இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி ரொஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்காக தேசிய பாதுகாப்பு முறைமையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் உறுப்பினர்கள் தேச எல்லைகள் ஊடாக உட்பிரவேசிப்பதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த 7 ஆம் திகதி முன்வைத்தது,
அவ்வாறான பயங்கரவாத உறுப்பினர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நாடுகளுக்கிடையில் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதே இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களை தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜே.எம்.ஐ எனப்படும் ஜமெதி மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புக்கள் மேற்கொண்டுள்ளனவா? என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான அடிப்படை மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உடன்படிக்கைகளுக்கு சட்டத்தை தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி ரொஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment