யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்,நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் புலிகளின் புகைப்படங்கள் என்பவற்றைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர், சந்தேகத்தின் பேரில் புலிகளுக்கு ஆதரவான இருவரை கைதுசெய்து, கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என்.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.பல்லைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய அலுவலகத்தை சோதனையிடப்பட்ட போது, அதனுள் புலிகளின் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிகளின் உருவ படங்கள் என்பன மீட்கப்பட்டன.
இதேவேளை மாணவர் விடுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , விடுதியில் இருந்து இராணுவத்தினர் அணியும் பாதணி போன்ற தோற்றமுடைய ஒரு சோடி சப்பாத்து , மற்றும் தொலைநோக்கி என்பவற்றையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
புலிகளின் தலைவர் மற்றும் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக புலிகளுக்கு ஆதரவான மாணவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெற நடவடிக்கை எடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். நேற்று காலை கைது செய்யப்பட்ட மாணவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை. இராணுவமே ஈடுபட்டுள்ளது. அதுவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த 25ம் திகதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த இரு புலிகளுக்கு ஆதரவான மாணவர்களையும் இராணுவம் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புலிகளுக்கு ஆதரவான மாணவர் ஒன்றிய அறையிலிருந்து புலிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவை பயங்கரவாத சட்டத்தின் கீழ் முதல்நிலை குற்றங்களாக தோன்றும் காரணத்தினாலும், இராணுவம் பொலிஸாரிடம் ஒப்படைத்த காரணத்தினாலும் இந்த விடயத்தை நீதிமன்றில் பாரப்படுத்துவதாக பொலிஸார் கூறியுள்ளதுடன்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்க சட்டமா அதிபரின் இணக்கம் தேவை. காரணம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவானுக்கு கிடையாது என்றார்.
No comments:
Post a Comment