Wednesday, February 1, 2012

கச்சத்தீவு அந்தோணியார் கோயில்விழா: மார்ச் 2ம் தேதி துவக்கம்!

Wednesday,February,01,2012
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழா மார்ச் 2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த நாள் சிலுவைப்பாதை, தேர்பவனி, 4ம் தேதி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட அதிபர் தாமஸ் சவுந்திரநாயகம், நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருவிழாவில் தமிழக பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டி யாழ்ப்பாணம் மறைமாவட்ட அதிபரிடம் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உட்பட தமிழகத்தின் பல பகுகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் செல்ல முடிவு செய்துள்ளனர். மூன்று நாள் திருவிழாவாக இருந்தாலும் மார்ச் 3, 4ம் தேதிகளில் மட்டுமே தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதனால் மார்ச் 3ம் தேதி ராமேஸ்வரத்தில் படகில் செல்ல அனுமதிக்கப்படும்.
ராமேஸ்வரம் வேர்கோடு பாதிரியார் மைக்கில்ராஜ் கூறியதாவது: பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கச்சத்தீவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் போக்குவரத்து செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். படகில் செல்லும் முன் பக்தர்களிடம் சோதனை செய்வதால் ஏற்படும் காலவிரையத்தை தவிர்க்க, இந்திய கடலோர காவல்படையே பக்தர்களை சோதனை செய்து அவர்களது கப்பலில் ஏற்றிச்செல்ல வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment