Friday, May 10, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணிவந்த புஹாரி மொஹமட் ராபீக் என்ற நபர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணிவந்த புஹாரி மொஹமட் ராபீக் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.எட்டு மில்லியன் ரூபாய் பணத்துடன் மருதானையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தெமட்டகொடையில் அமைந்துள்ள  நிறுவனத்தில் சோதனை: ஒருவர் கைது!
 
காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய தெமட்டகொடையில் அமைந்துள்ள virtusa தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் அண்மையில் விசேட பரிசோதனை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் முஸ்லிம் பிரஜையொருவர் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரிலிருந்து பணிக்கு வராமை காரணமாக சந்தேகம் ஏற்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை மோப்ப நாய்களை பயன்படுத்தி அந்த நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து சந்தேகத்திற்குரிய ட்ரோன் கருவியும், தொலைதூர கட்டுப்பாட்டு சாதனமும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனத்தை சோதனைக்கு உட்படுத்திய பின்னர் மொஹமட் அக்ரம் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்தின் பின்னர் அந்நிறுவனம் அமைந்துள்ள வலயத்தில் விசேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment