Monday, July 8, 2019

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட P-625 கப்பல் கொழும்பில்!

சீன அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள P625 கப்பல் இன்று(08) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்காக இக்கப்பல் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கட்டளைத்தளபதி இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.1994ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம் 112மீற்றர், அகலம் 12.4 மீற்றர் ஆகும். இதன் எடை 2300 தொன்கள் ஆகும். இதில் 18 அதிகாரிகள் உள்ளடங்களாக 110 பேரைக் கொண்ட பணியாளர் சபையும்
கடமையில் ஈடுப்படமுடியும்.இலங்கை கடற்படை கப்பல் குழுவில் இணைந்துக் கொண்ட பின்னர் இலங்கைக்கு உட்பட்ட ஆழ்கடல் வலயத்துக்குள் தேடுதல் மீட்டெடுத்தல் போன்ற பணிகள் கடல் வளங்களை பாதுகாத்தல் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல் மற்றும் வள்ளங்களுக்கு உதவிகளை வழங்குவது ஆகியவற்றுக்காக இந்த கப்பலை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Very good topic, similar texts are I do not know if they are as good as your work out.all type vastu Solution Read Vastu Consultant in Delhi

    ReplyDelete