உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது நவகமுவ பகுதியில் நேற்று ஒரு தொகை தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதியை மறித்து சோதனை செய்ததில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து வெவ்வேறு துப்பாக்கிகளுக்கு பாவிக்கும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களில் ரி 56 ரக தோட்டக்கள் 207, 9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான தோட்டக்கள் 649, பயிற்சிக்காக பயன்படுத்தும் தோட்டக்கள் 101, MPEP தோட்டாக்கள் 10 மற்றும் இரண்டு மெகசின்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment