Monday, May 6, 2019

நீர் கொழும்பில் பதற்றம் நிலைமையயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ் ஊரடங்கு!

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு பதற்றமான நிலைமயொன்று ஏற்பட்டது. அதனையடுத்து இன்று (06) காலை 7 மணி வரையிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
 
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து நிலைமையயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக குறித்த பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
 
நீர்கொழும்பு, பலகத்துறை, தைக்கா வீதியில்  இருவருக்குடையே இடம்பெற்ற தனிப்பட்ட தகராரே இவ்வாறு இரு சமூக பிரச்சினையாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டுமுள்ளன.
 
தகராறு பெரிதக உருவெடுத்ததில் சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் உள்ளது சம்பவ இடத்தில் தற்போது விசேட அதிரடிப்படை,இலங்கை விமானப்படை, ராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
 
நீர்கொழும்பு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.இதன்போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
முச்சக்கரவண்டி சாரதிகளின் குழுக்களுக்கு இடையிலான வாய்த்தகராறு, முறுகல் நிலையாக மாறி வன்முறையாக வெடித்துள்ளது.இதன்போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அதிரடி படையினர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவினால் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் தற்போது விசேட அதிரடிப்படை, இலங்கை விமானப்படை, இராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment