Sunday, June 9, 2019

ஆயுதம் தாங்கிய,'ட்ரோன்' இந்தியாவிற்கு அளிக்கிறது அமெரிக்கா!

ஆயுதம் தாங்கிய,'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய விமானம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அளிக்க, அமெரிக்கா முன்வந்துள்ளது.இந்தியாவின் படை பலத்தை உயர்த்தும் வகையிலும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ராணுவ வளர்ச்சி மற்றும் பலத்தை மட்டுப்படுத்தும் வகையிலும், இந்த உதவிகளை, அமெரிக்கா செய்து வருகிறது.
 
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் உள்ளதால், நமது படைபலத்தை உயர்த்தும் வகையில், நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை, நமது அரசும் வாங்கி வருகிறது.இந்த நிலையில், அமெரிக்க
தயாரிப்பான, அதிநவீன ஆயுதங்களை ஏந்திச் செல்லும், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய விமானங்களை விற்பதற்கு, அமெரிக்கா முன் வந்துள்ளது.இதைத் தவிர, தரையில் இருந்தும், வானில் இருந்தும், செலுத்தக் கூடிய ஏவுகணைகள் தயாரிப்புக்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும், அந்நாடு முன் வந்துள்ளது.

அதையடுத்து, இவற்றை விற்பதற்கான முயற்சியில், அமெரிக்கா தீவிரமாக உள்ளது.எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்குவதற்காக, ரஷ்யாவுடன் நமது அரசு சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால், அமெரிக்காவின் இந்த சிறப்பு சலுகை குறித்து, மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை; தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

No comments:

Post a Comment