ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்க உள்ள 'எஸ் - 400' ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் இந்தியா - அமெரிக்கா ராணுவ உறவில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.இதற்காக இந்தியா மீது அமெரிக்கா தடைகள் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது' என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா ராணுவ உறவு வைத்துள்ளது. இரு நாடுகளிடமிருந்தும் ஏராளமான ஆயுதங்களை வாங்கி வருகிறது. எனினும் இந்தியா வசம் உள்ள ஆயுதங்களில் 60 - 70 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டவையாகத் தான் உள்ளன.
இந்நிலையில் கடந்த அக்டோபரில் ரஷ்யாவிடம் இருந்து 'எஸ் - 400' ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இது
அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியா - ரஷ்யா இடையேயான 'எஸ் - 400' ஏவுகணை தொழில்நுட்ப கொள்முதல் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்கள் அதனால் இந்தியா - அமெரிக்கா ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படுமா என கேள்வி எழுப்பினர்.

இது குறித்துஅமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பதிலளிக்கையில் 'அந்த ஒப்பந்தம் அமெரிக்கா - இந்தியா ராணுவ உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா மீது தடைகள் விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது' என்றார். மிரட்டல் விடுக்கும் வகையில் அமெரிக்க அதிகாரி பேசிய போதும் பேச்சு மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என நம்பிக்கையும் தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து பெற உள்ள 'எஸ் - 400' ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் தரையிலிருந்து வானில் நீண்ட துாரம் பாய்ந்து வரும் ஏவுகணைகளையும் தகர்க்கும் திறன் வாய்ந்தது. இந்த தொழில் நுட்பத்தை ரஷ்யாவிடம் இருந்து 2014ல் சீனா பெற்று உள்ளது
No comments:
Post a Comment