முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்று நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும் ஆராயப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை, கையளிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படை தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் வசந்த கரன்னாகொட, எட்மிரல் ஜயநாத் கொழம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர்களான மஹிந்த பாலசூரிய, சந்ரா பெர்ணான்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களுக்கும் மேற்படி முக்கியஸ்தர்களுக்குமிடையில் சிறு
கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment