கனிமொழி வெற்றியை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகிறார்.மக்களவைத் தேர்தல் நடந்த சமயத்தில் வேலூர் தொகுதியில் ரூ.10 கோடி பணம் கைப்பற்றப்பட்டதால் அங்கு நடக்க இருந்த தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இதுபோலவே தேனி தொகுதி தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேனி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அந்தத் தொகுதியின் வாக்காளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வேலூர் தேர்தலை ரத்துசெய்தது போலவே தூத்துக்குடி தொகுதி தேர்தலையும்
ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரும், பாஜக தமிழகத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார். இதற்காக இன்று (ஜூலை 8) பிற்பகல் தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்.கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி, 3, 47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தேர்தலில் கனிமொழி 5, 63, 143 வாக்குகள் பெற்றார். தமிழிசை 2, 15,934 வாக்குகள் பெற்றிருந்தார்.

No comments:
Post a Comment