Thursday, May 30, 2013

சீனாவின் கிரேட் வோல் இன்டஸ்ட்ரி கோப்பரே சன் என்ற நிறுவனம் இலங்கையின் முதலாவது செய்மதியை விண்ணில் மிதக்க விடுவதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத் திட்டுள்ளது!

Thursday, May 30, 2013
இலங்கை::சீனாவின் கிரேட் வோல் இன்டஸ்ட்ரி கோப்பரே சன் என்ற நிறுவனம் இலங்கையின் முதலாவது செய்மதியை விண்ணில் மிதக்க விடுவதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத் திட்டுள்ளது. சீனாவின் விமான விண்வெளி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கூட்டுத்தாபனத்திற்கும் இந்த நிறுவனத்தின் பங்க ளிப்பு பெருமளவு இருந்து வருகிறது. இந்த நிறுவனமே வர்த் தக செய்மதிகளை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு விற் பனை செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
 
இலங்கையின் செய்மதியை விண்வெளியில் மிதக்கவிட்ட பின்னர் எங்கள் நாட்டின் முக்கியத்துவம் சர்வதேச ரீதியில் அதிகரிக் கும். இதற்கான ஒப்பந்தம் கடந்த செவ்வாயன்று சீன ஜனாதி பதி சீ ஜிங்பிங் மற்றும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
 
ளிபிசி-4 செய்மதி மேடையில் அமைந்திருக்கும் இலங்கையின் செய்மதி இலங்கைக்கு மட்டுமன்றி அதன் அயல்நாடுகளுக்கும் இப்பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளுக்கும் தொலைத்தொட ர்பு மற்றும் ஒளி, ஒலிபரப்பு சேவைகளை பெற்றுக் கொடுப்ப தற்கும் பேருதவியாக அமையும்.
 
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து ஏற்கனவே பல அயல்நாடுகள் இலங்கையிடமிருந்து செய்மதி சேவையை பெறுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சீன நிறுவனம் கடந்த மே மாதம் வரையில் 43 செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் 37 செய்மதிகள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக அனுப்பி வைக்கப்பட் டவையாகும்.
 
ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, ஓஸியானிக் கண்டங்களைச் சேர் ந்த 18 நாடுகளுக்கு இந்த சேவையை சீன நிறுவனம் பெற்றுக் கொடுக்கிறது. இதன் மூலம் 2015ல் உலக செய்மதி சேவை சந் தையில் 10 சதவீதத்தையும் உலக வர்த்தக செய்மதி சந்தையில் 15 சதவீதத்தையும் அடைய முடியுமென்ற நம்பிக்கையும் சீனா வுக்கு இருக்கின்றது.
 
சீனா இலங்கையின் ஒரு உண்மையான நண்பன் என்பதை கடந்த ஆண்டிலும், 2011ம் ஆண்டிலும் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை ஆதரித்து சீன அரசாங்கம் வாக்களித் ததன் மூலம் உறுதிப்படுத்தியது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சீனாவுக்கான விஜயம் இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு பேருதவியாக அமைந்துள்ளது.

சட்டவிரோதமாக வரும் இலங்கை.தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவர்: சென்னையில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கான துணைத் தூதர் டேவிட் ஹோலி!

Thursday, May 30, 2013
சென்னை::படகுகள் மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை தமிழர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சென்னையில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கான துணைத் தூதர் டேவிட் ஹோலி தெரிவித்தார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
 
இலங்கை தமிழர்கள் உட்பட பல்வேறு தரப்பட்ட மக்களிடம் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம் போலியான வாக்குறுதிகளை அளித்து பணம் பறிக்கும் நபர்கள் உள்ளனர். அவர்களை நம்பி படகுகள் மூலம் அபாயகரமான பயணத்தை அந்த மக்கள் மேற்கொள்கின்றனர். இத்தகைய படகு பயணத்தின் போது பெரும்பாலான மக்கள் உயிரிழக்கின்றனர். 
 
இது போன்று படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வருபவர்களை நாவ்ரு, பப்புலா, நியுகிளி போன்ற தீவுகளுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு அமல்படுத்தி உள்ளதால் படகுகள் மூலம் வருபவர்களை தடுக்கவும், கடலில் அவர்கள் உயிரிழப்பதை தடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி இலங்கை தமிழர்கள் உட்பட சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1177 இலங்கை தமிழர்கள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

ஜப்பானிய தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது: பிரதமர் மன்மோகன்சிங் வழங்கினார்!

Thursday, May 30, 2013
டோக்கியோ::ஜப்பானை சேர்ந்த தொபுரு கார்ஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். 80 வயதாகும் தொபுரு தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். இவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். 
 
இந்தாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் உடல்நிலை காரணமாக புது டெல்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்நிலையில் மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் பத்மஸ்ரீ விருதை தொபுரு கார்ஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான், இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தொபுருவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கவுரவித்தார். 
 
1964 ம் ஆண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தில் கல்விப் பணியை தொடங்கிய தொபுரு 1974 ம் ஆண்டில் தெற்காசிய வரலாற்று துறையின் தலைமை பேராசிரியராக பொறுப்பேற்று 20 ஆண்டு காலம் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராக உள்ளார்.

Demining process nearing completion!


Almost every district situated in the North and East of Sri Lanka were highly contaminated with indiscriminately laid landmines and booby traps by LTTE at the conclusion of the three decade long ruthless war.
An unknown number of landmines had been laid in cultivable paddy fields, farm lands and beautiful landscapes not only threatening the lives and livelihoods of innocent peasant community, but also threatening the lives of innocent animals.
Completing an extensive process of demining work to meet the huge humanitarian challenge just after eliminating thirty years of brutal terrorism, government has nearly come to its end.
Troops played a prominent role in providing a dedicated service to expedite the demining process. Demining of each and every inch of the land and making land safe for people to return to their villages was then a priority. Demining by hand was slow and painstaking which needed vigilant concentration to carryout.
However, Sri Lanka will be the first country to succeed in removing mine fields in a short period of time eradicating a three decade long terrorism.
 
Soon after the defeat of LTTE in year 2009, the government with the support of donor countries like Australia, Japan, China, India, the EU, the US, UNDP, UNICEF, national and international mine action groups implemented a comprehensive and rapid de-mining programme to clear 2,064 square kilometres of land, which had been heavily mined during the conflict.
Once, Britain's Prince Harry noted that, "threat of landmines in the Northern Sri Lanka could be eradicated in the next five years, if funding can be sustained".
Humanitarian demining process of the government has allowed the citizens of the war affected regions to move in their territory without hesitation and to engage in livelihood freely.
From the recognized area of 2,064 square kilometres, 1,968 Sq. Km have been cleared and only 96 Sq. Km are remaining.
During this hard attempt, troops and demining groups have removed over 500,000 anti-personnel mines, anti-tank mines, and numerous forms of improvised explosive devices. The total thus recovered is said to be about one million.
Areas determined for development had been cleared allowing the development process to continue without any difficulty.

UN OCHA CONGRATULATES ARMY HUMANITARIAN WORK IN WANNI!

Thursday, May 30, 2013
Colombo::Ms. Agnes Asekenyu Oonye, The Head of Office for UN Office for Coordination Humanitarian Affairs in Sri Lanka and her team held a discussion with Major General MHSB Perera RWP RSP ndu psc, the Commander Security Forces (Wanni) on May 27, 2013 at Security Forces Headquarters (Wanni). The delegation was highly delighted on various humanitarian assistance work being carried out by Army troops in Wanni area to uplift the living standards of the people living in wanni region.

யுவ­தியின் உடலை முறை­யற்ற வித­மாக தடவிப் பார்த்தவருக்கு அடி : கைதாகி வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, May 30, 2013
இலங்கை::16 வயது யுவ­தியின் உட­லை முறை­யற்ற வித­மாக கைவைத்து தட­விய நப­ரொ­ரு­வரை எதிர்­வரும் 7ஆம் திகதி வரை விளக்க­ம­றி­யலில் வைக்­கும்­படி கல்­கிஸ்ஸ நீதவான் நீதி­மன்ற மேல­திக நீதவான் பிர­மர்ஷா ரண­சிங்க உத்­த­ர­விட்டார்.

இரத்­ம­லானை வலங்­வத்த பிர­தே­சத்தைச் சேர்ந்த நபரே  இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்கப் பட்­ட­வ­ராவார்.

இச் சம்­ப­வத்தின் பின்னர் உற­வி­னர்­க­ளதும் அய­ல­வர்­க­ளி­னதும் தாக்­கு­த­லுக்­குள்­ளான சந்­தேக நபர்  கடும் காயங்­க­ளுக்­குள்­ளாகி களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். கல்­கிஸ்ஸை பொலிஸால் நீதி­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்த அறிக்­கையை அடுத்து நீதவான் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று சந்­தேக நபரின் நிலைமையை ஆராய்ந்த பின்னர் விளக்கமறியல் வைக்­க உத்தரவைப் பிறப்பித்தார்.