Thursday, May 30, 2013

சீனாவின் கிரேட் வோல் இன்டஸ்ட்ரி கோப்பரே சன் என்ற நிறுவனம் இலங்கையின் முதலாவது செய்மதியை விண்ணில் மிதக்க விடுவதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத் திட்டுள்ளது!

Thursday, May 30, 2013
இலங்கை::சீனாவின் கிரேட் வோல் இன்டஸ்ட்ரி கோப்பரே சன் என்ற நிறுவனம் இலங்கையின் முதலாவது செய்மதியை விண்ணில் மிதக்க விடுவதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத் திட்டுள்ளது. சீனாவின் விமான விண்வெளி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கூட்டுத்தாபனத்திற்கும் இந்த நிறுவனத்தின் பங்க ளிப்பு பெருமளவு இருந்து வருகிறது. இந்த நிறுவனமே வர்த் தக செய்மதிகளை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு விற் பனை செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
 
இலங்கையின் செய்மதியை விண்வெளியில் மிதக்கவிட்ட பின்னர் எங்கள் நாட்டின் முக்கியத்துவம் சர்வதேச ரீதியில் அதிகரிக் கும். இதற்கான ஒப்பந்தம் கடந்த செவ்வாயன்று சீன ஜனாதி பதி சீ ஜிங்பிங் மற்றும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
 
ளிபிசி-4 செய்மதி மேடையில் அமைந்திருக்கும் இலங்கையின் செய்மதி இலங்கைக்கு மட்டுமன்றி அதன் அயல்நாடுகளுக்கும் இப்பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளுக்கும் தொலைத்தொட ர்பு மற்றும் ஒளி, ஒலிபரப்பு சேவைகளை பெற்றுக் கொடுப்ப தற்கும் பேருதவியாக அமையும்.
 
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து ஏற்கனவே பல அயல்நாடுகள் இலங்கையிடமிருந்து செய்மதி சேவையை பெறுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சீன நிறுவனம் கடந்த மே மாதம் வரையில் 43 செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் 37 செய்மதிகள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக அனுப்பி வைக்கப்பட் டவையாகும்.
 
ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, ஓஸியானிக் கண்டங்களைச் சேர் ந்த 18 நாடுகளுக்கு இந்த சேவையை சீன நிறுவனம் பெற்றுக் கொடுக்கிறது. இதன் மூலம் 2015ல் உலக செய்மதி சேவை சந் தையில் 10 சதவீதத்தையும் உலக வர்த்தக செய்மதி சந்தையில் 15 சதவீதத்தையும் அடைய முடியுமென்ற நம்பிக்கையும் சீனா வுக்கு இருக்கின்றது.
 
சீனா இலங்கையின் ஒரு உண்மையான நண்பன் என்பதை கடந்த ஆண்டிலும், 2011ம் ஆண்டிலும் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை ஆதரித்து சீன அரசாங்கம் வாக்களித் ததன் மூலம் உறுதிப்படுத்தியது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சீனாவுக்கான விஜயம் இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு பேருதவியாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment