கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டுள்ளதாக, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இவ்வாறான கூட்டணியை அமைப்பதற்கு, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியை விலக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்தது.எனினும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை
உறுதியாக அறிவித்துள்ள விக்னேஸ்வரன், இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்றும் கூறியுள்ளார்.
உறுதியாக அறிவித்துள்ள விக்னேஸ்வரன், இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment