் பெண்ணொருவர் கைது!

Wednesday,February,29,2012
இலங்கை::மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்ட காலமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அம்பாறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

அம்பாறை கல்லோயா சந்தி பாலத்திற்கு அருகில் இன்று காலை ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

இதுவொரு கொலைச் சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் மேலும் குறிப்பிட்டார்.

கார்த்திக் கட்சி ‘காமெடி’ ஆரம்பம் மனு தாக்கல் செய்யும் பெண் கட்சியிலேயே இல்லையாம்!

Wednesday,February,29,2012
நெல்லை::சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் சுப்புலட்சுமி என்ற பெண் போட்டியிடுவதாக கூறி சங்கரன்கோவில் தாலுகா அலுவகத்தில் வேட்புமனுவை பெற்று சென்றார். இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக சுப்புலட்சுமி கூறினார். இந்நிலையில் சுப்புலட்சுமிக்கும், நாடாளும் மக்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று அக்கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வேதாந்தம் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் கார்த்திக் அறிவித்தபடி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக கூறிவிட்டோம். இந்நிலையில் சுப்புலட்சுமி தனித்து போட்டி என்றும், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் கூறி உள்ளார். அவருக்கும் எங்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதுபற்றி தலைவர் கார்த்திக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைலட் ‘பாம்’ அறிவிப்பு விமானத்தில் பதற்றம்!

Wednesday,February,29,2012
வாஷிங்டன்::அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் இருந்து லாங்ஐலேண்ட் நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது, தனது அறையில் இருந்தபடி பைலட் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘பாம் ஆன் போர்டு’ (விமானத்தில் பாம்) என்று காதில் விழுந்ததால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது எந்நேரமும் வெடித்து சிதறும் என்று கூறி பயணிகள் பதற்றம் அடைந்தனர். விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, பைலட் அறைக்கு ஓடினர். களேபரம் பற்றி அவரிடம் தெரிவித்தனர். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலரது அம்மா விமானத்தில் பயணிப்பதாகவும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘ஹேப்பி பர்த்டே டு மாம் ஆன் போர்டு’ என்றுதான் சொன்னேன் என பைலட் விளக்கினார். அதன் பிறகே, பதற்றம் தணிந்தது

இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Wednesday,February,29,2012
இலங்கை::இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இனவாத அடிப்படையில் செயற்படவில்லைஎன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாரியளவிலான படுகொலைகள், சட்டவிரோத கைதுகள் எதனையும் படையினர் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராவய பத்திரிகையின் 25ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1971, 1989-90 கிளர்ச்சி மற்றும் 30 ஆண்டுகால பயங்கரவாதம்ஆகியன மூலம் நாட்டு மக்களுக்கு இரத்தத்தையும் கண்ணீரையும் மட்டுமே பெற்றுக் கொண்டதாகக்குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கைக்கு எதிராக செயற்படமுயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: 'டேப்' ஆதாரம் இருப்பதாக பிரேமலதா தகவல்!

Wednesday,February,29,2012
சென்னை::சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, தங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட 3 பேர் காலில் விழாத குறையாக கெஞ்சியதாகக் கூறியுள்ளதோடு, அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இனியும் விஜய்காந்தை அதிமுக சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவரான விஜயகாந்த், இனி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த 'ராமு வசந்தன் இறந்ததும் அந்தப் பதவிக்காக, பல முக்கிய தலைகளும் போட்டியிட, இதை வைத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுக முயன்றதாகவும், இதனால் தான் அந்தப் பதவியை தானே வைத்துக் கொண்டார் விஜய்காந்த் என்கிறார்கள்.

கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் நடந்தன. அதில் தன்னந்தனியாகத் தைரியத்தோடு போட்டியிட்டது தே.மு.தி.க. ஆனால், 5 இடைத் தேர்தல்களில் போட்டி போடாமலேயே ஓடி ஒளிந்தவர்கள், பென்னாகரத்தில் டெபாசிட்டைப் பறி கொடுத்தவர்கள் எல்லாம் திராணி பற்றிப் பேசுகிறார்கள்.

அதிமுகவோடு கேப்டன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அந்த அம்மா ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? தே.மு.தி.கவோடு கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்கிறார் ஜெயலலிதா. நம்மோடு கூட்டணி சேர அவர்கள் எவ்வளவு இறங்கி வந்தார்கள் என்று சொன்னால், அவர்கள் முகத்திரை கிழிந்து தொங்கும். இப்போது, அமைச்சர்களாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அப்போது கேப்டனை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள்.

அவர்கள் என்னென்ன பேசினார்கள். நம்மோடு கூட்டணி வைக்க எப்படி எல்லாம் அலைந்தார்கள், காலில் விழாத குறையாக எப்படிக் கெஞ்சினார்கள் என்பதை எல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதைக் கேட்கும் தைரியம் அந்தம்மாவுக்கு உண்டா?. இனியும் எங்களை சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றார்.

முன்னதாக இந்தக் கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகளின் செல்போன்களை எல்லாம் தொண்டர் படையினர் வாங்கி வைத்துக் கொண்டே உள்ளே அனுப்பினார். இதற்கான காரணத்தையும் விஜய்காந்த் பின்னர் விளக்கினார்.

அவர் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வேட்பாளரை பொதுக் குழுவிற்கு முன்பாகவே ஏன் அறிவித்தேன் தெரியுமா? தேர்தலில் நாம் கலந்து கொள்வது தொடர்பான ஒரு சர்ச்சையை இந்தக் கூட்டத்தில் உருவாக்க அதிமுக சதித் திட்டம் தீட்டியிருந்தது. அதை முறியடிக்கத்தான் வேட்பாளரை அறிவித்துவிட்டுப் பொதுக்குழுவிற்கு வந்தேன்.

மேலும் வெளியிலிருந்து செல்போன் மூலம் இங்கே கலவரத்தை யாரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்றுதான் இங்கே செல்போன்களுக்குத் தடை விதித்தேன் என்றார்.

பிரித்தானியாவிலிருந்து வந்த இலங்கைப் பெண் சடலமாக மீட்பு!

Wednesday,February,29,2012
இலங்கை::கொள்ளுப்பிட்டி பகுதி ஹோட்டல் ஒன்றின் அறையிலிருந்து கத்திக்குத்து காயங்களுடன் பெண்ணின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கைப் பெண் ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அரசாங்க பிரதிநிதிகள் முட்டாள் தனமான வாக்குமூலங்களை ஜெனீவாவில் வழங்கக் கூடாது- தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது!

Wednesday,February,29,2012
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழு அளவில் நடைமுறைப்படுத்துகின்றமையானது சர்வதேச விசாரணைகளை விட ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே அரசாங்க பிரதிநிதிகள் முட்டாள் தனமான வாக்குமூலங்களை ஜெனீவாவில் வழங்கக் கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச குற்றவியல் விசாரணைகளுக்காக இலங்கையை பலியாக்கும் நோக்கிலேயே அமெரிக்காவின் தலைமையில் மேற்குலக நாடுகள் செயற்படுகின்றன. களச்சூழலை அறிந்து கடும் போக்குடன் அந்நாடுகளுக்கு எதிராக செயற்பட வேண்டும். அப்போது தான் சவால்களிலிருந்து மீள முடியும் என்று அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறுகையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை கண்டித்து அதற்கு எதிராக செயற்பட வேண்டுமே தவிர வீண் வாக்குமூலங்களைக் கொடுத்து நாட்டை ஆபத்தில் தள்ளிவிடக்கூடாது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் நல்ல விடயங்களை விட நாட்டிற்கு ஒவ்வாத பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய விடயங்களே கூடுதலாக காணப்படு கின்றது.

நல்லிணக்க ஆணைக்குழு பல சந்தர்ப்பங்களில் எல்லை மீறியும் செயற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பழைய விடயங்கள் தொடர்பில் தற்போது பேசுவது பயனற்றதாகும். எனவே அரசாங்கம் முழு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் உள்ளது. ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடல் அது பாரியளவு வெளிப்படா விட்டாலும் பிற்காலத்தில் ஆபத்துகள் ஏற்படுத்தக்கூடும்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டில் அமுல்படுத்தக் கூடாது. ஏனைய வலய நாடுகளுடன் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை-ரொபர்ட் ஓ பிளக்!

Wednesday,February,29,2012
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசியபிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம்நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில், ஐக்கியநாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாநியமிக்கப்பட்டமை குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணைகள்நடத்தப்படாத நிலையில் சவேந்திரவை, ஆசிய பிராந்திய வலய பிரதிநிதியாக நியமித்தமைபொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதியிலேயே பயணத்தை முடித்துக்கொண்ட தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்!

Wednesday,February,29,2012
தூத்துக்குடி::தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே துவங்கியது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சுமார் 152 கடல் மைல் தொலைவுள்ள இலங்கைக்கு முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து பயணத்தை மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே.வாசன் கடந்த 13.06.2011 அன்று தொடங்கி வைத்தார்.

ஒளமும்பையை சேர்ந்த பிளமிங்கோ லைனர்ஸ் என்ற தனியார் கப்பல் நிறுவனம் ாஸ்கார்டியா பிரின்ஸ்ா என்ற பயணிகள் கப்பலை இருநாடுகளுக்கு இடையே இயக்கி வந்தது. முதல் பயணத்தில் இந்தியாவில் இருந்து 201 பயணிகள் இலங்கை சென்றனர். தூத்துக்குடியில் இருந்து வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், இலங்கையில் இருந்து வியாழன், ஞாயிற்று கிழமைகளிலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இரு துறைமுகங்களில் இருந்தும் மாலை 6மணிக்கு புறப்படும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு சென்று சேரும் வகையில் பயணநேரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தால் வர்த்தகம் பெருகும், துறைமுகம் வளர்ச்சி அடையும், சுற்றுலா வளர்ச்சி மேம்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 18ம் தேதியன்று தூத்துக்குடியில் இருந்து இலங்கை சென்ற பயணிகள் கப்பல் அதன்பின்னர் தூத்துக்குடிக்கு திரும்பவே இல்லை.

எதிர்பார்த்த அளவிற்கு வருவாய் இல்லாததால் பயணிகள் கப்பல்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று பிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனம் பொய்யான தகவலை சொல்லி முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்தது. ஆனால் வாங்கிய எரிபொளுக்குரிய பணத்தை கட்டாததால் தான் பயணிகள் கப்பல் இலங்கை துறைமுகத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளது என்ற ாாகுட்டுாா வெளிப்பட்டுள்ளது.

அதாவது, தூத்துக்குடிரூஇலங்கை பயணிகள் கப்பலுக்கான எரிபொருள் எம்.ஏ.ராசிக் அன்ட் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சப்ளை செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் எரிபொருள் நிரப்பிய வகையில் கப்பல் நிறுவனம் எண்ணெய் நிறுவனத்திற்கு 478,173.23 அமெரிக்க டாலரை(இந்திய மதிப்பு 2கோடியே 48லட்சத்து 65ஆயிரத்து 8ரூபாய்) பாக்கி வைத்துள்ளது.

பாக்கி பணத்தை எண்ணெய் நிறுவனம் கப்பல் நிறுவனத்திடம் பலமுறை கேட்டபோதும் ாாகவுண்டமணிரூசெந்தில் வாழைப்பழ காமெடிாா போன்று பணத்தை கட்ட கப்பல் நிறுவனம் முன்வரவில்லை. பணம் கேட்டு கேட்டு வெறுத்துப்போன எண்ணெய் நிறுவனம் நீதி கேட்டு இலங்கை வர்த்தக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயதிலக் தூத்துக்குடிரூஇலங்கை பயணிகள் கப்பலை தடுத்து வைக்குமாறு இலங்கை துறைமுக சபை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவின்பேரில் தூத்துக்குடிரூஇலங்கை பயணிகள் கப்பல் இலங்கை துறைமுகத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மனதில் 100 ஆண்டு கனவாக இருந்த தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல் சேவை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதத்துடன் முற்றுப்பெற்றுள்ளது மத்திய அரசுக்கு சுனாமி எனும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதற்கிடையே பலஆண்டு கனவாக இருந்து செயல்பாட்டுக்கு வந்த தூத்துக்குடிரூஇலங்கை பயணிகள் கப்பல் மீண்டும் தனது சேவையை துவங்கவேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள், வர்த்தகர்களின் விருப்பமாகும். சுற்றுலா பயணிகள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை துவங்குமா என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான்.

பாக்ஸ் செய்திகள்

அன்றே எதிர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா

தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு கடந்த 2004ம் ஆண்டில் பயணிகள் கப்பல் சேவை துவங்குவதாக இருந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த முதல்வர் ஜெயலலிதா இந்த கப்பல் சேவை தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது.

பிரமாண்டமான கப்பல் குட்டி கப்பலாகிறது! கப்பல் நிறுவனம்

9அடுக்குகளை கொண்ட பிரமாண்டமான ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பலில் ஒரேநேரத்தில் 1040 பயணிகள் பயணிக்கலாம். ஆனால் சுமார் 30முதல் 50 பயணிகளே பயணித்ததால் கப்பல் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எனவே பிரமாண்டமான கப்பலுக்கு பதிலாக 500பேர் பயணிக்கும் குட்டிக்கப்பலை இயக்க பிளம்மிங்கோ லைனர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

கப்பல் நிறுவனம், தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்வதற்காக கப்பல் தளத்திற்கு விதிக்கப்படும் கட்டணத்தில் சலுகை அளிக்கவேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை துறைமுக சபையிடம் வைத்துள்ளது. கப்பலை இயக்குவதற்காக கப்பல் நிறுவனம் துறைமுக சபைக்கு 7கோடி ரூபாய் பணம் கட்டியுள்ளது. 10ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் இதே தொகையை கட்டவேண்டுமாம்.(அம்மாடியோவ்)

இந்நிலையில் கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் பயணிகளுக்கு குடியுரிமை சோதனை, பாதுகாப்பு சோதனைகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளவேண்டும் என்று கோரியுள்ளோம்.

விரைவில் பெரிய கப்பலுக்கு பதிலாக குட்டிக்கப்பலை வழக்கம்போல இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதுஎப்படியோ மீண்டும் கப்பல்சேவை வழக்கம்போல நடந்தால் சரிதான் என்பதே இருநாட்டு சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பாகும்.

தேசிய நல்லிணக்கத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது - தாய்லாந்து

Wednesday,February,29,2012
ஜெனீவா::தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக தாய்லாந்து பாராட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சுரபோங் ரொவிசக்சய்குல் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துக்கான இராஜாங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெரமி பிரௌன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான பொறுப்புக் கூறல் குறித்த விடயம் இடம்பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஊக்கமளிக்கும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விரைவில் தீர்வு: கூடன்குளம் பற்றிய அறிக்கை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வல்லுனர் குழு அளித்தது!

Wednesday,February,29,2012
சென்னை::கூடங்குளம் விவகாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆய்வு அறிக்கையை நேற்று அளித்தது. அதைத் தொடர்ந்து பிரச்னையில் விரைவில் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் திறப்பதை எதிர்த்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் விளக்கத்தை போராட்டக்குழுவினர் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு வல்லுநர் குழுவை அமைத்தது. குழுவில் அணுமின் சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டி.அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர் டாக்டர் எஸ்.இனியன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எல்.என்.விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிபுணர் குழு, கூடங்குளம் பகுதிக்கு கடந்த 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே தற்போது நிலவும் அச்ச உணர்வு குறித்து ஆய்வு செய்து திரும்பியது. பின்னர் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்து ஒரு வாரம் ஆய்வு அறிக்கையை தயார் செய்தது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிபுணர் குழு தனது அறிக்கையை வழங்கியது. அப்போது தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உடனிருந்தார். இதுகுறித்து நிபுணர் குழு கூறியதாவது: கூடங்குளம் சென்று அங்குள்ள அணுமின் நிலையத்தை பார்வையிட்டோம். அணுஉலை பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புகள் குறித்து தெரிந்து கொண்டோம். மேலும் அப்பகுதி மக்களின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

நாங்கள் பார்த்தது, அப்பகுதி மக்கள் எங்களிடம் கூறியதை அறிக்கையாக தயார் செய்து தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளோம். தமிழக அரசுதான் இனி இறுதி முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாநில அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதைத் தொடர்ந்து, ஓரிரு நாளில் தமிழக அரசு தன் முடிவை வெளிப்படுத்தும். இதனால், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு நிதி உதவி அளித்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த, ரெய்னர் ஹெர்மன்(50) என்பவரை கியூ பிரிவு போலீசார் பிடித்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். பின் அவர், ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், போராட்டக் குழுவுக்கு 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி அளித்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த அமைப்பு மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

* நன்கொடை விவகாரத்தில் 4 நிறுவனம் சிக்கின.
* கைதான ஜெர்மன் நபர் அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
* தமிழக அரசு குழு அறிக்கை மூலம் முடிவுக்கு வருகிறது பிரச்னை.

அரசாங்கத்தின் உறவுக்குக் கரம் கொடுத்து மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து மதிநுட்ப சிந்தனையில் மட்டுமே நாம் செயற்பட்டு வருகின்றோம்-டக்ளஸ் தேவானந்தா!

Wednesday,February,29,2012
ஜெனிவா::நாம் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படியே தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம் என்றும், இதன் அப்படையில் நாம் வகுத்திருக்கும் எமது கட்சியின் நடைமுறை சார்ந்த நிகழ்ச்சி நிரலின் படியே இன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் கலந்துகொண்டுள்ளோம்" என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பியின் ஐரோப்பிய உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, தேர்தல் முடிந்தவுடன் அதற்கு மாறான செயற்பாட்டையும் கருத்துக்களையும் மாற்றி செயற்படுபவர்கள் அல்ல.

எந்த வாக்குறுதியினை நாம் எமது மக்களுக்கு வழங்கியிருந்தோமோ, எந்த வழிமுறையில் நாம் செயற்படுவோம் என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தோமே அதையே நாம் தொடர்ந்தும் செய்து வருகின்றோம்.

எமது கனவுகளும், இலட்சியங்களும் தமிழ் பேசும் மக்களை அரசியல் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக எமது மண்ணிலே வாழ வைப்பதேயாகும். அதற்காக நாம் வெறுமனே அரசியல் தீர்வு குறித்த எண்ணங்களோடு மட்டும் செயற்படுபவர்கள் அல்ல.

அழிந்து சிதைந்து போன எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தும் புனித இலட்சியப் பணிகளிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அபிவிருத்திப் பணிகளை கைவிட்டு அரசியல் தீர்வையோ, அன்றி அரசியல் தீர்வை கைவிட்டு அபிவிருத்திப் பணிகளையோ நாம் ஒருபோதும் முன்னெடுக்கப் போவதில்லை. இரண்டுமே இங்கு பிரதானம்.

எமது மக்களுக்கான அரசியல் தீர்வையும், அபிவிருத்திப் பணிகளையும் நிறைவேற்ற வேண்டுமேயானால் தோற்றுப்போன பழைய வழிமுறைக்குள் நாம் மயங்கிக்கிடக்க முடியாது. அல்லது இதுவரை அழிவுகளை தவிர எதையுமே பெற்றுத்தராத வெறும் எதிர்ப்பு அரசியல் என்ற கற்பனைக் கோட்டைக்குள் உறங்கிக் கிடக்கவும் முடியாது.

இதுவரை காலமும் சக தமிழ் அரசியல் தலைமைகள் முன்னெடுத்து வந்த வழிமுறைகள் யாவும் தோற்றுப்போனாலும், எமது எண்ணங்களில் நாம் நட்டு வளர்த்த இலட்சியப் பயிர்கள் ஒருபோதும் கருகிவிடப்போவதில்லை.

அரசாங்கத்துடன் அர்த்தமற்ற பகமையுணர்வுகளை வளர்ப்பதாலோ, அன்றி இன சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டி விடுவதாலோ நாம் அடைய வேண்டிய அரசியலுரிமை சுதந்திரத்தை அடைந்து விடமுடியாது. இதுவே இன்றைய யதார்த்தம். எமது அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடங்களும் இவைகளே.

அரசாங்கத்தின் உறவுக்குக் கரம் கொடுத்து, எமது மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து மதிநுட்ப சிந்தனையில் மட்டுமே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

இணக்க அரசியல் வழிமுறை என்பது யாரும் அவதூறுகளை பொழிவது போல் சரணாகதி அரசியல் அல்ல. யாருடன் பேசி எமது மக்களுக்கான சகல விடயங்களையும் சாதித்து பெற முடியுமோ அவர்களுடனேயே நாம் கைகுலுக்கி நிற்கின்றோம்.

பூட்டிய அறைக்குள் நாங்கள் கைகுலுக்கவில்லை. உலகத்தின் பார்வைக்கு எங்கள் முகங்களை காட்டி வெளிச்சத்தில் நின்றே கைகுலுக்குகின்றோம். நாங்கள் வீரம் பேசவில்லை. விவேகத்தை பயன்படுத்துகின்றோம்.

எங்கள் பாதையில் அழிவுகள் இல்லை. ஆக்கமே இருக்கின்றது. ஆனாலும் தாமதங்கள் உண்டு, மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப்பாயும் வெற்றிகள் எமக்கு நிச்சயம்.

இவ்வாறு நாம் யதார்த்தமான உண்மைகளை பேசியே தமிழ்த் தலைவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை நாம் எமது மக்களிடம் இருந்து பெற்றிருந்தோம்.

நாம் எமது மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணக்கமாக பேசியே எமது மக்களின் அரசியலுரிமைக்கான தீர்வு முயற்சியிலும், அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்து பூசவும், இனியொரு அவலம் எமது மண்ணில் நடவாது தடுக்கவும், எமது மக்கள் சுமந்து வந்த இழப்புகளுக்கு ஈடாக அவர்களுக்கு அரசியலுரிமை தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கவுமே நாம் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றோம்.

எமது நல்லெண்ண சமிஞையை எமது மக்களின் சார்பாக அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தவே நான் இன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்ளவும் வந்திருக்கின்றேன்.

எமது நடைமுறைச் சாத்தியமான இணக்க அரசியல் வழிமுறையின் ஊடாக எமது மக்களை நீடித்த மகிழ்ச்சியோடும் நிரந்தர அரசியல் உரிமையோடும் முகமுயர்த்தி வாழ வைக்கும் எமது உழைப்பின் மீது அவதூறுகளை யார் பொழிந்தாலும் அது குறித்து நாம் அக்கறை செலுத்தப் போவதில்லை" என்றார்.

:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 22 மீனவர்கள், இன்று, தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

சென்னை::இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 22 மீனவர்கள், இன்று, தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்தில் இருந்து, கடந்த 25ம் தேதி, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். 26ம் தேதி, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த, 22 மீனவர்களையும், அவர்களது, ஐந்து படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து, இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கொழும்பு மற்றும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய தூதரகங்களை தமிழக அரசு அணுகி, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது.இதையேற்ற தலைமன்னார் கோர்ட், 27ம் தேதி, 22 மீனவர்களையும், அவர்களது, ஐந்து படகுகளையும் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுவித்தது.இலங்கை கடற்படையினரிடம் இவர்களை ஒப்படைத்த பின், இந்திய கடலோரக் காவல் படை, தமிழகத்துக்கு இன்று அழைத்து வரும் என, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் சேர்ப்பு!

Wednesday,February,29,2012
புதுடில்லி::ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், 10 ஆண்டு குத்தகையின் பேரில், அடுத்த மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. அணு குண்டை ஏந்திச் செல்லும் வல்லமை படைத்த அக்னி,பிருத்வி உள்ளிட்ட ஏவுகணைகளை, இந்திய பாதுகாப்பு படை வைத்துள்ளது. இதற்கிடையே, வல்லரசு நாடுகளுக்கு இணையாக அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் பொருட்டு, ரஷ்யாவின் "அக்குலா-2' நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டு குத்தகைக்கு வாங்கியுள்ளது. இந்தக் கப்பல், அடுத்த மாதம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்துக்கு வந்து சேர்கிறது. அதன் பிறகு, இந்தக் கப்பலுக்கு "ஐ.என்.எஸ்.சக்ரா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நமது கடற்படை வீரர்கள் இந்தக் கப்பலை இயக்கத் துவங்குவர்.

மும்பை தாக்குதல் பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் அரசு பரபரப்பு பதில்!

Wednesday,February,29,2012
புதுடில்லி::இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான், கடந்த 2008ம் ஆண்டு, மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது' என, சுப்ரீம் கோர்ட்டில், அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மும்பையில், கடந்த 2008 நவம்பரில், பாகிஸ்தானில் இருந்து வந்த பத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். கீழ் கோர்ட்டில், கசாபுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. இதை எதிர்த்து, கசாப் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கசாபுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு தடை விதித்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அப்தாப் ஆலம், சி.கே.பிரசாத் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பைத் தாக்குதல் சம்பவம், இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடத்தப்பட்டது. புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையிலும், சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சாட்சியங்களின் மூலம், இது தெரியவந்தது. பாகிஸ்தானை சேர்ந்த பத்து பயங்கரவாதிகள் தான், இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர். இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள், இந்த தாக்குதலை நடத்தியதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம், இங்குள்ள சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு இடையே வன்முறையை ஏற்படுத்தும் நோக்கத்துடன், இந்த சதித் திட்டத்தை, பாக்., பயங்கரவாதிகள் தீட்டியுள்ளனர். இந்த பிரச்னைக்கு, சுப்ரீம் கோர்ட் தீர்வு காண வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே, இந்த தாக்குதலில் ஈடுபட்ட கசாபுக்கு, மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் இந்து சமுத்திர கடற்படை மாநாடு ஆரம்பம்: 14 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

Wednesday,February,29,2012
இலங்கை::இந்து சமுத்திர கடற்படை மாநாடு கொழும்பு (Indian Ocean Naval Symposium) கலதாரி ஹோட்டலில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்ட மாநாட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 60 ற்கும் மேற்பட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

செயற்பாட்டுத் திறன் தொடர்பாக தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டிணைப்பை மேம்படுத்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டை இலங்கை கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜயந்த பெரேரா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனேசியா, கென்யா, குவைட், ஓமான், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா, தான்ஸானிய்யா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்ற இந்த மாநாட்டின் போது கடற்படை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி பட்டறையும் இடம் பெறவுள்ளது.

பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கையை மையமாக கொண்டு 2008 ம் ஆண்டு இந்த சமுத்திர கடற்படை மாநாடு (யிலினிஷி) முதற்தடைவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடல் பாதுகாப்பு, ஸ்தீரம், கூட்டிணைப்பு போன்ற விடயங்களில் இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் ஊடாக பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

பிராந்திய நாடுகளின் கடற்படை தளபதிகள், உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமது அபிப்பிராயங்களையும், அனுபவங்களையும் முன்வைக்கவுள்ளனர்.

இந்து சமுத்திர பிராந்திய கடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் தொடர்பாக இம்முறை மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

Tuesday, February 28, 2012

திமுகவுக்கு முழுக்கு.. அதிமுகவில் இணைகிறார் பாக்யராஜ்!

Tuesday, February 28, 2012
சென்னை::திமுகவில் உள்ள இயக்குனருமான பாக்யராஜ் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

1970, 80களில் முன்னணி நடிகர், இயக்குனராக இருந்த இவர் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தார்.

எம்ஜிஆர் மறைந்த பின் 1989ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கினார். ஆனால், அது கரையேறாததால் அந்தக் கட்சியை கலைத்தார். 2006ம் ஆண்டு திடீரென திமுகவில் இணைந்தார்.

தற்போது திமுகவில் பேச்சாளராக இருந்து வருகிறார். ஆனால், இவரை திமுக தனது ஆதாயத்துக்காக சும்மா பயன்படுத்திக் கொண்டதே தவிர, அவருக்கு எதையும் செய்யவில்லை.

இந் நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் இணைய பாக்யராஜ் விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் அனுப்பி விட்டதாகவும் அவரது அழைப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பாக்யராஜ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விழாவே நடைபெறவில்லை.

இந் நிலையில் அவருக்கு அதிமுகவிலிருந்து எந்த நேரமும் அழைப்பு வரலாம் என்கிறார்கள்.

இந்தியா இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் - மஹிந்த சமரசிங்க!

Tuesday, February 28, 2012
ஜெனீவா::இந்தியா இலங்கைக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என அமைச்சர்மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பூரண ஒத்துழைப்பு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்பூரணமாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கம் மற்றும்நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் தெளிவுபடுத்தியதாகத்தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றுவதா அல்லது கைவிடுவதா என்பதனை சம்பந்தப்பட்டத்தரப்பினரே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானிய கருத்துக்களை வெளியிடுவதில்லை-இலங்கை

Tuesday, February 28, 2012
இலங்கை::பிரித்தானிய அரசாங்கத்தின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் ஐயம் வெளியிட்டுள்ள அதேவேளை, மனித உரிமை விவகாரங்களில் பிரித்தானியா இரட்டை வேடமிட்டுள்ளதாக விமர்சித்துள்ளது.

பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஈராக்கில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஜெர்மி பிறவுணினால் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரை தொடர்பில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரித்தானிய படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானிய கருத்துக்களை வெளியிடுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்முனையில் இன்றும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Tuesday, February 28, 2012
இலங்கை::மேற்குலக நாடுகளை அராஜகத்தை கண்டித்து தாய் நாட்டை காக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்றும் கல்முனையில் இடம் பெற்றது . பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்,கல்முனை மாநகர் முதல்வர் சிராஸ் மீரா சாஹிப்,மாகான சபை உறுப்பினர் துல்சான் ஆகியோரின் பங்களிப்புடன் காமுனை ,சாய்ந்தமரு வாழ் பொதுமக்களும்,கல்முனை மாநகர் சபை உறுப்பினர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கல்முனை நகர்வரை சென்று முடிவடைந்தது, இன்றைய தினம் சாய்ந்தமருது,கல்முனை பிரதேச வர்த்தக நிலையங்கள் முற்றாக அடைக்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடை பெற்றது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஜெ.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் : மத்திய அமைச்சர் அழகிரி ஆவேசம்!

Tuesday, February 28, 2012
சங்கரன்கோவில்::பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தினாலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என மமதையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேசினார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை அறிமுகப்படுத்தி கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ரயில்வே பீடர் ரோடில் உள்ள வைஷ்ணவி மகாலில் இன்று நடந்தது. இதில் மு.க. அழகிரி பேசியதாவது: மின்தடையால் தமிழகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பால் விலை, பஸ்கட்டணம் உயர்த்தினாலும், மின்தடையாலும் எந்த விதத்திலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என மமதையுடன் ஜெயலலிதா பேசியுள்ளார். அவரது மமதை பேச்சுக்கு பாடம் புகட்ட கட்சித் தொண்டர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். கடந்த திருமங்கலம், திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனக்கூறினேனோ அதேபோல் வெற்றி பெற்றது. சங்கரன்கோவிலிலும், 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அழகிரி பேசினார். சர்வாதிகார ஆட்சி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது இல்லை. ஜெயலலிதா தவறுகளை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பளிக்கும் தேர்தல். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை. ஆட்சிக்கு வந்தபிறகு சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று வாதாடி நல்ல தீர்ப்பை பெற்றோம். இதே போன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுவும் தவறு என்று கோர்ட் சுட்டிக் காட்டியது. மக்கள்நல பணியாளர்கள் பணி நீக்கத்திற்கும் கோர்ட் தடை விதித்தது. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடக்கவில்லை. கோர்ட் தீர்ப்புப்படி தான் ஆட்சி நடக்கிறது. இதை விட வெட்கக் கேடு எதுவும் இல்லை. சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் கூட சுதந்திரமாக பேச முடியவில்லை. ஆணவம், அகந்தையுடன் சவால்விட்டு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எனவே இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

இதய நோயாளிகளுக்கு நிதி திரட்ட மலை ஏறுகிறான் இந்திய சுள்ளான்!

Tuesday, February 28, 2012
லண்டன்::இதய நோயால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் நிதி திரட்ட இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 7 வயது சிறுவன் உயரமான மலைஉச்சியில் ஏறி சாதனை படைக்க உள்ளான். இங்கிலாந்தின் லீசஸ்டர்ஷயர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சேஷ் சர்மா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மனைவி, லியான். இவர்களது மகன் ஜெய்சர்மா (7). இவன் ஸ்காட்லாந்தில் இதய நோயாளிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக நிதி திரட்டி வருகிறான். இதன் தொடர்ச்சியாக ஸ்காட்லாந்தில் உள்ள மிகப்பெரிய பென்நேவிஸ் மலை உச்சியில் ஏறி சாதனை படைக்க உள்ளான். இதுகுறித்து சிறுவனின் தந்தை சஞ்சேஷ் கூறியதாவது: கர்ப்பத்தில் இருக்கும்போதே ஜெய்க்கு இதய பாதிப்பு இருந்தது. கருக்கலைப்பு செய்து கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதை மறுத்துவிட்டு உரிய மருத்துவ பரிசோதனை, சிகிச்சை எடுத்துக்கொண்டோம். தற்போது ஆரோக்கியமாக உள்ள ஜெய், சிஸ்டன் பகுதியில் உள்ள மெர்டன் ஆரம்ப பள்ளியில் படிக்கிறான். அவன் மிகவும் துடிப்பானவன். சாதனைகள் செய்வதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதும் அவனுக்கு விருப்பமான விஷயங்கள். இதயஅறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு நிதி திரட்ட திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினோம். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, மலையேறும் சாதனையை ஜெய் சர்மா நிகழ்த்த உள்ளான்.

மகஸீன் சிறைச்சாலை வன்முறை; 46 பேருக்கு விளக்கமறியல்!

Tuesday, February 28, 2012
இலங்கை::சிறைச்சாலையில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 46 சிறைக்கைதிகளை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறைச் சம்பங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 59 சிறைக்கைதிகளில் 46 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 13 பேரை கைதுசெய்ய வேண்டியுள்ளதாகவும் வழக்கு விசாரணையின்போது மேலதிக நீதவான் பிரகார்ஷ ரணசிங்கவிடம், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கூறினர்.

சேதமடைந்த சொத்து மற்றும் உபகரணங்களின் பெறுமதி 4,700,000 ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் உண்மையான சேதவிபரங்கள் கண்டறியப்படவில்லையெனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஹோமோ, லெஸ்பியன் செக்ஸை எதிர்க்கவில்லை-உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு 'அந்தர் பல்டி!

Tuesday, February 28, 2012
டெல்லி::இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தது.

இதனால் கடுப்பான உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எரிச்சலையும் வெளிப்படுத்தினர்.

ஓரினச் சேர்க்கை தவறல்ல எனறு கடந்த 2009ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக அப்பீல் செய்துள்ளவர்களில் தமிழ்நாடு முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகம், பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந் நிலையில் கடந்த 23ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் என்று கூறி மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிபி மல்ஹோத்ரா ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மேலும் இது இயற்கைக்கும் முரணானதாகும். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம் மற்ற கலாச்சாரங்களை விட மாறுபட்டது. எனவே, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் ஜகா வாங்கியது. மத்திய அரசின் இந்த தடுமாற்றமான நிலைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந் நிலையில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.

ஹோமோ இஸ் ஓ.கே-நலத்துறை அமைச்சகம்:

இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு இன்று மீண்டும் ஒரேயடியாக 'அந்தர் பல்டி' அடித்தது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஓரினச் சேர்க்கை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை ஏற்கிறோம் (அதாவது, ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறோம்) என்று கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே, இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வரும் மத்திய அரசு இன்று அடித்த அந்தர் பல்டியும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எரிச்சல் அடைய வைத்துவிட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்குறியதாக்காதீர்கள், எங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள். ஓரினச் சேர்க்கை விவகாரத்தை கேலிக்குறியதாக்கி விடாதீர்கள் என்று காட்டமாகக் கூறினர்.

ஜெயலலிதா பேனர் கிழிப்பு அதிமுக கவுன்சிலர்-வட்ட செயலாளர் மோதல் : சோடா பாட்டில் வீச்சு ஓட்டேரியில் பரபரப்பு!

Tuesday, February 28, 2012
பெரம்பூர்::முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டேரியில் ஜெயலலிதா படத்துடன் கூடிய பேனர்களை மாநகராட்சி 75வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்தான கிருஷ்ணன் வைத்திருந்தார். இந்த பேனர்களில், அதே வார்டு வட்ட செயலாளர் பாண்டியன் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 2 பேனர்களை கிழித்தனர். இது சந்தான கிருஷ்ணனுக்கு தெரிந்தது. இந்நிலையில், நேற்று மாலை, செல்லப்பா முதலி தெருவுக்கு சந்தான கிருஷ்ணன், சிலருடன் வந்தார். அப்போது, பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். ‘எதற்காக பேனரை கிழித்தாய்Õ என்று சந்தான கிருஷ்ணன் கேட்டார். ‘அப்படித்தான் கிழிப்பேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்Õ என்று பாண்டியன் கூறியுள்ளார். அதோடு ஜாதி பெயரையும் கூறி தகராத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை சந்தான கிருஷ்ணனுடன் இருந்த திருவிக நகர் சிறுபான்மை செயலாளர் ஆண்ட்ரூஸ் தட்டி கேட்டுள்ளார். வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து, ஆண்ட்ரூஸ், பிரபா ஆகியோரை சோடா பாட்டில் வீசி தாக்கினர். பதிலுக்கு அவர்களும் தாக்கினர். இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் ஓட்டேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார், அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சந்தான கிருஷ்ணனுக்கு வெற்றிவேல் எம்எல்ஏவும், பாண்டியனுக்கு நீலகண்டன் எம்எல்ஏவும் ஆதரவாக பேசினர். இதில் சமாதானம் ஏதும் ஏற்படாததால் நாளை (இன்று) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி புளியந்தோப்பு உதவி கமிஷனர் லோகநாதன் கூறி அனுப்பி வைத்தார். இந்த மோதல் சம்பவத்தால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா அடிப்படை ஆட்சேபனைகள் மீதான உத்தரவு மீண்டும் ஒத்திவைப்பு!

Tuesday, February 28, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹைகோப் வழக்கில் அடிப்படை ஆட்சேபனைகள் மீதான உத்தரவு இரண்டாவது தடவையாக இன்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக மேலும் விளக்கமளிக்க வேண்டியுள்ளதால் மார்ச் மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 1.30 வரை அதனை ஒத்திவைப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இன்று தெரிவித்துள்ளார்.

இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோது பிரதிவாதிகள் சார்பில் அடிப்படை ஆட்சேபனையொன்றை தாக்கல் செய்த சட்டத்தரணி சாலிய பீரீஸ், ஏற்கனவே இதற்கு சமமான குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக மேலுமொரு நீதிமன்றத்தில் அந்தக் குற்றச்சாட்டுக்கு சமமான குற்றச்சாட்டொன்றை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைய சந்தர்ப்பம் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த வழக்கு நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பினர்கள் சார்பிலும் இதன்போது வாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன் பிரதிவாதிகள் சார்பில் இராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் குற்றச்சாட்டு மற்றும் சாட்சியங்கள் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

சமாதான காலத்தில் துணை ஆயுதக் குழுக்களே பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்!

Tuesday, February 28, 2012
இலங்கை::சமாதான காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கோ, புலிகளுக்கோ எதுவித தொடர்பும் இல்லை. மாறாக துணை ஆயுதக் குழுக்களே பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக இத்தகைய கடத்தல்களில் ஈடுபட்டன ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மீளிணக்கக் கருத்துக்கான குழுவின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவவிஜயசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காலை அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற மீளிணக்கத்துக்கான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமய, சமூக, பொருளாதார, கல்வியாளர்கள் மற்றும் பிரதேச செயலர்கள், காவற்துறையினர் கலந்து கொண்டனர்.

யாழ். மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகளில் முன்னேற்றம் தேவை மற்றும் இளம் சமுதாயம் தவறான வழிகளால் அழிந்து போகின்றது. பாடசாலை மாணவிகள் இளம் வயதிலேயே கர்ப்பம் தரிக்கின்றனர். தமிழர்களுக்குரிய பண்பாடு, கலாசாரம் என்பன அழிந்து செல்கின்றன என்று சமூகச் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் யாழ். மாவட்டத்டதில் தமிழ் மக்களின் பாரம்பரியங்களைப் பேணிக்காக்கின்ற வகையில் அருங்காட்சியகம் எதுவுமில்லை. எனவே தமிழர்களின் வாழ்வியலைப் பேணிக்காக்கின்ற வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

ஏ9 பிரதான வீதியூடாக பயணம் செய்கின்றபோது ஓமந்தையில் நள்ளிரவு 12 மணிக்கு பேருந்தினால் இறக்கி மக்கள் பொதிகளுடன் நீண்ட தூரம் நடக்கவிடப்படுகின்றனர். இத்தகைய சிரமங்கள் நீக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. கலந்துரையாடலில் பங்கு பற்றிய காவற்துறையினரிடம் இது தொடர்பில் ஆராயுமாறு பேராசிரியர் ரஜீவவிஜயசிங்க பணித்தார்.

யாழ்.கொழும்பு தனியார் பேருந்து வழி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபா வரையில் அறவிடப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையின் எந்தப் பாகத்துக்குமான வழி அனுமதிப்பத்திரம் இவ்வாறான பெருந்தொகைப் பணம் அறவிடப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகளுடன் மாணவர்கள் வீதிகளில் நின்று சேஷ்டை விடுகின்றனர். இதனைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் போது கூறப்பட்டது.

இறுதியாக யாழ். குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ளன. அத்துடன் பொதுமக்களின் வீடுகளில் இராணுவத்தினர் தங்கியிருப்பதால் மக்கள் அகதி முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

மேலும் இராணுவத்தினர் சிவில் நடவடிக்கைகளிலும் தலையிடுகின்றனர். இவ்வாறு சமூக மட்டப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு, சரியான தரவுகள் இன்றி இப்படிக் கூறவேண்டாம். எந்த இடங்களில் பிரச்சினை உள்ளது குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்று பேராசிரியர் வினவினார்.

யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவுற்ற போதும் இதுவரையில் நிரந்தரத் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் எதுவும் தெரியாது என்று சமூகமட்டப் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர்.சமாதான காலத்தில் காணாமற்போனவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அதேபோன்று இவர்கள் விடுதலைப் புலிகளாலும் கடத்தப்படவில்லை. மாறாக துணை ஆயுதக் குழுக்களாலேயே பழிவாங்கல்களுக்காகக் கடத்தப்பட்டனர்.

இதனைவிட இறுதி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வைத்தியசாலைகள் மீது இராணுவத்தினர் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மனி நபர் கைது : பல கோடி பறிமுதல் : கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் தொடர்பு!

Tuesday, February 28, 2012
நாகர்கோவில்::நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொடர் போராட் டம் நடந்து வருகிறது.
இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு 3 வெளிநாட்டு என்.ஜி.ஓ.க்கள் மூலம் பண உதவி செய்யப்படுவதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். இந்நிலையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவரை நாகர்கோவில் செட்டிக்குளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து, நேற்று காலை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை அவசர, அவசரமாக சென்னைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவரது பெயர் சன்டெக் ரெய்னர் ஹெர்மன் (50) என தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தங்கி இருந்த லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது என்.ஜி.ஓ.க்கள் பெயரில் பணம் சப்ளை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன. மேலும் அவரது மொபைல் போனை போலீசார் சோதனை செய்த போது, கூடங்குளம் போராட்ட குழுவினரோடு அவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. சுற்றுலா விசாவில் ஹெர்மன் இந்தியா வந்துள்ளார். அவரிடம் இருந்த பணம் முழுவதும் கூடங்குளம் போராட்ட குழுவினருக்கு வினியோகம் செய்ய இருந்ததா? உளவு பார்க்கும் வேலையில் அவர் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது மொபைல் போனில் இருந்த எண்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 முக்கிய பிரமுகர்களும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஹெர்மனின் விசா ரத்து செய்யப்பட்டு நேற்று இரவு அவர் தனது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, கோணாவில் பகுதி யூனியன்குளத்தில் ஆதிகாலை வேளையில் கொள்ளை!

Tuesday, February 28, 2012
இலங்கை::கிளிநொச்சி, கோணாவில் பகுதி யூனியன்குளத்தில் நேற்று அதிகாலை ஆயுததாரிகள் பெறுமதிமிக்க நகைகள், பணம் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கையில் துப்பாக்கிகள் மற்றும் கத்தி, பொல்லுகளுடன் 4 பேர் கொண்ட கும்பல் கோணாவில் பகுதி யூனியன்குளம் கிராமத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளனர். குறித்த வீட்டின் பெண்கள் கதவைத் திறக்க மறுத்ததை அடுத்து கதவை உடைத்துக்கொண்டு அந்தக் கும்பல் பிரவேசித்துள்ளது.

அந்தப் பெண்ணின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சத்தம் போட வேண்டாம் எனக்கூறி, வீட்டில் இருந்த குறித்த பெண்ணின் தாய், தந்தை இருவரையும் கொள்ளையர் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் வீட்டினை சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தி, அங்கிருந்து 10 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 3 பவுண் நகையையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண் கணவன் இல்லாது தனித்து வாழ்வதுடன் தையல் தொழில் மூலம் வரும் வருமானத்தை வைத்தே அந்தக் குடும்பத்தை நடத்துகின்றார். அரச சார்பற்ற நிறுவனம் அமைத்துக் கொடுத்த தற்காலிக பாதுகாப்பற்ற வீட்டிலேயே குறித்த குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முதல் கொள்ளைச் சம்பவத்தை முடித்துக்கொண்ட அந்தக் கும்பல் அப்பகுதியில் உள்ள மேலும் மூன்று வீடுகளுக்குச் சென்று துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி 6 பவுண் நகைகள் மற்றும் 35 ஆயிரம் பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளது.

முதல் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் இராணுவ முகாம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்பட்டியில் பரபரப்பு கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படம் எடுத்த பேராசிரியர் : லேப்டாப்பை கைப்பற்றி போலீஸ் விசாரணை!

Tuesday, February 28, 2012
கோவில்பட்டி::கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து 3 ஆண்டாக சீரழித்த பேராசிரியரின் லேப்டாப் போலீசாரிடம் சிக்கியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச்சேர்ந்தவர் தருண்(28). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த பெண் (18), சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது மாணவி, தருணிடம் டியூஷனுக்கு சென்று வந்தார். அப்போது தருண், மாணவியை தன்வசப்படுத்தினார். இந்நிலையில் ஒரு நாள் டியூஷன் சென்ற மாணவிக்கு, தருண் கூல் டிரிங்ஸ் கொடுத்தார். அதை குடித்ததும் சிறிது நேரத்தில் அவர் மயங்கி சரிந்தார். உடனே அந்த மாணவியை தருண் பலாத்காரம் செய்ததோடு தனது செல்போன் கேமராவில் அதை பதிவும் செய்தார். பேராசிரியர் தன்னிடம் தவறாக நடந்துள்ளது தெரியவந்ததும் மாணவி டியூஷனுக்கு வருவதை நிறுத்தினார். ஆனால் தருண், மாணவியின் ஆபாச படங்களை காட்டி அவரை மிரட்டியதோடு தொடர்ந்து அவரை அனுபவித்து வந்துள்ளார்.

மேலும், மாணவியை மிரட்டி தனது நண்பர்கள் சிலருக்கும் பணிய வைத்துள்ளார். அதையும் செல்போன் கேமராவில் படம் பிடித்து வைத்துக்கொண்டார். இந்த விஷயம் மாணவியின் உறவினர் ஒருவருக்கு தெரியவந்தது. அவர், தருணிடம் தகராறு செய்து மாணவி மற்றும் நண்பர்கள் படங்களை பதிவுசெய்து வைத்திருந்த லேப்டாப்பை பிடுங்கிக்கொண்டு வந்துவிட்டார். வீட்டில் சென்று அந்த லேப்டாப்பை அந்த நண்பர் போட்டு பார்த்தபோது அதில் மாணவியுடன் பேராசிரியர் இருக்கும் அந்தரங்க படங்கள் 3 மணிநேரம் ஓடியது தெரியவந்தது. மாணவியின் வீட்டிலும் இது தெரியவரவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 3 ஆண்டாக மாணவியை சீரழித்த படங்கள் அடங்கிய லேப்டாப் தற்போது கோவில்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினர் பச்சை மீன்களை வாயில் திணித்து கொடுமைபடுத்தினர்: விடுதலையான மீனவர்கள் கண்ணீர் பேட்டி!

Tuesday, February 28, 2012
ராமேஸ்வரம்::புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் ரவி. இவரது விசை படகை கடந்த 2007ம் ஆண்டு இந்திய கடற்படையினர் வாடகைக்கு எடுத்து ரோந்து சென்றனர். இதனால் அந்த படகில் நேவி என்று எழுதப்பட்டு இருந்தது. வாடகை காலம் கடந்த 2008ம் ஆண்டு முடிந்ததும் நேவி என்ற எழுத்தை மீனவர்கள் அழிக்கவில்லை.

இந்நிலையில் அந்த படகில் முத்துமணி (வயது 25), ஆரோக்கியம் (40), சேகர் (40) ஆகிய 3 மீனவர்கள் கடந்த 11-ந்தேதி மல்லிபட்டினம் அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகில் “நேவி” என்று எழுதப்பட்டிருந்ததால் மீனவர்களுடன் படகை சிறைபிடித்து சென்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் சோதனை என்ற பெயரில் அடித்து உதைத்து வாயில் பச்சை மீனை திணித்து உள்ளனர். வாந்தி எடுத்தபோது மீனவர்களின் வாயில் மீன்களை திணித்து கொடுமைபடுத்தி உள்ளனர். பின்னர் 3 மீனவர்களையும் காங்கேசன் துறைமுக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மறுநாள் இலங்கை கெயிட்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் நேற்று மதியம் 12.30 மணிக்கு மண்டபம் வந்து சேர்ந்தனர். இலங்கை கடற்படையினர் செய்த கொடுமை குறித்து மீனவர் ஆரோக்கியம் கூறியதாவது:-

நடுக்கடலில் எங்களை தாக்கி பச்சை மீன்களை வாயில் திணித்து துன்புறுத்தினர். எங்கள் படகில் நேவி என எழுதப்பட்டிருந்ததை பார்த்து உங்கள் கடற்படையால் எங்களை என்ன செய்ய முடியும் என ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர் என்று கண்ணீர்மல்க அவர் கூறினார்.

இலங்கை நாட்டின் 14 ஆவது குடிசன மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்: முதலாவது கணக்கெடுப்பில் ஜனாதிபதியின் குடும்பம்!

Tuesday, February 28, 2012
இலங்கை::நாட்டின் 14 ஆவது குடிசன தொகை மதிப்பீட்டுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

முதலாவது மதிப்பீட்டுக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது குடும்பம் இணைத்துக் கொள்ளப்பட்டு குடும்ப உறுப்பினர்களது விபரங்கள் திரட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட மேற்படி மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பரிச்சயமிக்க அதிகாரிகள் நாட்டின் ஒவ்வொரு வீடுகளுக்கும் வருகை தந்து தகவல்களைத் திரட்டவிருப்பதாகவும் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மதிப்பீட்டுப் பணிகளை கண்காணிக்கும் வகையில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட 16 ஆயிரம் அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, பயிற்சி வழங்கப்பட்ட 80 ஆயிரம் அதிகாரிகளும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமெடி நடிகர் எஸ்.வி.சேகரும் மீண்டும் அதிமுகவுக்கு ரிட்டர்ன் ஆகிறார்!!!

Tuesday, February 28, 2012
சென்னை::இயக்குநர் பாக்யராஜைப் போலவே காமெடி நடிகர் எஸ்.வி.சேகரும் கூட மறுபடியும் அதிமுகவுக்கே மீண்டும் ரிட்டர்ன் ஆகிறார்!!!

http://poonththalir-kollywood.blogspot.com

மாவத்தகம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!

Tuesday, February 28, 2012
இலங்கை::மாவத்தகம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார்.

இவர் இன்று அதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த இளைஞன் தனது வீட்டில் இருந்த போது, பொலிஸார் எனக்கூறி வந்த இருவர் அவரை அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குறித்த இருவரும் வாகனமொன்றில் வருகை தந்துள்ளதுடன், கடத்தப்பட்ட இளைஞன் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பயங்கரம் பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவன் பரிதாப சாவு!

Tuesday, February 28, 2012
சார்டன்::அமெரிக்காவின் ஓஹியோவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் உள்ளது சார்டன் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி. இங்கு நேற்று காலை பள்ளி தொடங்குவதற்கு முன் மாணவ, மாணவிகள் கேன்டீனில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த மாணவன் ஒருவன் திடீரென மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதை பார்த்து மாணவர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிலர் தொடக்க பள்ளிக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். காயம் அடைந்த மாணவர்களை உடனடியாக கிளவ்லேண்ட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒரு மாணவன் பரிதாபமாக இறந்தான் என்று போலீஸ் தலைவர் திமோதி கூறினார். சம்பவத்தை நேரில் பார்த்த மாணவி ஹீத்தர் ஜிஸ்கா (17) கூறுகையில், ÔÔநாங்கள் காலை 7.30 மணிக்கு கேன்டீனில் இருந்தோம். அப்போது அந்த மாணவன் கோபமாக வந்தான். திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். அனைவரும் சிதறி ஓடினார்கள்ÕÕ என்று மரண பீதியுடன் கூறினார். போலீஸ் தலைவர் திமோதி கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் சிறுவன் என்பதால், அவனுடைய பெயர் வெளியிடப்படவில்லை. எனினும் அவன் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடக்கிறதுÕÕ என்றார். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இலங்கைக்கு சாதகமான பிரதிபளிப்புக்கள் கிடைக்கிறது - அமைச்சர் மஹிந்த சமரசிங்க!

Tuesday, February 28, 2012
ஜெனீவா::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் நிகழ்த்திய உரை தொடர்பில் சாதகமான பிரதிபளிப்புக்கள் கிடைத்துவருவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

ஜெனீவா நகரிலிருந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் தமது உரையைத் தொடர்ந்து, உரையாற்றி தாய்லாந்தின் வெளிவிகார அமைச்சர் இலங்கைக்கு பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை சார்பில் விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் நாட்டிற்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அது ஏனைய நாடுகளுக்கு சிறந்த செய்தியொன்றை வழங்குவதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தைத் தவிர ஏனைய பல நாடுகள் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து அணுகூலமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் மேலும் பல நாடுகள் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கடவுள்ள பிரேரணை தற்போது அமரிக்க தூதரகத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்டுவருகிறது.

எவ்வாறாயினும் மார்ச் மாதம் மூன்றாம் வாரத்திலேயே பிரேரணையொன்றை கூட்டத்தொடரில் சடர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச பிரேரணையின் பிரதிகளே அமெரிக்க தூதரகத்தினால் விநியோகிக்கப்படுவதாகவும் இலங்கைக்கு எதிரான பிரேரணை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படுமா? இல்லையா என்பதை தற்போது உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பிரதிநிதிகள் ஜெனீவாவில் தமது செய்றபாடுகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான பிரேரணை தேவையில்லை - மஹிந்த சமரசிங்க!

முழுமையான மறுசீரமைப்பினை எட்டும் வகையிலான சிறந்த உள்ள திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முயல்கின்ற நிலையில், சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் கொண்டுவரப்படத் தேவையில்லை என்று இலங்கை அமைச்சரும் மனித உரிமை பேரவையின் மாநாட்டுக்கான இலங்கையின் தலைமைப் பிரதிநிதிரிதுமான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

மனித உரிமை பேரவையில் உரையாற்றியய அவர், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் செல்வதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் எந்தவிதமான தீர்மானமும் மனித உரிமைக் பேரவையில் கொண்டுவரப்படுவதற்கான அவசரமும், நியாயமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதுவும் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செய்திருப்பதாக கூறியுள்ள அவர், அதனடிப்படையில் இறந்தவர்கள் பற்றியும், அதில் இராணுவத்துக்கு பங்கிருக்கிறதா என்பது குறித்து ஆராயவும், அதற்கான பதில் நடவடிக்கைகளுக்காகவும் சிவிலியன் மற்றும் இராணுவ நடைமுறறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களில் எந்தவொரு உள்ளூர் வழிமுறையும், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சரித்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிய காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் வெளியார் தலையீடு எதுவும் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கங்க குறிப்பிட்டார்