அரசாங்கத்தின் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களுக்கான கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, வெளிநாட்டு கடவுச் சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்பட்ட 3000 ரூபா சாதாரண சேவைக் கட்டணம் 3500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளில் பெற்றுக் கொள்வதற்கான சேவைக் கட்டணமாக அறவிடப்பட்ட 10 ஆயிரம் ரூபா கட்டணம் 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு 3 வருடங்களுக்காக விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச் சீட்டுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து 2500
ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த வகையான கடவுச் சீட்டொன்றை ஒரு நாளில் பெறுவதற்கு அறவிடப்பட்டு வந்த 5 ஆயிரம் ரூபா கட்டணம் 7500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த வகையான கடவுச் சீட்டொன்றை ஒரு நாளில் பெறுவதற்கு அறவிடப்பட்டு வந்த 5 ஆயிரம் ரூபா கட்டணம் 7500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடவுச் சீட்டில் மாற்றங்கள் செய்வதற்கு அறவிடப்பட்டு வந்த 500 ரூபா கட்டணம் 1000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment