Friday, May 10, 2019

பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் மற்றும் முப்ப­டை­யினர் இணைந்து குருணாகலில் 356 முஸ்லிம் கிராமங்கள் சோதனை!

உயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர் நாடு முழுவதும் முன்னெடுக்கப்­பட்­டு­வரும் சோத­னைகள் மற்றும் தேடு­தல்­களில் குரு­ணாகல் மாவட்­டத்தில் மட்டும் 356 முஸ்லிம் கிரா­மங்கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.பொலிஸார், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் மற்றும் முப்ப­டை­யினர் இணைந்து முன்­னெ­டுத்­துள்ள இந் நடவடிக்கையின் போது சுமார் 152 பேர் வரியில் கைது செய்யப்பட்­ட­தாக குரு­ணாகல் மாவட்ட உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறினார்.
 
இவர்­களில் 108 பேர் நீதி­மன்­றங்­களில் ஆஜர் செய்­யப்­பட்ட பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், 44 பேர் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வருவதாகவும் அந்த அதி­காரி சுட்­டிக்­க­ட­டினார். அவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்­பி­னர்கள் 8 பேரும் அடங்­கு­வ­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.
மாளி­கா­வத்­தையில் மேலும் கத்­திகள் , வாள்கள் மீட்பு
மாளி­கா­வத்தை, கெத்­த­ரம பகு­தியில் கிணற்றில் இருந்து நேற்றும் கத்­திகள் வாள்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.
நேற்­றைய தினம் 16 வாள்கள், கத்­திகள் மீட்­கப்­பட்­ட­தாக பொலிசார் கூறினர். ஏற்­க­னவே கெத்­தா­ராம விளை­யாட்டு மைதானம் அருகில் உள்ள பள்­ளி­வா­சலை அண்­மித்­துள்ள கிணற்றில் இருந்து நேற்று முன் தினம் 58 வாள்கள், 52 கத்­திகள், மீட்­கப்­பட்­டன. அதன்­படி நேற்று அந்த கிணறு இறைக்­கப்­பட்டு தேடுதல் நடாத்­தப்­பட்­டது. இதன்­போதே 16 வாள்கள் கத்­திகள் மீட்­கப்­பட்­ட­தாக பொலிசார் கூறினர்.
இரா­ஜ­கி­ரி­யவில் மெல­ளவி கைது ராஜ­கி­ரிய நாவல வீதி பகு­தியில் அடிப்­ப­டை­வாத உரைகள் அடங்­கி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஒலிப்ப­தி­வு­க­ளுடன் மெல­ளவி ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படை­யி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
 
குறித்த மெல­ள­வி­யி­ட­மி­ருந்து அடிப்­ப­டை­வாத உரைகள் அடங்கிய 14 ஒலிப்­ப­தி­வு­களும், கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தின் புகைப்ப­டமும் தொலை­பேசி ஒன்றும் மீட்­கப்­பட்­டுள்­ளன. இரு மாதங்­க­ளுக்கு முன்னர் குறித்த மெள­லவி நாவல பகு­தியில் பள்­ளி­வாசல் ஒன்றில் அங்கு வரு­வோ­ருக்கு அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்க முனைந்­ததால் விரட்­டப்­பட்­டவர் எனவும். அதன் பின்னர் அவர் அங்கு ஒரு வீட்டை வாட­கைக்கு எடுத்து அந் நடவடிக்­கை­களை தொடர்ந்­துள்­ள­தா­கவும் பொலிசார் கூறுகின்றனர். இது குறித்து வெலிக்­கடை பொலிசார் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.
 
பாரா­ளு­மன்ற வரைப்­ப­டங்­க­ளுடன் கைதா­ன­வ­ருக்கு மறியல் நீடிப்பு
பாரா­ளு­மன்­றத்­தினுள் பிர­வே­சிப்­ப­தற்­கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்­கொடை – கிரி­மெட்­டி­தென்ன பகு­தியில் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பரின் விளக்­க­ம­றியல் உத்த­ரவு நேற்று நீடிக்­கப்­பட்­டுள்­ளது. பலாங்­கொடை நீதவான் முன்­னி­லையில் சந்­தே­க­நபர் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­தர்வு பிறப்­பிக்­கப்ப்ட்­டுள்­ளது.
 
பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய சந்­தே­க­ந­பரின் வீடு கடந்த ஏபரல் 24 ஆம் திகதி சோதனைக்குட்படுத்தப்பட்டது.இதன்போது, பாராளுமன்றத்திற்குள் பிர­வே­சிப்­ப­தற்­கான திட்ட வரை­படம், 2 ரவைகள், 13 சிம் கார்ட்கள் , 3 கைய­டக்க தொலை­பே­சிகள் மற்றும் கடன் அட்­டைகள் பலவும் கைப்­பற்­றப்­பட்­டன.சந்­தே­க­ந­பரின் வீட்டில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கெப் வண்­டியை சோதனைக்குட்­ப­டுத்­திய போது, குறித்த கெப் வண்­டியில் போலி இலக்கத் தகடு பொருத்­தப்­பட்­டி­ருந்­த­மையும் கண்­ட­றி­யப்­பட்­டது
கிரி­மெட்­டி­தென்ன பகு­தியை சேர்ந்த 27 வய­தான இளைஞர் ஒரு­வரே சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.குளி­யா­பிட்­டியில் கைக்­குண்டு மீட்புகுளி­யா­பிட்டி பகு­தியில் வீடொன்­றினை புனர் நிர்­மாணம் செய்ய, முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ரிடம் பெற்­றுக்­கொன்­ட­தாக கூறப்­படும் மணலில் இருந்து குண்­டொன்று கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. இலங்கை இரா­ணுவம் பயன்­ப­டுத்­தாத ஒரு வகை குண்டே இவ்வாறு கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.
 
குளி­யா­பிட்டி - நாரம்­மல, கணேன்­க­முவ பகு­தியில் உள்ள வீடொன்­றினை புணர் நிர்­மாணம் செய்ய கொள்­வன்வு செய்யப்பட்ட மணலில் இருந்தே இக்­குண்டு கைப்பற்றப்பட்டதாக கூற­பப்­டு­கின்­றது. சம்­பவம் தொடர்பில் நாரம்­மல பொலிசார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில் மணல் வர்த்­தகர் கைது செய்­யப்ப்ட்­டுள்ளார்.
 
விமான நிலைய கட்­டுப்­பா­டு­களில் தளர்வு
விமான நிலை­யத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்கும் அங்­கி­ருந்து வெ ளியே­று­வ­தற்கும் விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுப்­பா­டுகள் சில தளர்த்தப்­பட்­டுள்­ளன.பய­ணிகள் முன்­வைத்த முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய, இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக விமா­னப்­படை பேச்­சாளர் குறூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டார். விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து . வெளியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, நேற்று முன் தினம் இரவு முதல் அமுலாகும் வகையில் வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இனி வழமை போன்று , பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment