Wednesday, February 1, 2012

இலங்கைத் தமிழ் இளைஞர்கள் காணாமல் போகும் மர்மம்:மத்திய அரசிடம் முறையிட தே.மு.தி.க., வலியுறுத்தல்!

Wednesday,February,01,2012
சென்னை::இலங்கைத் தமிழ் இளைஞர்கள் காணாமல் போகின்றனர் என்ற தகவல், இலங்கை அரசு அமைத்த குழுவின் மூலமே தெரிய வந்துள்ளது. இந்தப் பிரச்னையை, மத்திய அரசின் கவனத்திற்கு, தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்,'' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:மத்திய வெளியுறவு அமைச்சர், சமீபத்தில் இலங்கை சென்று வந்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் பற்றி, அவர் பேசியிருக்கிறார். இந்நிலையில், இலங்கைத் தமிழ் இளைஞர்கள் அதிகளவில் காணாமல் போகின்றனர் என்றும், கடத்தப்படுகின்றனர் என்றும், சிறையில் அடைக்கப்படுகின்றனர் என்றும் தகவல் வந்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து அறிய, இலங்கை அரசு அமைத்த குழுவே, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் ஜெயக்குமார்: கவர்னர் உரையில் பேசுங்கள்.

ராமச்சந்திரன்: கவர்னர் உரை மீதான விவாதம் பொதுவானது. எதை வேண்டுமானாலும் பேசலாம். பதில் சொல்வது; சொல்லாமல் இருப்பதற்கு அரசுக்கு உரிமை உண்டு. போர் முடிந்தும் கூட, தமிழர்கள் உள்ள பகுதிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள், இன்னும் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்கள் இன்னமும், அடிமைகளாகத் தான் உள்ளனர்.
இந்த நிலையை, தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், இந்த விவகாரத்தை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
நான் எத்தகைய கேலி, கிண்டல்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அரசியல்வாதி: த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு!

Wednesday,February,01,2012
இலங்கை::என்னை பத்திரிகைகளில் கிண்டல் செய்வதையோ, கேலிச் சித்திரங்கள் மூலம் நையாண்டி செய்வதையோ நான் பொருட் படுத்துவதில்லை. முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாஸவை எழுத்தாக்கங்கள் மூலமும் கேலிச் சித்திரங்கள் மூல மும் கிண்டல் செய்தவர்களுக்கு நடந்தது என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே. அப்பாவி ரிச்சட் சொய்சா கூட அதற்காகவே உயி ரிழந்தார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகை பிரதம ஆசி ரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக பொறுப்பாளர்களுடனான சந் திப்பில் கூறினார்.

நான் அவ்விதம் எத்தகைய கேலி, கிண்டல்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அரசியல்வாதி. ரணிலும் என்னைப் போன்று எந்தக் கேலிக் கிண்டல்களையும் பொருட்படுத்தும் ஒருவர் அல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.

உங்களை கேலி செய்யும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியமையால் ஒரு பாடசாலை அதிபர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக செய்தி வெளிவந் துள்ளது. அதைப்பற்றி என்ன கூற விரும்புகிaர்கள் என்று ஒரு ஆசிரி யர் கேட்டதற்கு பதிலளிக்கையில், அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரி யாது. நான் இத்தகைய கேலி, கிண்டல்களை பொருட்படுத்துவதில்லை. அவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவ தற்காக நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சகல அரசியல் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழி யச் செய்வதற்கு ஏற்புடைய வகையில் தாம் விரைவில் சகல அரசியல் கட்சிகளின் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்க கூட்டணியில் உள்ள ஹெல உறுமய கட்சியும் தேசிய சுதந்திர முன்னணியும் வெளியில் எந்தக் கருத்துக்களை கூறினாலும் பாராளும ன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்று தன்னால் உறுதியாக கூற முடியுமென்று ஜனாதிபதி கூறினார். 13 பிளஸ் பற்றி நீங்கள் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிaர்கள் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நான் எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து பத்திரிகைகள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தணிக்கும் என்று சிரித் துக் கொண்டே பதிலளித்தார்.

நான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தா லும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால் பாராளு மன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஏகமன தான முடிவை எடுப்பது அவசியம். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் தான் ஆதரித்து அமுலாக்குவேன் என்று கூறினார்.

இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீ காரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும் பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை அமுலாக்குவது முடியாத காரியம் என்றும் கூறினார். அரசாங்கம் பொலிஸ் மற்றும் காணி அதி காரங்களை கொடுக்க தயக்கம் காட்டுவதனால் தான் தமிழ் தேசிய கூட் டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள விரும்ப வில்லை என்று கூறப்படுகிறது. இதன் உண்மை நிலை என்ன? என்று ஒரு ஆசிரியர் ஜனாதிபதியிடம் கேட்டார்.

நிச்சயமாக நாங்கள் பொலிஸ் அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பென்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்ற தென்றும், அது பிரச்சினைக்குரிய விடயமல்ல என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடைமுறை ப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனை க்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய, நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனை களை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல என்றும் ஜனாதிபதி கூறினார்.

எல்.ரி.ரி.ஈ.யில் அங்கத்தவர்களாக இருந்த பலர் இன்று தமிழ் தேசிய கூட் டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் எல்.ரி.ரி.ஈ.யை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அவ ர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப் பதுமேயாகும்.

அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் என்றுமே இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி கூறினார். பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 பிளஸ் சட்டத்திருத்தம் போன்ற விடயங் களில் ஊடகவியலாளர் நடுநிலையில் இருந்து பக்கச் சார்பற்ற முறை யில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக் களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்து வதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தனது நிலைப்பாட்டில் இருந்தே பிரி வினைவாத கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகியன அவசியம் என்று கேட்டு வரு கின்ற போதிலும் வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதை ப்பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட் கிறார்கள் என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி., ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற குழு ஆகிய அனைத்தும் பாராளுமன்ற தெரி வுக்குழுவிற்கு இதுவரை தமது பெயர்களை முன்மொழியவில்லை. அந் தக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து எல் லோருடைய பிரச்சினையாக விளங்கும் இனப்பிரச்சினைக்கு கூடி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு முன்வர வேண்டுமென்று கூறினார்.

கச்சத்தீவு அந்தோணியார் கோயில்விழா: மார்ச் 2ம் தேதி துவக்கம்!

Wednesday,February,01,2012
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழா மார்ச் 2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த நாள் சிலுவைப்பாதை, தேர்பவனி, 4ம் தேதி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட அதிபர் தாமஸ் சவுந்திரநாயகம், நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருவிழாவில் தமிழக பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டி யாழ்ப்பாணம் மறைமாவட்ட அதிபரிடம் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உட்பட தமிழகத்தின் பல பகுகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் செல்ல முடிவு செய்துள்ளனர். மூன்று நாள் திருவிழாவாக இருந்தாலும் மார்ச் 3, 4ம் தேதிகளில் மட்டுமே தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதனால் மார்ச் 3ம் தேதி ராமேஸ்வரத்தில் படகில் செல்ல அனுமதிக்கப்படும்.
ராமேஸ்வரம் வேர்கோடு பாதிரியார் மைக்கில்ராஜ் கூறியதாவது: பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கச்சத்தீவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் போக்குவரத்து செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். படகில் செல்லும் முன் பக்தர்களிடம் சோதனை செய்வதால் ஏற்படும் காலவிரையத்தை தவிர்க்க, இந்திய கடலோர காவல்படையே பக்தர்களை சோதனை செய்து அவர்களது கப்பலில் ஏற்றிச்செல்ல வேண்டும், என்றார்.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுக்க தயார்- கருணாதிலக அமுனுகம!

Wednesday,February,01,2012
இலங்கை::ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கு தயாராக இருப்ப தாக அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

மனித உரிமைகள் மகாநாடு அடுத்த மாதம் 27ம் திகதி சுவீட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கவுள்ள இலங்கை குழு வினர் தயார் நிலையில் உள்ளதாக வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.

நடைபெறவுள்ள மனித உரிமைகள் மகாநாட்டிலே ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஐரோப் பிய நாடுகள் இலங்கையின் மனித உரி மைகள் தொடர்பாக முன்மொழிவொன் றினை கொண்டுவரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவரும் எந்தவொரு முன்மொழிவுகளுக்கும் அச்சமின்றி பதிலளிக்க தயாராக உள்ள தாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப் பிட்டார்.

3 தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற் பாடுகளை வெற்றிகரமான முறையில் முடிவுக்கு கொண்டு வந்து முழு உல கிற்கும் முன்மாதிரியாக விளங்கியதாகவும் அவர் மேலும் கூறினார். பயங்கரவாதத்தை முடிவுறுத்தும் செயற்பாடானது ஒரு குற்றம் அல்ல எனவும் அது அனைவராலும் பாராட்டத்தக்க விடயம் எனவும் கருணா திலக அமுனுகம சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மகாநாட்டின் போது தேவையான சந்தர்ப்பங்களில் புள்ளி விபரங்களுடன் வினாக்களுக்கு பதில ளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுச்சந்தை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Wednesday,February,01,2012
இலங்கை::கொழும்பு-வெள்ளவத்தையில் 240 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை மற்றும் நான்கு மாடி வாகனத் தரிப்பிடத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

நாட்டிலுள்ள வாகன தரிப்பிடங்களில் நான்கு மாடிகளைக் கொண்ட முதலாவது வாகனத்தரிப்பிடம் இதுவாகும்.

வெள்ளவத்தைப் பொதுச்சந்தை கட்டடத் தொகுதியில் 83 கடைத் தொகுதிகள் அமைந்துள்ளதுடன், மரக்கறி, பழவகை விற்பனைக்காக 53 அறைகளும் மீன் விற்பனைக்காக 21 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொது வாகனத் தரிப்பிடத்தில் ஒரே சமயத்தில் 95 வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடிய வசதிகள் உள்ளன. நேற்றைய தினம் வெள்ளவத்தைப் பொதுச் சந்தையைத் திறந்து வைத்த ஜனாதிபதி அதன்பல பிரிவுகளையும் பார்வையிட்டார். பொதுச் சந்தையின் ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கி கெளரவித்தனர்.

நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண ஆளுநர் அலவி மெளலானா, மாநகர மேயர் மொகமட் முஸம்மில் மாநகர எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்து மொரகொட முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியது இலங்கை படை!

Wednesday,February,01,2012
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற மீனவர்களை, நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் பலர் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன்பிடித்ததால்தான் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகவும், இதனால் போதிய மீன்பாடு இல்லை என்றும் கரை திரும்பிய ஒற்றைமடி மீனவர்கள் தெரிவித்தனர். மீனவ சங்க பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது: கடல் வளத்தை அழிக்கும் இரட்டைமடி வலையினால் மீன்பிடிக்கவும், கழிவு நீர் வழிய வாகனங்களில் மீன்களை ஏற்றிச்செல்லவும், தடை இருந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் மீன்வளம் அழிவதுடன், ஒற்றைமடி, கரைவலை, நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.