மாளிகாவத்தை கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு.மாளிகாவத்தை கெத்தாராமை விளையாட்டரங்கிற்கு அருகாமையிலுள்ள பள்ளிவாயலின் அருகிலுள்ள கிணற்றிலிருந்து நேற்று ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த ஆயுதங்களில் 46 வாள்கள், ரவைகள் அடங்கிய துப்பாக்கி ஒன்று, கத்திகள் உள்ளிட்டவை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த ஆயதங்களுடன் ஐஸ் எனப்படும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது....
குறித்த கிணற்றில் மேலும் ஆயுதங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் தொடர்ந்தும் சோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவைத்துள்ளனர்.
குறித்த கிணற்றில் மேலும் ஆயுதங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் தொடர்ந்தும் சோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவைத்துள்ளனர்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் தொடர் தற்கொலை தாக்குதல் நடைபெற்றது. அதனையடுத்து நாடளாவிய ரீதியில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிர தேடுதலின் போது பல்வேறு பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள், வெடி பொருட்கள் என்பன தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment