Wednesday, May 8, 2019

புலிகள் அமைப்பின் தீவிரவாத தலைவர்களின் புகைப்படங்களை வைத்திருந்த்த யாழ்.பல்கலை மாணவர்களுக்குத் தொடர்ந்தும் விளக்கமறியல்!

தீவிரவாத அமைப்பான  புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் அந்த அமைப்பின் தீவிரவாத தலைவர்களின் புகைப்படங்களை வைத்திருந்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புலிகள்  ஆதரவு மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
குறித்த மாணவர்களுக்குப் பிணை வழங்குமாறு கோரி, இன்று யாழ். நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டபோதும், யாழ்.பல்கலைக்கழக புலிகள்  ஆதரவு மாணவர்களை விடுதலை செய்ய நீதவான் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்த, யாழ். நீதவான் ஏ.எஸ்.பி. போல் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.அதேவேளைக் குறித்த கைது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அபிப்பிராயம் இன்னும் கிடைக்கவில்லை எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
 
பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என்.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment