காஷ்மீரில் பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து, கவர்னருடன் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பா.ஜ., தலைவர் அமித்ஷா நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தில் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், உள்துறை செயலாளர், ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பது, சட்டசபை தேர்தல் நடத்துவது மற்றும் அமர்நாத் யாத்திரீகர்கள் பாதுகாப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment