மாலத்தீவு இந்தியாவை மிகவும் கவர்ந்த நாடு. அந்நாட்டிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், முதல்முறையாக நேற்று மாலத்தீவு சென்றுள்ள மோடி அந்நாட்டு பார்லிமென்டில் உரையாற்றினார்.
உலகிற்கு முன்மாதிரி - அப்போது மோடி பேசியதாவது: மக்கள் பிரதிநிதிகள் முன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. முகமது நஷீத், பார்லிமென்ட் சபாநாயகராக பதவியேற்ற பின்னர், முதலில் பேச எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த பெருமை, அனைத்து இந்தியர்களின் மனதை தொடும். நமது உறவு தனித்துவமிக்கது. இந்தியாவும் மாலத்தீவும் ஒரே கலாசார பின்னணியை கொண்டது. உங்கள் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மாலத்தீவு
பார்லியில் பேசுவது பெருமை. இங்கு வருவது இரண்டாவது முறையாகும். அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாலத்தீவு மக்கள் ஒன்றுசேர்ந்து ஜனநாயகத்தை வெற்றி பெற செய்தனர். இதனை பார்த்து, உங்களின் நெருங்கிய நட்பு நாடும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பெருமை கொள்கிறது. உங்களின் வெற்றி, உலகிற்கு உதாரணமாகவும், முன்மாதிரியாகவும் திகழ்கிறது.
பார்லியில் பேசுவது பெருமை. இங்கு வருவது இரண்டாவது முறையாகும். அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாலத்தீவு மக்கள் ஒன்றுசேர்ந்து ஜனநாயகத்தை வெற்றி பெற செய்தனர். இதனை பார்த்து, உங்களின் நெருங்கிய நட்பு நாடும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பெருமை கொள்கிறது. உங்களின் வெற்றி, உலகிற்கு உதாரணமாகவும், முன்மாதிரியாகவும் திகழ்கிறது.
இந்தியா உதவி
ஜனநாயகத்தின் பலத்தை மாலத்தீவு பார்த்துள்ளது. மாலத்தீவில் வேற்றுமையில் ஒற்றுமை நிலவுகிறது. ஜனநாயக மாண்புகளை நிலைநிறுத்த இந்தியா எப்போதும் துணை நின்றுள்ளது. இந்திய தேர்தல், ஜனநாயகத்தில் திருவிழாவாக திகழ்ந்தது. அண்டை நாடுகளுக்கு எப்போதும் இந்தியா முக்கியத்துவம் அளிக்கும். மாலத்தீவின் வளர்ச்சியில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. மாலத்தீவின் சுதந்திரம், ஜனநாயகம், வளர்ச்சி அமைதிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும். இத 1988 ம் ஆண்டு நடந்த சம்பவம் ஆகட்டும். 2004ல் நடந்த சுனாமி தாக்குதல் ஆகட்டும். அல்லது தற்போது ஏற்பட்ட தண்ணீர் பிரச்னையின் போதும், இந்தியா உதவி செய்தது.
புதிய பாதை
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெற்றுள்ளது.பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பாரம்பரியமான கலாசாரத்தை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்நாட்டின் கலாசாரம் குஜராத்தி்ல் பிரபலம். இந்தியாவை கவர்ந்த நாடு மாலத்தீவு. மொழியில், இரு நாடும் பல ஒற்றுமைகளை பகிர்ந்து கொண்டுள்ளன. இரு தரப்பு உறவில், இரு நாடுகளும் புதிய பாதையை திறந்துள்ளன. இரு நாடுகளும் தோளுக்கு தோள் நிற்கின்றன. புதிய வாய்ப்புகளை திறந்துள்ளன.இந்தியாவும் மாலத்தீவும் சிறந்த அண்டை நாடுகள். உண்மையான நட்பு நாடுகள் அனைத்து நேரத்திலும், நாம் இணைந்து நிற்க வேண்டும். ஒருவரை ஒருவர் பலப்படுத்த நாம் செயலாற்ற வேண்டும்.
வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான பரிமாற்றம் அதிகரித்துள்ளது. விசாவில் செய்யப்பட்ட மாற்றங்கள் இரு நாடுகளுக்கு உதவி செய்யும். இந்தியா - மாலத்தீவு இடையிலான படகு போக்குவரத்து குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடல்வளம் சார்ந்த பொருளாதாரத்தில், இந்தியாவிற்கு மாலத்தீவு பெரிய கூட்டாளியாக திகழ்கிறது.
அப்பாவி மக்கள் பலி
பயங்கரவாதம் எப்போதும் கவலை தரும் விஷயம். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். பயங்கரவாதிகளுக்கு சாதகமாக உள்ள அனைத்து வழிகளையும் அடைக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு உதவி செய்வது அச்சுறுத்தலை அதிகப்படுத்துகிறது. இருநாட்டிற்கும் பயங்கரவாதம் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.பயங்கரவாதிகளால், அப்பாவி மக்கள் தினசரி , உலகில் ஏதாவது ஒரு இடத்தில் உயிர் இழந்து கொண்டுள்ளனர்.
மிகப்பெரிய சவால்
பருவநிலை மாற்றம் மகிப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். இதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சிறந்த வழியாக உள்ளது.தொழில்நுட்பம் மட்டும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவாது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்காக பூமியை நாம் காக்க வேண்வும்.நிலைக்கத்தக்க வளர்ச்சிக்கு மாலத்தீவு நடவடிக்கை எடுத்து, சர்வதேச சோலார் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்தோ பசுபிக் உறவு முக்கியமானது. இதன் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
No comments:
Post a Comment