Monday, May 6, 2019

ஒல்லிக்குளத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தற்கொலை தாரிகளின் பிரதான முகாம் முற்றுகை! video



மட்டக்களப்பு மண்முனை ஒல்லிக்குளம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நேற்று(05.05.2019) ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிடப்பட்ட ஜ.எஸ் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் தற்கொலை தாரிகளின் இடத்தினை நேற்று (05.05.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமாரசிறீ மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சி உட்பட பொலிஸ...் அதிகாரிகள் குறித்த இடத்ததிற்கு சென்று பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு மண்முனை ஒல்லிக்குளம் மதுராபுரத்திற்கு செல்லும் வீதியிலுள்ள பகுதியில் இந்த பயிற்சி முமுகாம் அமைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.யாசீன் பாவா அப்துர் ரஊப் என்பவருக்கு சொந்தமான இந்த இடத்தில் பயிற்சி முகாம் இடம் பெற்றுள்ளதாகவும் மேற்படி அப்துர் ரவூப் என்பவர் கைதுசெய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் முற்றுகையிடப்பற்றப்பட்டதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

இந்த முகாமிலேயே சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலில் பலியான தற்கொலைதாரியான ரிழ்வான் என்பவர் 2017ஆம் ஆண்டு பயிற்சியின்போது குண்டுவெடித்து கைவிரல்களையும் கண் ஒன்றையும் இழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையின் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிருந்தே தற்கொலை தாக்குதலுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் குண்டுகள் இங்கிருந்தே அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
  
குறித்த அமைப்பினை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் அப்துல் ரவூப் என்பவர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முகாமிலேயே சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலில் பலியான தற்கொலைதாரியான ரில்வான் என்பவர் 2017 ஆம் ஆண்டு பயிற்சியின்போது குண்டுவெடித்து கைவிரல்களையும் கண் ஒன்றையும் இழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையின் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிருந்தே தற்கொலை தாக்குதலுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் குண்டுகள் இங்கிருந்தே அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் முகாமில் இருந்து குண்டுகளை அடைத்து கொண்டுசெல்ல பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற குழாய்களே கடந்த 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு அருகில் குண்டுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இங்கிருந்துதான் அங்கு கொண்டுசெல்லப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

இதேவேளை நூறு மீற்றர் தூரத்திற்குள் யாரும் நுழையும்போது அதனைக் கண்டுகொள்ளுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் முகாமில் இருந்து இலகுவில் இரகசியமான முறையில் வெளியேறிச்செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்ததாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை  இடம் பெற்றுவருவதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment