இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன் டுனவாட் இன்று முற்பகல் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் நெதர்லாந்து நாட்டின் சார்பில், நெதர்லாந்து தூதுவர் அனுதாபங்களை தெரிவித்தார்.தாக்குதல்களில் நெதர்லாந்து நாட்டவர் ஒருவரும் உயிரிந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் அவர் குறித்து தமது கவலையை வெளியிட்டதாகவும், எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அலி ஈப்ரஹிம் அல் முல்லாஹ் இன்று எதிர்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விஜேராமயிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.இதன்போது இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பில் தூதுவர் வருத்தத்தை தெரிவித்தார்.
அத்துடன், நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமாயின், நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் நெதர்லாந்து பிரஜையொருவரும் உயிரிழந்தார். அது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் நெதர்லாந்து தூதுவரிடம் கவலை தெரிவித்தார்.
No comments:
Post a Comment