இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.
பேஸ்புக், வட்சப், வைபர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை மீண்டும் தற்காலிகமாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இன வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்களைப் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment