தெரிவுக்குழுவை இலக்கு வைத்து தமக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது சிக்கல் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு புலனாய்வு பிரிவு அதிகாரிகளை அழைத்து புலனாய்வு தகவல்கள் வெளியிடப்படுவது ஏற்புடைய விடயமல்லவென்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு புலனாய்வு பிரிவு அதிகாரிகளை அழைத்து புலனாய்வு தகவல்கள் வெளியிடப்படுவது ஏற்புடைய விடயமல்லவென்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பிலான 5 வழக்குகள் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமையை நினைவு கூர்ந்துள்ளார்.உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விஷேட விசாரணை சபை ஊடாக விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன் அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் வெளிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான நிலமையின் கீழ் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று அவசியமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவித்துள்ள போதிலும் அது குறித்து சபாநாயகர் நாடாளுமன்றில் எந்தவித கருத்துக்களையும் வெளியிடாமை கவலையடைவதாகவும் ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் சபாநாயகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நாடாளுமன்றம் அனுமதிக்கும் செயற்பாடுகளை நிறுத்தும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திடமே இருப்பதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்த விஷேட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை சபாநாயகரின் தனிப்பட்ட விருப்பத்திற்கமைய மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment